மீன் பிரியாணி

தேதி: February 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (12 votes)

 

பெரிய மீன் - இரண்டு கிலோ
பாசுமதி அரிசி - ஏழு கப்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்சைமிளகாய்- மூன்று
மல்லி கட்டு - ஒன்று
புதினா கட்டு - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - நான்கு மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு தேக்கரண்டி
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மீன் பிரியாணி மசாலா - மூன்று மேசைக்கரண்டி
கலர் பவுடர் - சிறிது

மீனில் தடவும் மசாலா செய்ய:
மல்லி பொடி - மூன்று மேசைக்கரண்டி
மிளகாய் பொடி - இரண்டு மேசைக்கரண்டி
சோம்பு - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா மூன்று


 

வெங்காயத்தை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். தேவையான இஞ்சி பூண்டையும் எடுத்துக் கொள்ளவும். மீனில் தடவ வேண்டிய மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
மல்லி தழையை பொடியாக நறுக்கவும், புதினாவையும் அதைப் போல் நறுக்கவும் பச்சைமிளகாயை கீறி வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் மீனை சுத்தம் செய்து அரைத்த மசாலாவை அதன் மேல் தடவி அரை மணி நேரம் ஊற விடவும்.
மீன் ஊறியவுடன் ஃப்ரை பேனில் எண்ணெய் ஊற்றி மீனை போடவும். மீன் சிறிது வெந்தவுடன் திருப்பி விடவும். மீனை முறுகலாக வறுக்க கூடாது. சிறிது நேரம் சிவக்கும் வரை வறுத்தால் போதும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து சிறிதளவு வெங்காயத்தை எடுத்து வைத்து கொண்டு மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு முறுகலாக வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் மல்லி, புதினா போட்டு கிளறி விட்டு மல்லி தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா போட்டு உப்பு சிறிது போட்டு கிளறவும்.
வறுத்த மீன் துண்டுகளை அதன் மேல் சிறிது நேரம் வைத்து பின் மீனை எடுத்து விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை கொட்டி நீரில் இருபது நிமிடம் ஊற விடவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எடுத்து வைத்திருந்த சிறிது வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு உப்பு போட்டு முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும்.
வெந்ததும் வதங்கிய கிரேவி மேல் சாதத்தை கொட்டவும். அதன் மேல் கலர் பொடியை சிறிது நீரில் கரைத்து சுற்றிலும் ஊற்றவும். பின் சாதத்தை கிளறி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து அதன் மேல் சாதத்தை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து பதினைந்து நிமிடம் தம்மில் போடவும்.
சூடான மீன் பிரியாணி தயாராகி விட்டது. இதற்கு கொஞ்சம் வேலை அதிகம் தான் ஆனால் டேஸ்ட்டும் அதிகம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் தான் போங்க, மீனும் ஒடையாம, மீன் வாசனையும் பிரியாணில வராம அசத்தலா பண்ணி காட்டி இருக்கீங்க. பிரமாதம்.விருப்ப பட்டியல்ல சேர்த்தாச்சு
:) :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ருக்சானா மேடம் எப்புடி ப இப்படியெல்லாம் சமைக்கிரிங்க!! சூப்பர் வாழ்த்துக்கள்..........

உன்னை போல பிறரையும் நேசி.

ருக்சனா... வருசையா மீன் பிரியாணியா பார்த்துட்டு இருக்கேன்.... செய்யாம விடுறதில்லை எதையும். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ருக்ஸி

நான் அதிகமா மீன் சாப்பிடுவதில்லை.. ஆனா பிரியாணி பார்த்த பின் சப்பிட்டா என்னனு தோனுது ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு எனது நன்றிகள் ..நன்றி

வாழு, வாழவிடு..

சூப்பர்தான் சுகந்தி சாப்பிடால் டேஸ்ட் சூப்பர் செய்து பாருங்க ஈசிதான்
மிக்க நன்றி சுகி பின்னூட்டத்திர்க்கு.நன்றி..

வாழு, வாழவிடு..

ஆமா தேவி மேடம் நீங்களும் சமைத்துப்பாருங்கள் நன்றிமா ..உங்கள்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திர்க்கும் என் இனிய நன்றிகள் நன்றி..

வாழு, வாழவிடு..

ஆமா வனிதாக்கா வரிசையா பிரியாணிதான் ..நீங்களும் செய்துபாருங்கள்
நன்றி வனிதாக்கா உங்கள் வாழ்த்திர்க்கும் பின்னூட்டத்திர்க்கும் நன்றி...

வாழு, வாழவிடு..

என்ன ரம்யா ஏன் மீன் சாப்பிடுவதில்லை ..நல்ல பெரியமீனை பார்த்து
வாங்கி சாப்பிடுங்க நல்லாஇருக்கும் நன்றி ரம்யா வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திர்க்கும் நன்றி..

வாழு, வாழவிடு..

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்சானா..,
ம்ம்ம் பார்க்கும் போதே மீன் பிரியாணி அசத்தலாக இருக்கு.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எப்படி இருக்கீங்க?பொண்ணு எப்படி இருக்கா?

அருமையான,தெளிவான படங்கள்.பார்க்குபோதே எடுத்து சாப்பிடணும் என்று தோணுது.அவ்வளவு சூப்பரா இருக்குது.என் மகன் இந்த படங்கள் பார்த்தவுடன்,அம்மா,மீன் என்று குஷியாகிவிட்டான்.நாளை நான் கண்டிப்பாக மீன் வாங்கி செய்ய வேண்டும்.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

மீன் பிரியாணீ சூப்பர் பா . நான் இதுவரை செய்ததில்லை எப்படியும் செய்யனும் பாக்கும் போதே சாப்பிட தோனுதே

அன்புடன்
ஸ்ரீ

ருக்சனா,

இமா சைவம்தான்... வெரி வெரி செலெக்டிவ் சைவம். ;)) உங்க ரெசிபி.. என்ன சொல்ல!! போட்டோ வேற கலக்கலா இருக்கு. ஈஸ்டர் விடுமுறை சமையல் லிஸ்ட்ல இதையும் சேர்த்து வைக்கிறேன். ;)

இதுக்கு என்ன மீன் நல்லா இருக்கும்?

‍- இமா க்றிஸ்

ருக்சானா சூப்பர்.இன்னும் 5 குரிப்பு வந்துவிட்டால் டார் வாங்கிவிடலாம்.
வாழ்துகல்

ஹசீன்

ருக்சானா மீன் பிரியாணி அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
உன் பொண்ணு பெயர் என்ன?என்ன படிக்கிறாள்?எப்படி இருக்காடா நான் கேட்டேன்னு சொல்லு

அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா நலமா?
உங்கள் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திர்க்கும் என் இனிய நன்றிகள் .
நன்றி அப்சரா...

வாழு, வாழவிடு..

நான் நலம் பொண்ணும் நலம் மீனாள் உங்க மகன் விக்னேஸ் நலமா?
நீங்க நலமா? அப்படியா கண்டிப்பாக செய்து கொடுங்கள் சிறுகுழந்தைகளுக்கு
மீன் மிக நல்லது மிக்க நன்றி மீனாள் உங்கள் வாழ்த்துக்கு..நன்றி

வாழு, வாழவிடு..

வேணுமா பக்கத்தில் இருந்தால் கண்டிப்பாக தருவேன்பா ..
நீங்க ஒருமுறை செய்து பாருங்கள் சரியா..மிக்க நன்றி
உங்கள் பின்னூட்டத்திர்க்கு நன்றி..

வாழு, வாழவிடு..

நலமா இமா? ஓ செலக்டிவ் சைவமா சரி சரி ..
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி மறக்காமல் செய்து பார்க்கனும்
சரியா நன்றி இமா இதுக்கு பெரியமீன்கள் அதிகம் சேர்க்கலாம் கொடுவா,
நெய்மீன், பெரியதுண்டுகளான, மீன்கள் இருந்தால் செய்யலாம் சரியா நன்றி..

வாழு, வாழவிடு..

அப்படியா மிக்க நன்றி ஹசீன் எனக்காக பின்னூட்டம் கொடுத்ததர்க்கு
உங்கள் வாழ்த்துக்கும் என் இனிய நன்றிகள் ...

வாழு, வாழவிடு..

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா என் மகள் பெயர் அஃப்ரா நாலுவயது
இன்னும் ஸ்கூலில் சேர்க்கவில்லை அடுத்தமாதம்தான் சேர்க்கனும்
கண்டிப்பாக சொல்கிறேன்மா. நன்றிம்மா உங்கள் பின்னூட்டத்திர்க்கு

வாழு, வாழவிடு..

//செலக்டிவ் சைவமா// இல்ல... 'ஆனா' போட மறந்து போச்சு. ;) செலெக்டிவ் அசைவம். பதிலுக்கு நன்றி. நீங்க சொன்ன ரெண்டு பெரையும் எனக்குத் தெரியாதே!! ;( சரி... பார்ப்போம்.

‍- இமா க்றிஸ்

ருக்சானா பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. நிச்சயம் சுவை சூப்பரா இருக்கும்னு தெரியுது. இப்ப தான் சமைக்கவே பழகுறேன் இதுலாம் நான் ரொம்ப நாள் கழிச்சு தான் செய்ய முடியும் போல. ஆனால் விடமாட்டேன் செய்துடுவேன் கட்டாயமா.

parkavea supera..........irukku.kandippa sunday meen priyani than......thanks madem

We Are Remembered Only when We Are Needed

நல்ல குறிப்பு

பயத்துல இன்னும் மீன் பிரியாணீ செய்யல ;)

செய்துட்ட்ய் சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆ னா போட மறந்துட்டிங்களா பரவாயில்லை விடுங்க ..
நாந்தான் கொஞ்ச நேரத்துல குழம்பிட்டேன்..
மீன் தெரியவில்லை என்றால் பெரியமீன் துண்டுகள் வாங்கினால்
செய்து பாருங்க சரியா நன்றி...

வாழு, வாழவிடு..

அப்படியா சமையல்ல இப்பதான் கைக்குழந்தையா விரவில் .நடைபழக
வாழ்த்துக்கள் ..நடைபழகியதும் மறக்காமல் செய்துடனும் சரியா .
மிக்க நன்றி பின்னூட்டத்திர்க்கு நன்றி..

வாழு, வாழவிடு..

கண்டிப்ப சண்டே செய்துட்டு சொல்லுங்க சரியா தாமரை மிக்க நன்றி
உங்கள் பின்னூட்டத்திர்க்கு..நன்றி..

வாழு, வாழவிடு..

நானும் இப்படித்தான் பயந்தேன் ஆனால் .முதல் முயற்ச்சியே
தொன்னூறு பர்சண்ட் வெற்றிபா... அதனால் சும்மா செய்து ஜமாய்ச்சுடுங்க
சரியா செய்துட்டு மறக்காம சொல்லுங்க ..நன்றிமா

வாழு, வாழவிடு..

ருக்சானா மேடம்,

நல்ல குறிப்பு மீன் சிதறாம சமைத்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி மேம் உங்களின் பின்னூட்டத்திர்க்கு உங்களின் வாழ்த்திர்க்கும்
என் இனிய நன்றிகள் ..நன்றி

வாழு, வாழவிடு..

சலாம் ருக்சானா உன் மீன் பிரியாணி சூப்பர் எப்பவோ செய்திட்டேன் பதிவுபோட மறந்திட்டேன் சாரிடா நல்ல குறிப்புகுடுத்ததுக்கு நன்றி
(பயந்து கொண்டு செய்தேன் சூப்பரா வந்தது)