OHP ஷீட்டில் பட்டர்ஃப்ளை செய்வது எப்படி?

தேதி: February 24, 2011

4
Average: 4 (16 votes)

 

OHP ஷீட் - 1/2 ஷீட்
க்ளாஸ் கலர்
கருப்புநிற லைனர்
கத்தரிக்கோல்
க்ளே
பெவிக்கால்
கிலிட்டர்ஸ்
ஃபேப்பரிக் பெயிண்ட் - மஞ்சள், கருப்புநிறம்
கோல்டுநிற கம்பி
சார்ட் பேப்பரில் வரைந்த பட்டர்ஃப்ளை படம் - ஒன்று

 

தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும். படத்தில் உள்ளது போல் சார்ட் பேப்பரில் பட்டர்ஃப்ளை படத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும்.
சார்ட் பேப்பரில் வெட்டிய பட்டர்ஃப்ளையை Ohp ஷீட்டில் வைத்து மார்க்கரால் அதன் வடிவத்தை வரைந்து நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
இதேப்போல் பட்டர்ஃப்ளையை Ohp ஷீட்டில் மூன்று அளவுகளில் நறுக்கி வைக்கவும். பெரியது, நடுத்தர, சிறிய அளவுகளில் படத்தில் உள்ளது போல் நறுக்கி வைக்கவும்.
பட்டர்ஃப்ளையின் ஓரத்தில் கருப்புநிற லைனரால் அவுட்லைன் போன்று வரைந்துக் கொள்ளவும்.
மூன்று பட்டர்ஃப்ளையிலும் உங்களுக்கு பிடித்த க்ளாஸ் கலரைக் கொடுத்து நன்கு காயவிடவும். காண்ட்ராஸ்ட் கலராக கொடுத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இப்போது அதன் நடுவில் பெவிக்கால் வைத்து க்ளேயை மெல்லியதாக நீளவடிவில் திரட்டி உடல் போன்று வைக்கவும். க்ளேயை மிளகு அளவு எடுத்து உருண்டையாகி அதன் தலைப்போன்று வைக்கவும். பின்னர் கோல்டுநிற கம்பியை உணர் கொம்புப்போல் செய்து அதன் தலைப்பகுதியில் சொருகி விடவும். உடல் பகுதியில் கருப்புநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடிக்கவும்.
மூன்று பட்டர்ஃப்ளையின் ஒரத்திலும் கோல்டுநிற கிலிட்டர்ஸால் மீண்டும் ஒரு அவுட்லைன் போன்று கொடுக்கவும். அதன் உடல் பகுதியிலும் சின்ன வளைவுகள் வரையவும். தலைக்கு மஞ்சள்நிற பெயிண்ட் செய்து கருப்புநிற பெயிண்டால் இரண்டு புள்ளிகள் இடைவெளிவிட்டு கண்கள் போன்று வைக்கவும்.
பட்டர்ஃப்ளையின் பின்புறத்திலும் க்ளேயை மெல்லியதாக திரட்டி பெவிக்கால் தடவி ஒட்டி வைக்கவும்.
Ohp ஷீட்டில் செய்த அழகான பட்டர்ஃப்ளை ரெடி. இதனை ஃப்ரிட்ஜ், ரூம் கதவு, சுவற்றில் ஒட்டி அலங்கரிக்கலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் Ohp ஷீட்டை கொண்டு பட்டர்ஃப்ளை செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

hai mam .... gud afnon butterfly romba arumaia iruku mam.... nan inike vetla poi senji paka poren... paka romba easya iruku seiyavum easya tha irukumnu ninaikiren... instant clayku pathil m.seal use panalamnu iruken... senjavudan marupadium karuthu solren mam... vaalthukal mam...anna pappa elam sowkiyama...
By
D.Kodi

செண்பகா... ரொம்ப சூப்பர். நான் இது போல் ஒன்றை செய்ய யோசிச்சுகிட்டு இருந்தேன், எதை பயன்படுத்துவது, எப்படி வரும் என்று சரியான ஐடியா இல்லை. இப்போ உங்களுடையதை பார்த்ததும் நான் செய்ய நினைச்சதுக்கு ஐடியா கிடைச்சுடுச்சு. ரொம்ப சூப்பர் செண்பகா. நல்ல குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் பொருட்காட்ச்சில இந்த பட்டர்ஃப்ளை பாத்து, வாங்கி வீட்டுல ஒட்டி இருக்கேன். இப்ப தான தெரியுது, அது எல்லாம் நாகபட்டினம்ல ல இருந்து தான் பேக்டரி இருக்குன்னு. :) :) :) எப்பவும் போல ரொம்ப சூப்பர் ஹ இருக்கு அண்ணி..... தொடர்ந்து கலக்குங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஐ..............ரொம்ப அழக இருக்கு அண்ணி.வாழ்த்துக்கள்..........

உன்னை போல பிறரையும் நேசி.

அண்ணி சூப்பர் ,,,, நானும் ட்ரை பண்ணி பாக்குறன்,,,,, அழகா பெயிண்ட் பண்ணி இருக்கீங்க ,,,, வாழ்த்துக்கள்

செண்பகா அண்ணி நலமா மகள் நலமா?..
என்ன சூப்பர் பட்டர்ஃப்ளைஸ் கருப்பு பேக்கிரவுண்டில் மின்னுது
அழகான டிஸ்பிளே....
வாழ்த்துக்கள் ...நன்றி

வாழு, வாழவிடு..

beautyful butterfly.you are great madam.i like your butterfly very much.keep it up.with regards.g.gomathi.

அழகா இருக்கு பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சி ஷேப்ல ஒரு புக் மார்க் பண்ணணும். ஐடியா கொடுத்ததுக்கு நன்றி செண்பகா.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

super senbaga medame, super butterfly.waaoh!

shagila

I like u very much u r butterfly. Keep it up................

பொற்கொடி, வனிதா, சுகந்தி, ருக்சானா, தேவி, லதா, இமாம்மா, கோமதி, ஷாலி, ஸ்வேதா ஸ்ரீ பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

senbagababu

ரொம்ப அழகா இருக்கு ,வாழ்த்துக்கள் செண்பகா...

VERY NICE & THANKS

Ellam sila kalam

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta