5 வயது குழந்தைக்கு என்ன கற்றுக்கொடுக்கலாம்

5 வய்து பெண் குழந்தைக்கு என்ன என்ன கற்று கொடுக்கலாம் ஒழுக்கமாக் இருப்பது மற்றவர்க்ளிடத்தில் எப்ப்டி பேசுவது விருந்தாளிகள் வந்தால்; எப்ப்டி நடந்து கொள்வது இப்படி நிறைய அடிப்ப்டை நாகரீகங்களை நாம் எப்ப்டி கற்றுகொடுப்ப்து

பக்குவமாக எடுத்து சொல்லலாம்..அதை விட சுலபமாக நாம் எப்படி நடந்து கொள்கிறோமே என்னென்னெஅ செய்கிறோமோ அப்படியே தான் குழந்தைகளும் செய்யும்..நம்மை சரியாக மாற்றிக் கொண்டால் நல்ல விஷயங்களை சீக்கிரம் பழகும்

தளிகா சொல்றது போல் பிள்ளைகள் நம்மை பார்த்துதான் கற்று கொள்வார்கள்.வெளியில் போய்விட்டு வந்தவுடன் ஷூவை அதன் ஸ்டாண்டில் வைப்பது,கைகால் கழுவுவது,எடுத்த பொருட்களை அந்த இடங்களிலே மறுபடியும் வைப்பது,உணவை சிந்தாமல் சாப்பிடுவது,ஸாரி,தேங்க்ஸ் சொல்றது
மரியாதையாக பேசுவது,இன்னும் சொல்லிட்டே போகலாம்.
இதெல்லாம் கண்டிப்பாக பழக்க வேண்டும்.விருந்தினர்களை வாங்கன்னு சொல்வது அல்லது சலாம் சொல்வது.5வயது சொன்னால் புரிந்து கொள்ளகூடிய வயது தான்,தவறு செய்தால் சுட்டி காட்டுங்கள்,சின்னபிள்ளைதானே என்று நினைக்கவேண்டாம்.

இந்த காலத்து பிள்ளைகளில் பெரும்பாலானவர்களுக்கு பெரியவர்களை மதிப்பது என்று தெரியவில்லை. பெற்றோர்கள் சொல்லித்தரவில்லை. அவர்கள் வீட்டில் இருப்பவர்களை போலவே வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் அழைக்கிறார்கள். மரியாதையின்றி அடிப்பேன், உதைப்பேன் என்று பேசுகிறார்கள். குழந்தைகள் அப்படி பேசும்போது அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் பச்சை மண்ணை போன்றவர்கள். அவர்களை அழகான பொம்மைகளாக மாற்றுவதும் அப்படியே மண்ணாக விடுவதும் நம் கையில் தான் உள்ளது. குழந்தைகளுக்காக நாம் சில தியாகங்களையும் செய்தால் கண்டிப்பாக அவர்களை சிறந்த குழந்தைகளாக வளர்க்க முடியும். இதற்கு முதல்படியாக வீட்டில் டீவி சீரியல்கள், திரைப்படங்கள் பார்ப்பதை நாம் தவிர்த்தாலே போதும்.

அவர்கள் ஆர்வத்தோடு செய்யும் விதமாக அவர்களுடைய வேலைகளை அவர்களுக்கு விளையாட்டு போக்கில் சிறு சிறு வேலைகளை செய்ய சொல்லலாம்.உதாரணமாக பள்ளி சென்று வந்தபிறகு ஸ்கூல் பேக்,லஞ்ச் பேக்,ஷூ,சாக்ஸ் போன்றவற்றை அதனதன் இடத்தில் வைக்க சொல்ல வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் முகம் கை கால்களை கழுவின பிறகே ஸ்நாக்ஸ் சாப்பிடவேண்டும் என்று பழக்கப்படுத்த வேண்டும்.

சாப்பிடும் போது அவர்கள் தவிர்க்கும் காய்கறிகள், கீரைகள், பழங்களின் அருமை பெருமைகளை எடுத்து சொல்லலாம். அதை சாப்பிட்டால் என்ன நன்மை, சாப்பிடா விட்டால் என்ன தீமைகள் என்று. ஜ்ங்க் புட் உண்பதால் வரும் தீமைகள் பற்றி எடுத்துரைக்கலாம்.சாப்பிடும்போது உணவை கீழே வீணாக்காமல் சாப்பிட சொல்லித்தரவேண்டும். ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் பிள்ளைகளை காட்டி, அவர்களுக்கு உணவின் அருமையை உணர்த்தலாம். பிள்ளைகள் மனதில் இவையெல்லாம் பசுமரத்தாணிகள் போல பதியும் விஷயங்கள்.

சேமிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு வளர்க்க வேண்டும். மிகவும் கீழ்மட்ட பிள்ளைகளை நேரில் சந்தித்து அவர்கள் படும் இன்னல்களை எடுத்துரைத்தாலே பிள்ளைகள் தங்களை பாதிக்கு பாதியாவது திருத்திக் கொள்வார்கள். அநாவசியமாக செலவுகள் செய்ய மாட்டார்கள். உங்களையும் எதையும் கேட்டு நச்சரிக்க மாட்டார்கள்.

அவர்களின் விடுமுறை நாட்களில் அவர்களை விட்டே செடி விதைகளை தந்து பள்ளம் தோண்டி நடச்செய்து தினமும் அதில் தண்ணீர் ஊற்றச் செய்யவேண்டும். அது அவர்கள் நட்ட விதை என்பதால் உற்சாகமாக தினமும் அவற்றை கவனித்து நீர் ஊற்றுவார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை பருவத்திலிருந்தே தோட்டக்கலையின் மேல் ஆர்வமும், மரங்களின் இன்றிமையாமையும் தெரிய வரும்.

பண்டிகையின் நோக்கங்கள், அவை கொண்டாடப்படுவதற்கான காரணங்களையும் கதைகள் மூலம் எடுத்து சொல்ல வேண்டும்.ஏழை - எளியவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு உதவும் நல்ல பழக்கங்களை வளர்க்கலாம். உயிர்வதை செய்யக்கூடாது என்பதை எடுத்துச் சொல்லி வளர்க்கலாம்.

இன்னும் தெரிந்தால் சொல்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் மகளுக்கு 1.5வயதாகிரது ஆனால் அவ பிஸ் வரும்போது சொல்லவே மாட்டுக்கா.அவ பிஸ் இருக்கும் டைம் கணக்கிட்டு நான் ஜட்டியை கலட்டி பிஸிரு என்ருசொல்லுவேன் ஒவ்வொரு சமயந்தான் இருக்காள் இல்லையேல் அதர்கு முன்னாடியோ,பின்னாடியோ இருந்துவிடுகிராள்.அதற்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கள்தோழீஸ்.கல்பனாக்கா,இமாம்மா ப்ளீஸ் சொல்லுங்கள்.

தளிகா எப்ப்டி இருக்கீங்க குழந்தை ரீமா எப்ப்டி இருக்காங்க நீங்க சொல்றதும் ச்ரிதான் நாம எப்படி செய்றோமோ அது மாதிரிதான் குழந்தைகள் செய்கிறார்கள் என் குழந்தை யாராவது வந்தால்தான் சாக்லேட் வேண்டும் சொல்வா நான் சொல்றதா கவனிக்க மாட்டுறா இல்லனா அழுவா மற்றபடி தனியாக் இருக்கும் போது அமைதியா இருக்கா ஏன்னு தெரிலை ரீம் கல்பனா நீங்க சொன்னது எல்லாம் நல்ல க்ருத்தாக் இருக்கிறது நீங்க சொன்னத எல்லாம் நான் கற்றுகொடுக்கிறேன்பா அப்புறம் குழந்தையோட அறிவை வளர்க்க என்ன என்ன சொல்லி தரலாம் அதற்கான் வெப்சைட் இருந்தால் சொல்லுங்கள் நான் starfall pbskids sesame street this website i am teaching now i want learning websites for 5 yrs improving their knowledge thanks reem thalika and kalpana

என் மகளுக்கு 1.5வயதாகிரது ஆனால் அவ பிஸ் வரும்போது சொல்லவே மாட்டுக்கா.அவ பிஸ் இருக்கும் டைம் கணக்கிட்டு நான் ஜட்டியை கலட்டி பிஸிரு என்ருசொல்லுவேன் ஒவ்வொரு சமயந்தான் இருக்காள் இல்லையேல் அதர்கு முன்னாடியோ,பின்னாடியோ இருந்துவிடுகிராள்.அதற்கு நான் என்ன செய்யலாம் சொல்லுங்கள்தோழீஸ்.கல்பனாக்கா,இமாம்மா ப்ளீஸ் சொல்லுங்கள்.

1)படிப்பது, 2)பேசுவது/எழுதுவது,( வயதிற்கேற்ப)3) மதிப்பது
நீங்கள் இவற்றைச் செய்யவேண்டும், இயல்பாகச் செய்யவேண்டும்.
படிப்பது என்றால் பாடங்களைத்தாண்டியவை: செய்த்தித்தாள், (ஆத்திசூடி,திருக்குறள் போன்றவை, உங்கள் சமயம் சார்ந்த இலக்கியங்கள்,bible,raamayanam, etc )

பேசுவது/எழுதுவது முழு வரிகளை, செய்திகளை; இன்று யார் புதிதாய் நம் வீட்டுக்கு வந்தார்கள்? என்பன போல நடைமுறையான, சிந்தித்துப் பேச/எழுதவேண்டியவை. இன்றைக்கு அம்மா/அப்பா என்ன சமைத்தார்கள்?(அப்போது அவர்களுக்கு தாங்கள் பள்ளியில் கற்பது வாழ்க்கைக்கு, வாழ்க்கையில் பயன்படுத்த என்று தானாய்த்தெரியத் துவங்கும்.)
நீ போய்வந்த சிற்றுலாப் பற்றி எழுது எனபன போன்றவை சடங்குகள் ஆய்விட்டன.
இவற்றை வாரம் ஒருமுறை செய்தாலும் போதும்.வீட்டில் black/whitஎ board இருப்பது மிக நன்று.

மதிப்பது என்பது பெரியவர்களை மட்டுமல்ல, வீட்டு உதவியாளர்களயும்- maid, driver, waterman, street vendors etc அனையோரை மனிதர்களாய் நடத்தச் சொல்லித்தர்வெண்டும் நாம் நடப்பதின் வாயிலாக

கீழ்க்கண்ட website பார்க்கலாம்
www.nncc.org/child.dev/ages.stages.5y.html

மற்றும் இந்த google phrase ஐப் பயன்படுத்தித்தேடினால் மிக நிறையக்கிடக்கும்
what to teach at home a five year old child

ஹை தோழிகளே எனக்கு உன்கள் தயவு வேண்டும். என்னுடைய பொண்ணு கின்டர்காடன் போகிறாள் 5.5 வயது ஆகிறது. இந்த சம்மர் லிவில் டி.வி பார்த்துட்டே இருக்கிறாள். அவளுக்கு வேறு என்ன சொல்லி தரலாம்? அவளுக்கு டாய்ஸ் வைத்தும் விளையாட பிடிக்கவில்லை. பெயிண்டின் பிடிக்கும். ஆனால் என்க்கு தான் பயம் கலர்களை கொட்டிவிட்டால் கார்பெட் வீண்ணாகும். கைவினை மீது ஆர்வமுண்டு. பிலிஸ் ஐடியாவை சொல்லுன்கள்

pilis patil solloppa

மேலும் சில பதிவுகள்