யோகர்ட் சிக்கன்

தேதி: February 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

கோழி - இரண்டு பெரிய துண்டுகள்
தயிர் - ஒரு கப்
தக்காளி - இரண்டு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி
மல்லி தழை - கொஞ்சம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

யோகர்ட் சிக்கன் செய்வதற்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்.
முதலில் தயிருடன் தக்காளி சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சட்டியில் கோழியை போட்டு அதில் இஞ்சி பூண்டு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி போட்டு உப்பு சேர்த்து அரைத்த தயிர் கலவையும் சேர்த்து சிறிது எண்ணெயும் ஊற்றி கலந்து அடுப்பில் வைக்கவும்.
கோழி நன்கு வெந்து கிரேவி கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பை நிறுத்தவும்.
மற்றொரு சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கிரேவியை போட்டு மல்லி இழை தூவி அடுப்பை அணைக்கவும்.(கறிவேப்பிலை போட்டும் தாளிக்கலாம்)..
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்ல காம்பினேஷனாக இருக்கும். யோகர்ட் சிக்கன் ரெடி. டேஸ்ட் அருமையாக இருக்கும்..


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சூப்பர்,சீக்கிரமே செஞ்சுடுரேன்.வாழ்த்துக்கள்.

ருக்சானா கிரேவி சூப்பர். படமும் தெளிவா இருக்கு. சீக்கிரம் கூட்டாஞ்சோறில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள். கொஞ்சமா பொருள வைச்சு சூப்பரா செஞ்சுடலாம் போல. 100 கிராம் கோழிக்கு இந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதுமா ருக்ஸ்.

ருக்சானா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்டா

சலாம் ருக்சானா...,
சிம்பிள் மற்றும் சூப்பரான குறிப்பாக கொடுத்திருக்கீங்க...
விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்.
முடிந்த போது செய்து பார்த்துட்டு சொல்றேன் ருக்சானா...
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சூப்பர் ருக்சானா.படங்கள் தெளிவா இருக்குது.வாழ்த்துக்கள்.சிக்கன் -ல ஒரு வித்தியாசமான டிஷ் உங்கள் மூலமா கத்துக்கிட்டோம்.ரொம்ப சிம்பிள் டிஷ் மற்றும் அருமையான டிஷ் கொடுத்ததற்கு என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

Ruksanna,

wow... super dish..! simple and tasty! ideal for bachelors, good work keep it up.

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்க்ஷானா!
mmm..........
பார்க்கவே சாப்பிடனும் போல ஆசையா இருக்கு

அன்புடன்

றஹீமா பைஷால்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு என் அன்பான நன்றிகள் நன்றி..

வாழு, வாழவிடு..

எனது குறிப்பை பாராட்டிய தோழிகளுக்கு என் இனிய நன்றிகள் .நன்றி

வாழு, வாழவிடு..

நன்றி வினோஜா உங்கள் பின்னூட்டத்திர்க்கும் வாழ்த்திர்க்கும்.
நூறுகிராம் கம்மியாக இருக்கு நீங்க கால்கிலோ கோழி சேர்த்துக்கங்க .சரியா
நன்றி.நூறுகிராம் கோழின்னா கொஞ்சம் இந்த பொருட்களின் அளவை குறைத்து
கொள்ளவும்...

வாழு, வாழவிடு..

அலைக்குமுஸ்ஸலாம் ரஹீமா ..வாங்க கண்டிப்பா செய்து தருகிறேன்
மிக்க நன்றிமா உங்கள் பின்னூட்டத்திர்க்கு..நன்றி

வாழு, வாழவிடு..

ருக்ஸி

நல்ல மைல்டான சூப்பர் குறிப்பு.. இன்னிக்கே செய்துடறேன்.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சலாம் ருக்ஸானா ... நலமா ? மிகவும் எளிதான மற்றும் சுவையான குறிப்பு .. விரைவில் செய்துடறேன் .. வாழ்த்துக்கள் ..!!

Express Yourself .....

நல்ல குறிப்பு,எளிதாக இருக்கு வாழ்த்துக்கள் !!

சீக்கிரமா செய்துட்டு மறக்காமல் பதிவிடனும் சரியா உங்கள் வாழ்த்திர்க்கும்
என் இனிய நன்றிகள்..

வாழு, வாழவிடு..

மிக்க நன்றி க்ஷாக்கியா உங்களின் வாழ்த்திர்க்கும் என் இனிய நன்றிகள்
கண்டிப்பா செய்து பாருங்கள் நன்றி...

வாழு, வாழவிடு..

நன்றி கல்பனா உங்களின் வாழ்த்திர்க்கு என் நன்றிகள்..

வாழு, வாழவிடு..

பிரமாதம், தயிர் சேர்த்தாலே டேஸ்ட் பட்டைய கிளப்பும். கண்டிப்பா இதுவும் நல்ல இருக்கும்ன்னு பாத்தாலே தெரியுது. கலக்குங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ருக்சானா யோகர்ட் சிக்கன் மிக எளிமையா இருக்கு கிரேவி சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன் வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ருக்ஸானா..
யோகார்ட் சிக்கன் செய்துப் பார்தேன்.
அவ்வளவு அருமையாக இருந்தது...
நன்றி + வாழ்துக்கள்..

ஹசீன்

ருக்ஸி

இன்னைக்கு உங்க டிஷ் தான் செய்தேன்.. ரொம்ப வித்தியாசமா நல்லா இருந்தது. தேங்க்ஸ்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பின்னூட்டம் அளித்த தோழிகளுக்கு என் இனிய நன்றிகள் .
ஹசீன் செய்தீர்களா மிக்க நன்றி ஹசீன் ..
ரம்யா நீங்களும் செய்தீர்களா உங்களுக்கும் என் இனிய நன்றிகள் ..

வாழு, வாழவிடு..

hello ruksana i cooked yogurt chicken. it is very tasty. thank you

ஹாய் ருக்சானா அஸ்ஸலாமு அழைக்கும் உங்க யோகட் சிக்கன் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது மிக நன்றி

vanakkam Ruksanamammu nan samaithu parthen migaum testy aga irunthathu en wife paratinal anaithu paratukkalum unggaluku sontham