சக்தி மசாலா பொடி சந்தேகம் அவசரமாக உதவவும்:

ஹாய் தோழிகளே எனக்கு மல்லிபொடி தீர்ந்து விட்டது நான் இந்தியாவில் இருந்து சக்தி மசாலா, குழம்பிற்கு கொண்டு வர சொல்லி இருக்கிறேன்,சக்தி மல்லிபொடி என்று வாங்குவது நல்லதா இல்லை புளிகுழம்பு,வத்தல் குழம்பு என்று வாங்குவது நல்லதா?அவசரமாக உதவவும் பிளீஸ் தோழிகளே

மல்லிகே மல்லி தீர்ந்து போச்சா ..... மல்லி இல்லாம வசர வேண்டியது தான்

நான் ஆச்சி குழம்பு மிளகாய்த்தூள் வாங்குவேன் பா . அதில் எல்லா குழம்பும் வைக்கலாம் நீங்க ட்ரைப்பன்னி பாருங்க

அன்புடன்
ஸ்ரீ

மல்லி பொடி வாங்குவதே நல்லது,நான் வெஜ் சமைக்கும் போது புளிக்குழம்பு பொடி போட முடியாது.

அமுதா உங்க கிண்டல் எனக்கு ரொம்ப பிடிசிருக்கு,ரொம்ப நன்றி தோழிகளே,நான் குழம்பு பொடிகள் தான் சக்தி மசாலா உபயோகித்து இருக்கிறேன்,சக்தி மல்லி பொடி நல்லா இருக்குமா,யாரிடமாவது கேட்டாவது சொல்லுங்கப்பா நான் இந்தியாவில் இருந்தால் நானே விசாரிச்சுக்குவேன்.நீங்க தான் பிரண்ட்ஸ் ஹெல்ப் பண்ணனும்,மல்லிபொடி நல்லா இருக்குமா?இல்லை குழம்பு பொடி நல்ல இருக்குமான்னு?ரொம்ப அவசரம் தோழிகளே

மல்லி... சக்தி மல்லி பொடி நல்லாவே இருக்கும். நான் அசைவத்துக்கு தனியா போட நிறைய வாங்குவதுண்டு. கவலைபடாம கேட்டு வாங்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு மல்லித்தூள், மிளகாய்த்தூள் மிஃஸிங்க் அளவு தெரியும்னா மல்லித்தூள் வாங்குங்க இல்லன்னா ஊரிலிருந்து மசாலா வரும்வரை கரம்(garam masala) மசாலாவும்(சிக்கன்,மட்டன்)மீன்கறி மசாலாவும்(மீன் குழம்பு மற்றும் புளிக்குழம்பு(நான் கூட அதுதான் யூஸ் பண்றேன்)) வாங்கிக்குங்க....
:)

ஹாய் தேன்மொழி,
உங்க பதிலுக்கு நன்றி,ஆனால் நீங்க சொல்றது எனக்கு புரியலை,சக்தி மல்லிபொடி,மிளகாய் பொடி மிக்ஸிங் அளவு கேட்குறீங்களா?சக்தி மல்லிபொடி வாங்க வேண்டாம்னு சொல்றீங்களா?இல்லை
சக்தி மல்லிபொடி வாங்குங்கன்னு சொல்லுறீங்களா?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க?

உங்களுக்கு மிக்ஸ் பண்ற அளவுக்கு சமையல் தெரியும்னா இரண்டையும்(சக்தி மல்லித்தூள், சக்தி மிளகாய்தூள்)தனியாக வாங்கி அட்ஜஸ்ட் பண்ணுங்க...
இல்லைன்னா அவசரத்துக்கு சக்தி மீன்கறி மசாலா மற்றும் சக்தி கரம் மசாலா வாங்கிக்குங்க...
இன்னும் குழப்பிட்டேனா!!!!!!!!!!!!?????????????????

:)

hai friend yalamasala compare panumpothu sakthi thanbest nan yalamasalavum sakthithan usepanaran chili 1spoona,mali2spoon,nonveg chekana eruntha chicken masala2spoon,vathakuzmbu masala is the best

மேலும் சில பதிவுகள்