காலில் வெடிப்பை அகற்ற

தோழிகளுக்கு என் வணக்கம். எனக்கும் எனது மனைவிக்கும் காலில் vaydipu உள்ளது. அது போகவும் மறுபடி வராமல் தடுக்கவும் எதாவது குறிப்பு கொடுங்கள் உதவியாய் இருக்கும் .சௌமியன்

ஹாய்..

வெடிப்பு நிறைய இருந்தால் தோழிகள் சொன்னது போல் மெட்டல் ஸ்ரப்பர் கொண்டு தேயுங்கள்.வலிக்காது...வெடித்து நிற்கும் தோலை சுரண்டி எடுத்துவிடும். கண்டிப்பாக வலிக்காது.தினமும் குளிக்கும்போது தேய்க்கலாம்.

லேசான வெடிப்பு என்றால் ப்யூமிஸ் ஸ்டோன் போதுமானது.மீண்டும் வராமலிருக்க தொடர்ந்து தேய்த்து குளிக்கவும். மெட்டல் ஸ்க்ரப்பர் ஒரு பக்கமும் ப்யூமிஸ் ஸ்டோன் ஒரு பக்கமுமாக கைப்பிடி வைத்து கிடைக்கிறது. பாட்டா ஷோரூம்களில் கிடைக்கும்.

க்ரீம் அல்லது மாய்ஸ்ச்ராய்சிங் க்ரீம் போட சொல்வது பாதம் ஈரப்பதத்தோடு இருப்பதற்காக...வெடிப்பு சீக்கிரம் மறையும். அதன் பிறகு தினமும் போட வேண்டியது இல்லை.. ஒருவாரம், 10 நாள் ஃபூட் க்ரீம் காலை குளித்ததும், பின் இரவும் யூஸ் பண்ணி பாருங்கள். நன்கு குறைய ஆரம்பித்திருக்கும். பிறகு குளிக்கும்போது க்ளீன் செய்தால் போதுமானது.

நன்றி.
கவிதாசிவகுமார்.

anbe sivam

தோழிகளுக்கு வணக்கம் நானும் என் மனைவியும் ரெண்டு நாளா மெட்டல் scurubber பயன் படுத்தி வருகிறோம் .காலில் வெடிப்pu சிறிது குறைந்து உள்ளது. இன்று லெமன் இல் காலை சிறிது நேராம் வைத்து scrubb செய்ய போறோம் .கால் வலி குறைந்து உள்ளது .ஆலோசனை சொன்ன அத்தனை அன்பு தோழிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றிகள் .மகிழ்வுடன் சௌமியன்

மேலும் சில பதிவுகள்