சோம்பறி தனம் நீங்க உதவுங்கள் please

சோம்பறி தனம் நீங்க உதவுங்கள் please. எனக்கு கல்யாணம் ஆகி 6 மாதகள் ஆகிறது. திருமனதிற்கு முன்பு வரை பணிசெய்து வந்தேன். திருமணம் முடித்தவுடன் தனியாக வந்துவீடோம். காலை 4 .30 எழூந்து கணவரை 6 மணிக்கு வேலை-கு அனுப்பி விடுவேன். பிறகு 11 மணிக்குத்தான் எழூந்து வீட்டு பணிகளை செய்வேன்(இப்போது நான் வேலை-கு செல்வது இல்லை). பெரும்பாலும் காலை எதுவும் சாபிடோவது இல்லை. என் அம்மா வீட்டில் என்னை எல்லரும் சுறுசுறுப்பு என்பார்கள். அனால் இப்போது தலைகீழ். இதில் இருந்து மீழ உதவுங்கள் ப்ளீஸ்.

நித்யா.. கணவரை ஆபிஸ் அனுப்பி விட்டு மீண்டும் தூங்காமல் , அப்படியே திரும்பி வ்ரும் போது அன்றைய பத்திரிகையை கையில் எடுத்துக்கொள்ளுங்கள், சோம்பல் கொஞ்சம் குறையும்.தோட்டத்துப்பூக்களை சிறிது எட்டிப்பாருங்கள் சுறுசுறுப்பு தானாய் வரும். இப்படிக்குப்பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி...
இன்று காலை கம்ப்யூட்டர்-இல் ஆரம்பிக்கிறேன்

வாழ்க வளமுடன்

நித்யா நீங்கள் கம்பியூட்டருக்கு முன்னால் என்றால் இந்த வெப்பைப் பார்க்கவும்.
www.maggona.blogspot.com

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்களை போல் தான் நானும் . அதாவது திருமணமானவுடன் தனியாக வந்துவிட்டோம் . அதுவரை குடும்பத்தாருடன் இருந்துவிட்டு தனியாக இருக்க பிடிக்காத காரணத்தால் இவ்வாறு ஏற்படுவது .. இதை போக்குவதற்கு உங்கள் கணவருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுங்கள் . வேறு உங்களுக்கு பிடித்த நபர்களுடன் பேசும்பொழுது நம்மை அறியாமலேயே உற்சாகம் வந்து வீட்டு வேலைகளை முடித்துவிடுவோம் . தொலைக்காட்சி அல்லது ரேடியோ வீட்டில் போட்டிருந்தால் , வீட்டில் யாரோ நம்முடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு வரும் . தனிமையை மறப்பீர்கள் . மாலையில் கணவர் வந்தவுடன் தினமும் எங்காவது வெளியில் செல்லுங்கள் . வீட்டிலேயே முடங்கிய உணர்வு இருக்காது . அடுத்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும் .

உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி...
இன்று இன்னும் தூங்கவில்லை... என் கணவர் Civil engineer - ஆக இருப்பதால் அவர் மிகவும் கலைத்து தான் வீட்டிற்கு வருவார்.
அவரை தொந்தரவு செய்ய மனம் இல்லை :(

வாழ்க வளமுடன்

மாலையில் அருகில் ஏதேனும் பார்க் இருந்தால் செல்லுங்கள். உங்களுக்கு கைவினையில் ஆர்வம் இருந்தால் நம் அறுசுவையில் பார்த்து எதாவது புதுசாக முயற்சி செய்யுங்கள் .

நீங்க ஏதாச்சும் க்ளாஸ் போகலாம் பா டைலரிங், எம்ராய்டரி, உங்களுக்கு யுஸ் ஆகர ஏதாச்சும் கத்துக்கலாமே அப்ப உங்களுக்கு சோம்பேரி தனம் வராமல் இருக்கும் வீட்டில் எவ்வளவு நேரம் தனியாக இருப்பது அப்படி இருந்தால் யாருக்கும் சோம்பேரி தனம் வரும் பா. நீங்க உங்களை இப்படி மாற்றிப்பாருங்கள்

அன்புடன்
ஸ்ரீ

நித்தியா உங்களுக்கு கத்துக்க ஏதாவது ஆசையிருந்தால் இப்பவே கத்துக்குங்க,ஏன்னா பிறகு குழந்தைகள் வந்த பிறகு இதற்க்கு நேரமே இருக்காது.குழந்தைகளை கவனிக்கவே சரியா இருக்கும்.(இது என் அனுபவம்) அப்புரம் ஏதாவது ரொம்ப ஃபாஸ்டா இருக்குகிற பாட்டைக் கேளுங்க தானாவகவே உற்சாகம் வரும்(மெலோடிஸ் வேண்டாம்),கல்யாண சிடி பாருங்க அது தனிமையை போக்கும்.

வாழு இல்லை வாழவிடு

தோழி நித்தியா நீங்கள் மேலும் உங்கள் கல்வி தகுதியை உயர்த்த உங்களது படிப்பிற்கு உகந்த மே il படிப்பை படிங்கள் .உங்களது எதிர்காலத்துக்கு பெரிதாய் உதவும். சௌமியன்

try any craft works

மேலும் சில பதிவுகள்