கிர்ணிபழம் ,பூசனிவிதை ஆங்கிலத்தில் பெயர்..?

அருசுவை தோழிகளே,

கிர்ணிபழம் ,பூசனிவிதை ஆங்கிலத்தில் பெயர் தெரிந்தால் தயவு செய்து பதில் கூரவும்.

மிக்க நன்றி
Keerthisvary/Malaysia

கீர்த்தி கிர்னிபழம் ஆங்கிலத்தில் cantaloupe. பூசணிவிதைக்கு சரியாக தெரியலைபா pumpkin seed ஆக இருக்காலம்னு நினைக்கிறேன். மற்ற தோழிகளும் சொல்லுவாங்க

பூசனிவிதை - pumpkin seed

கிர்ணிபழம் - cantaloupe

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

யாழினிமுகில் மற்றும் ரேவதி,

உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Keerthi

Keerthi

நன்றி எல்லாம் வேண்டாம்பா உங்களுக்கு இது உபயோகமா இருந்தா சரிப்பா. அதோடு இன்னொரு விஷயம் சொன்ன கோவிச்சுக்க வேண்டாம்பா. இப்படி ஏதாவது சில வார்த்தைகளுக்கு தெரிந்துக் கொள்வதற்காகலாம் ஒரு இழை தொடங்க வேண்டாமே சின்ன சின்ன சந்தேகம்னு ஒரு பகுதி இருக்கு அதிலேயே கேட்டிருக்கலாமே. இனிமேல் ஏதேனும் சந்தேகம் என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட தலைப்பு இருக்கானு பார்த்துட்டு ஒரு புது இழை ஆரம்பிங்கபா. தவறாக நினைக்கவேண்டாம்பா.

யாழினிமுகில்,

மன்னிக்கவும் .அவசரத்தில் ஒரு இழையை தொடங்கி விட்டேன்.
இனிமேல் நீங்கள் கூறிய இழையை தொடங்குகின்றேன்.

Keerthi

Keerthi

கீர்த்தி அச்சச்சோ மன்னிப்பெல்லாம் வேண்டாம்பா. இது நமது தளம் அதற்காக தான் சொன்னேன். நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லலாம். இப்படி சின்ன சின்ன இழைகள் குறைந்த பதிவுகளுடன் இருந்தால் மற்ற இழைகள் அடியில் போய் விடுமே என்பதற்காக சொன்னேன்பா தவறாக நினைச்சுட்டீங்களா ரொம்ப சாரிப்பா.

அருசுவை தோழிகளே வணக்கம்,

அத்திப்பழம் இதை ஆங்கிலத்தில் பெயர் தெரிந்தால் கூறவும்.

மிக்க நன்றி.

Keerthisvary

Keerthi

ஆங்கிலத்தில் ஃபிக் (fig)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்