<!--break-->ஹாய், தோழிகளே..அனைவருக்கும் வணக்கம்.
எனக்கு கொஞ்சம் சந்தேகம்.. என் சந்தேகத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்.எனக்கு ஜனவரி 20 ஆம் திகதி period வந்தது..
அதன் பிறகு பெப்ரவரி 21 brown colour ல லேசா period வந்தது..
அது காலையில் மட்டும்தான் அப்படி இருந்தது.அதன் பிறகு இல்லை.
மறுநாள் நான் urine test எடுத்து பார்த்தேன்..
Positive என்று காண்பித்தது...அதன் பிறகு டாக்டர் கிட்ட சென்றேன்
அவரும் test எடுத்து பார்த்து positive காமிக்குது. 1 மாதம்தான் ஆகரதுனால இன்னும் 1 வாரம் கழித்து மீண்டும் வர சொன்னார்.ஆனால் நான் வீட்டில் எடுத்த டெஸ்ட் இல் கொஞ்சம் திக் ஆக காண்பித்தது....நான் மீண்டும் இன்றைக்கு urine test எடுத்து பார்த்தேன்..ஆனால் அன்றைய விட இன்றைக்கு இன்னும் லேசாகத்தான் காண்பித்தது..காலையில் brown colour-la கொஞ்சமாக period வந்தது..
அதன் பிறகு இல்லை..அப்புறம் இடுப்பு அப்பப்போ வலிக்குது.அடி வயிறும் லேசாக வலிக்குது.எனக்கு கவலையாக இருக்குது. எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகி விட்டன..ப்ளீஸ் தோழிகளே எனக்கு கொஞ்சம் உதவுங்கள்..உங்கள் பதிலுக்காக
காத்திருக்கிறேன்..
ஹாய் ப்ரேமிதா
ஹாய் ப்ரேமிதா முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . தயவு செய்து எதையும் நினைத்து வருந்தாதீர்கள் கடவுளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் . வெயிட் தூக்காதீர்கள் பெட் ரெஸ்ட் எடுங்க அப்படியும் உங்கள் மனது கேக்கவில்லை என்றால் டாக்ட்டரிடம் கூருங்கள்.
அன்புடன்
ஸ்ரீ
ஸ்ரீமதி கதிர் அவர்களே...
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க ஸ்ரீமதி கதிர் அவர்களே..
நீங்கள் சொன்ன மாதிரியே செய்கிறேன்..இன்றைக்கு தான் டாக்டரும் வர சொல்லி இருந்தார்.. இருந்தாலும் என் மனம் பட படவென இருக்கு..
ப்ரேமிதா
பிரேமா தயவு செய்து நீங்கள் எதையும் நினைத்து வருத்த படாதீர்கள். இந்த நேரத்தில் தான் நீங்கள் முகவும் சந்தோசமாக இருக்க வேண்டும். நல்ல விஷயம் தான் நீங்கள் positiveவாக நினைத்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். பெண்களுக்கு தைரியம் கண்டிப்பாக வேண்டும். இத்தனை நாள் கழித்து நல்ல செய்தி கிடைத்திருகின்றது பயபடதீர்கள். நீங்கள் நல்ல ரெஸ்ட் எடுக்கணும். எந்த வேலையும் அதிகமாக செய்யாதீர்கள். அதிக பளு தூகதீர்கள். நல்ல விசயமாக தான் இருக்கும். சீக்கிரம் treat வையுங்கள்
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
premitha
எனதன்பு சினேகிதி ...சந்தோசமாக இருங்கள்...ஒன்றும் இருக்காது உங்களுக்கு பாசிடிவேதானே....கவலைவேண்டாம்..உங்களுக்கு ஸ்கேன் எடுக்கசொல்லுவார்கள் நாற்பத்தி ஐந்துநாள் கழித்து அதுவரை நீங்கள் படியேறும்போது மெதுவாக ,நடக்கும்போது மெதுவாக ,எந்த பாரமும் தூக்காமல்...குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல்(intercourse or family contact)இதுரொம்ப முக்கியம் ...இப்படி நீங்கள் இருக்கவேண்டும்....கண்டிப்பாக நல்லதே நடக்கும்...வாழ்த்துக்கள்....
அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...
Thanks....Revathy and Dhanaganesh
நன்றிங்க ரேவதி...மற்றும் தனகணேஷ்..உங்கள் இருவரின் பதில்கலும் எனக்கு மகிழ்ச்சியும்,நம்பிக்கையும் தந்துள்ளது..சிரமம் பாராமல் என் கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
Enaku tamila type pana
Enaku tamila type pana theyriyala but don't worry pls
Enaku tamila type pana
Enaku tamila type pana theyriyala but don't worry pls
கவலையாக இருக்கிறது...........
ஹாய் தோழிகளே...
நீங்கள் அனைவரும் தந்த பதில்னால் நான் நம்பிக்கையோடு இருந்தேன்..ஆனால் கடவுள் அந்த நம்பிக்கையை எனக்கு நீடிக்க விடவில்லை..இன்று எனக்கு miscarriage ஆகிவிட்டது..எனக்கு ஒரே கவலையாக இருக்குது..என் கணவரை பார்க்கும் பொழுது அழுகையா வருது..கடவுள் எப்பொழுதுதான் கண் திறப்பார் என்று தெரியவில்லை...
Hi premi down't worry epa
Hi premi down't worry epa neenga feel pana unga helth romba pathikum so first feel panathenga my sister kuda ungala pola tha erunthanga epa 6months consiva eruganga avangalukum 3years aachi so miscarring anaa udane papa neekum so neega first hospital ku pnga helth pathukunga manasuku pedicha swamiya vazhipadunga neegale solla porenga parunga na conciva eruken nu.
கவலை வேண்டாம் தோழி premitha -சௌமியன்
தோழி premitha கவலை வேண்டாம் .எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள் நல்ல முறை இல் மீண்டும் தாய்மை அடைவிர்கள்.மருத்துவர் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் .வாழ்வு இனிக்க என் பிரார்த்தனைகள்.சௌமியன்