வீட்டைக் கட்டிப் பார்

நான் தேடி பாத்தாச்சு எனக்கு எதுவும் சிக்கலை..பழசு சில இழைகளில் பேசின நியாபகம் உண்டு தேடி கண்டுபிடிக்க முடியவில்லை..

என் கேள்வி இது தான்..நமக்கு வசிக்க வீடு கட்ட வேண்டுமெனில் எதையெல்லாம் செய்யலாம் செய்யக் கூடாது..மற்றும் பலரும் வீடு கட்டியபின் இதை செய்யலையே இதை இப்படி செய்திருக்கலாம் என்று நொந்து கொள்வார்கள்..அது போன்ற ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுப்பறை,குளியலறை,படுக்கையறை போன்ற இடங்களில் எதெது செய்ததால் உங்களுக்கு வசதியாக இருந்தது மற்றும் செய்யாமல் விட்டதால் சிரமமானது எதெது என்று சொல்லி தந்தால் உபயோகமாக இருக்கும்

மேலும் வசதியான வீடு பட்ஜெட் குறைந்த வீடு என்றில்லாமல் எப்படிப்பட்ட சவுகரியங்களாயினும் சொல்லலாம்..எனது இப்போதைய கன்டிஷன் ஒன்னே ஒன்னு கிச்சனிலும் ஏ சி வைக்க வேண்டுமென்பது..ஊரில் எல்லாம் போனால் விருந்தினர்கள் அதிகம்..வேக வேக சமைப்பதற்கு சில்லென ஃப்ரெஷ்ஷாக சந்தோஷமாக சமைக்கலாம்..
இனி உங்கள் யோசனைகளுக்காக காத்திருக்கிறேன்

girls??

in your kitchen you fixed more than four switch plug point. one is useful to fridge, second one useful to grindar, mixe. third one useful to ovan, and water dispenser. you fixed one small stainless steel stand .this stand useful to keep your kitchen cloth . near your kitchen you will make small utility portion you will store your washing machine/ dish wsher. in toilet room you fixed one stainless stell stand in wall behind the toilet. it very useful to old person. this stand avoid mor e bath room fraction/injury.with regards.g.gomathi.

தேங்க்ஸ் தாளிகா இந்த இழை ஆரம்பித்ததற்கு...நாங்க இப்ப வீடு கட்டிட்டு இருக்கோம்...நிறைய குழப்பங்கள் இருக்கு....இங்க friends என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்...எனக்கு கிட்சென் கொஞ்சம் சின்னதாத்தான் வருது(12*6) ஒப்பென் கிட்சென் பிளான் பண்ணிருக்கோம்....சென்னைல மாடுலர் கிட்சென் ரேட் எந்த ரேஞ்சுல இருக்கும்னு யாருக்காது தெரிஞ்சா சொல்லுங்கப்பா...யாரவது வாங்கிருந்தா (தாம்பரம் பக்கத்துல)எங்க வாங்குனா நல்ல இருக்கும்னு சஜஷன் குடுங்க...

இதுவரை எங்குமே நான் படிக்காத யாரும் சொல்லாத ஒரு குறிப்பை தந்திருக்கிறீர்கள்..எங்கள் மாமனார் மாமியார் தங்க வசதியாக கீழ் ஒரு அறி செய்கிறோம் அவர்களுக்கு என்று என்ன வசதி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தோம் ..ரொம்ப உபயோகமான தகவல் கோமதி

வாங்க சுமதி பார்ப்போம் இன்னும் என்னென்ன வர போகிறதென்று...கொஞ்சம் ஓவெரா தெரிஞ்சாலும் கூட எனக்கு கிச்சனில் ஒரு ஏ சி வேண்டும் என்று சொல்லிவிட்டேன்:-D.
நாம சதா எப்பவும் அங்கு தான் புழுங்கிக் கொண்டிருக்கிறோம்..ஊரில் விருந்தினர்களுக்கும் ஓய்வே இருக்காது..அப்போ கிச்சனில் ஏ சி தேவையா இல்லையா..உம்ம்

இப்போ எல்லாருமே ப்ளோரிங் டைல்ஸ்,மார்பிள் என்றுதான் போடுறாங்க,அது பெரியவங்களுக்கு மூட்டுவலி,கால்வலியை அதிகபடுத்தும் என்று சொல்றாங்க,பழைய முறைகளில் பயன்படுத்தும் ஓடுகள் உபயோகிப்பது நல்லது.அப்புறம் மாடுலார் கிச்சனில் சாதரண கிச்சனை விட,கரப்பான்பூச்சி தொல்லைகள் அதிகமா இருக்கு என்று தோழி ஒருத்தங்க சொன்னாங்க.தேவையில்லாமல் சுவிட்ச் போர்டுகள் நிறைய இடங்களில் வைப்பதை அவாய்ட் பண்ணலாம்.

hi thaleega

ஓவர்ன்னுலாம் சொல்ல முடியாது தாளிகா...அவுங்கவுங்க கஷ்டம் அவுங்களுக்குதான் தெரியும்...நாள் முழுக்க சமையலறையில் இருந்து கஷ்ட படுறவங்க ஏ.சி. கேட்குரதுல தப்பில்லை...என்ன நம்ம tention இல்லாம சமைத்தால் சமையல் சூப்பெரா இருக்கும்....

தளிகா... வீடு எல்லாருக்குமே ஒரு கனவு தான். அது மனசுக்கு பிடிச்ச மாதிரி பயன்படுத்த வசதியா இருந்துட்டா ஆண்களை விட பெண்கள் தான் ரொம்ப சந்தோஷபடுவாங்க. காரணம் பாதி நேரம் அங்க வேலை பார்க்கிறவங்க அவங்க தானே. யோசனை சொல்ல நமக்கு வயசு போதாது. இருந்தாலும் அனுபவத்தை சொல்றேன்.

1. வீடு கட்டினா எல்லா பெட் ரூம்'லையும் பாத்ரூம் டாய்லட் அட்டாச்டா கட்டாம ஒரு பாத் ரூம் டாய்லட் பொதுவா இருக்க மாதிரி கட்டிக்கிறது நல்லது. சில நேரம் உறவுகள் இல்லாம வெளி ஆட்கள், நண்பர்கள் வரும்போது பயன்படுத்த நம்ம பெட் ரூம்'கு வர வேண்டாமே.

2. இருக்குறதுலயே பெரிய முட்டால் தனம் சின்ன டைனிங் ரூம் கட்டுறவங்க, அங்கயே சின்ன வாஷ் பேசின் வைப்பது. வரும் விருந்தாளிகள் நம்மை போலே அதை பயன்படுத்த மாட்டாங்க. அதுலயே வாயை கழுவி துப்பினா நமக்கு ஒத்து வருமான்னு பாருங்க.

3. பாத்ரூமில் முகம் பார்க்கும் கண்னாடி அவசியம். அதுக்கு மேலே ஃபோகஸ் லைட்டும் ரொம்ப அவசியம். பெண்களுக்கும் உதவும், ஷேவ் செய்யும் ஆண்களுக்கும் உதவும்.

4. அடுப்படியில் பாக்ஸ் டைப் கப்போர்ட்ஸ் கூடவே கூடாது. அதில் கரப்பான் தொல்லை பெருந்தொல்லை. அதைவிட மாடுலார் கிச்சன் தேவலை.

5. மேலே லாஃப்ட் ரொம்ப நல்லது. தட்டு முட்டு சாமான் போட ஒதுக்கினாப்போல லாஃப்ட் இருப்பதும், அதுக்கு ஒரு கதவு இருப்பதும் ரொம்ப நல்லது. முடிஞ்சா தலை தட்டாம அதன் உள்ளே ஒரு லைட்டும் போடுங்க. இரவில் கூட வெளிச்சமா உள்ள எதாவது தேடி எடுக்க உதவும்.

6. டுயல் ஸ்விட்ச் இப்போ ட்ரென்டு. ஆனா நிச்சயம் இது பல பிரெச்சனைகளுக்கு காரணம். ஒரு ஸ்விட்ச் ஆனில் இருக்கா ஆஃபில் இருக்கான்னே தெரியாது சில நேரத்தில். முக்கியமா லைட் அல்லது ஃபேன் ரிபேர்'னா கண்டுபிடிப்பது கடினம். இதனால் தேவை இல்லாம பவர் போயிட்டு இருக்கும், கன்சீல்டு வயரிங் இருக்கும் வீட்டில் இது ஆபத்தும் கூட. தீ விபத்துகள் ஏற்படலாம்.

7. குழந்தைகள் கைக்கு எட்டும் உயரத்தில் ஸ்விட்ச் போர்டு... குழந்தைகளோடு இருந்தா தான் தெரியும் அந்த கஷ்டம்.

8. காற்றோட்டம் இருக்கட்டும். வீட்டை வாங்கின 1/2 க்ரவுன்டு முழுசும் கட்டாம கொஞ்சம் சுற்றி இடத்தை விட்டு கட்டனும். இல்லன்னா வெளிச்சம், காற்று எதுவும் இல்லாம எப்படா வெளிய போலாம்'னு இருக்கும்.

9. சிட்டில இரும்பு கேட் அவசியம். எல்லா கதவுக்குமே.

10. பாத்ரூம் உள்ளே ப்லக் பாய்ன்ட் இல்லாம இருக்குறது நல்லது. அப்படி இருந்தா அதுக்கு கை ப்டாம, ஈரம் படாம இருக்க இப்போ மூடி போட்ட மாதிரி ப்ளக் பாயிண்ட்ஸ் வருது... அதை பயன்படுத்தலாம்.

11. கிச்சன் ஆகட்டும், வாஷ் ஏரியா ஆகட்டும்... அங்க பயன்படுத்த போகும் க்ளீனிங் லிக்யூட் முதல் அனைத்துக்கும் வைக்க கப்போர்ட் அவசியம்.

இன்னும் எதாவது நியாபகம் வந்தா கண்டிப்பா சொல்றேன் தளிகா. ஏன்டா கேட்டோம்'னு ஃபீல் பண்ணுறீங்களா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்