யாருக்காவது இப்படிபட்ட அனுபவம் இருந்ததா..??

ஹாய் அறுசுவை தோழிகளே..... யாருக்காவது இப்படிபட்ட அனுபவம் இருந்ததா..?? அல்லது கேள்விப்பட்டிருந்தால்.... சொல்லுங்களே.....ப்ளீஸ்...

எனக்கு தெரிந்த சகோதரிக்கு இந்த மாதம் குழந்தை பிறந்தது ....இப்ப 22 நாள் ஆகுது... அவங்களுக்கு குழந்தை பிறந்த அன்று ஒரு நாள் மட்டும் பீரியட் வந்தது அதுக்கப்புறம் வரவேயில்லை...... அப்புறம் அப்பப்ப வயிறு வலிச்சிட்டே இருந்ததால் டாக்டர் கிட்ட போனாங்க.... டாக்டர் ஸ்கேன் பண்ணி பாத்திட்டு ஒரு ஊசி ஒன்னு போட்டாங்களாம் பீரியட் வாறதுக்கு.... ஆனால் இன்னும் வரல .... வயிறு வலிக்கிறதால ரொம்ப கஸ்டப்படுறா...... ப்ளீஸ் யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களே....

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி...!

நீங்க நலமா?ரொம்பநாளா உங்களை தேடிட்டிருந்தேன்.மன்னிக்கவும்..கடந்த நாட்கள் கொஞ்சம் பிஸியா இருந்ததால் உங்களை தொடர்புகொள்ளமுடியல.குழந்தைகள் நலமா?

உங்களது கேள்விக்கு சரியான பதில்சொல்ல முடியல. அதுதவிர குறிப்பிட்ட சகோதரிக்கு நோர்மல் டெலிவரியா அல்லது சிசேரியனா? பிரசவத்திற்கு பின்னரான பீரியட்ஸ் எல்லோருக்கு ஒரே மாதிரி இருப்பதிலலை. எதற்கும் மீண்டும் மருத்துவரை நாடுவதுதான் நல்லது என நினைக்கிறேன்.

ஹாய் அன்சிகா

நான் நலம் ..... நன்றி.... குழந்தைகளும் நல்லாருக்காங்க...... நீங்க எப்படி இருக்கிறீங்க...? என்னையும் ஞாபகம் வச்சு தேடிருக்கிறீங்க .... மிக்க நன்றி... உங்க பொண்ணு எப்படி இருக்கின்றா....? நானும் கொஞ்சம் பிஸியாயிருந்த அதுதான் எழுத முடியல ...பட் வாரத்தில இரண்டு தடவையாவது அறுசுவைக்கு வருவன்‍.டைம் கிடைக்கிறப்ப வாசிச்சிட்டு போயிடுவன்.!

அந்த சகோதரிக்கு நோர்மல் டெலிவரி தான். முதல்ல இரண்டு பசங்க ....இப்ப ஒரு பொண்ணு... முதல்ல இரண்டு பிள்ளைகளுக்கும் இப்படியிருக்கல.... அதனால் தான் பயப்பிடுறாங்க.....ம்ம் நானும் அப்படித்தான் சொல்லியிருக்கன் டாக்டர் கிட்ட போய் பார்க்க சொல்லி...

ஏனைய அறுசுவை தோழிகளுக்கு இது பற்றி தெரிந்திருந்தால் சொல்லுங்களேன். நன்றி அன்சிகா.

நான் நலம்.பொண்ணுக்குத்தான் உடல்நலம் சரியில்லை.நல்லா சளி வச்சிட்டுது.கஸ்டப்படுறா.நேற்றும் டாக்டரிடம் கொண்டுச்சென்றோம்.இந்த பகுதியில் நாம் உரையாடலாமா என்று தெரியல. உங்களை எப்படி தொடர்புகொள்வது?

ஹாய் அன்சிகா..... என்னுடைய மெயில் ஐடி தர்றன் ..... தொடர்பு கொள்ளுங்கள். : jeen_ravi@hotmail.com ... இப்பொழுது குழந்தைக்கு பரவாயில்லையா....?

தோழி சர்மினி...,நீங்கள் சொல்வதை கேட்க்கும் போது ஆச்சர்யமாகவும்,கஷ்ட்டமாகவும் உள்ளது.
ஆப்ரேஷன் என்றாலாவது நீங்கள் சொல்வது போன்று ஒரு நாளுக்கு அப்புறம் படாமல் இருக்கும்.நார்மல் டெலிவரியில் எனக்கு தெரிந்து இப்படி ஆனதும் கிடையாது.கேள்விப்பட்டதும் கிடையாது.
பாவம் உண்மையிலேயே அந்த சகோதரிக்கு கஷ்ட்டமாக தான் இருக்கும்.
காலம்தாமதிக்காமல் நல்ல மகப்பேறு மருத்துவரை அணுகி சிக்கிச்சை எடுக்க சொல்லுங்கள்.இதிலெல்லாம் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
கர்ப்பபைய்யில் இருக்கும் கசடுகள்,கழிவுகள் வெளியாகாமல் இருப்பதால் தான் வயிறு வலிக்கின்றது.அது வெளியாகாமல் இருப்பது நல்லது கிடையாது.
நல்ல மருத்துவரை அணுகுவதை தவிர வேறு ஏதும் எனக்கு தோண வில்லை பா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா ,

மருத்துவரை பார்க்க‌ சொல்லிருக்கேன். உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி தோழி அப்சரா.

ஹாய் சர்மினி..இதே போன்ற அனுபவத்தை நேரில் கண்டதால் தேடி கண்டுபிடித்து சொல்ல வந்தேன்.

எனக்கு தெரிந்த பெண்ணுக்கு பிரசவமாகி இரண்டு நாளில் நின்று போய் பிறகு ஏழு மாதமாகியும் மாதவிடாயும் வரவில்லை..மட்டுமல்லாது வயிறும் பெருத்து இருபக்கமும் இடுப்பும் பெருத்து பார்க்கவே விகாரமான தோற்றமாகி விட்டாள்..சொன்னால் நம்ப மாட்டீங்க இடுப்பு மட்டும் தனியாக நிற்பது போல இருக்கும் ஆனால் உடம்பு அவ்வளவாக இருக்காது.எல்லா அழுக்குகளும் வயிற்றில் தங்கி சாப்பிடவும் முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு போனது.
அதற்கு ஆயிரத்தெட்டு மருத்துவமும் மருந்தும் சாப்பிட்டும் பலனில்லை..இனி கர்பமோ என்றும் சந்தேகம் எழுந்து அதையும் செக் பன்னுவாள்..அது பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
அதன் பின் கடைசியாக யாரோ சொல்லி ஒரு சாதா வைத்தியரிடம் போய் கேட்க அவர் மருந்து எதுவுமில்லாமல் தினமும் காலை ஒன்பது மணிக்கு உணவும் மாலை ஆறு மணிக்கு உணவும் மட்டும் எடுக்க சொன்னாராம்..இந்த இரு வேளையும் எச்சிலால் உணவை நனைத்து எச்சிலோடு விழுங்க வேண்டும் என்பது மட்டும் முக்கியம்..சாப்பிட்டு ஒரு மணிநஏரத்துக்கு பின் தண்ணீர் குடிக்கலாம்..ஆனால் இந்த இரு வேளை மட்டுமே உணவு...பின் தினமும் காலை ஈர துணியை இடுப்பில் கட்ட வேண்டும் அது காயும் வரை விட்டு பின் எடுத்து விடலாம்..நம்பிக்கை இல்லாமல் தான் செய்ய தொடங்கினாள்..ஆனால் அதன் பின் ஒரே வாரத்தில் தொடங்கிய மாதவிடாய் 15 நாள் நீடித்தது...அந்த 15 நாளில் அவளது இடுப்பு முழுவதும் சுருங்கி வயிறு ஒட்டி விட்டது..இன்று அவளை கண்டு ஆச்சரியப்பட்டு விட்டேன்..உங்களுடம் சொல்லலாம் என வந்தேன்

hi nan arusuvaiku pudhusu ennaku eppadi kallvi kakrathunu tharila please help me soon

rajalakshmi

மேலும் சில பதிவுகள்