கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 9

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

chithra - 94
gandhiseetha - 88

இவற்றில் இருந்து வரும் Mar 07 ஆம் தேதி முதல் Mar 14 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை யாழினி செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கிறார். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

நான் இன்று காந்தி சீதாவின் ஈஸி காரட் ஹல்வா, ஈஸி உளுந்த வடை, சித்ரா விஸ்வநாதனின் கடப்பா செய்தேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா... வாங்க வாங்க. சமைச்சுட்டீங்களா??? மிக்க நன்றி.

ஹர்ஷா... வாங்க, கலக்கறீங்க எடுத்ததுமே. வாழ்த்துக்கள். நன்றி.

ருக்சனா... பாருங்க இப்பவே குறிச்சு வெச்சுகிட்டு சமைச்சுட்டு இந்த வாரம் முடியும் முன் பதிவு போட்டா கூட போதும். மிக்க நன்றி.

பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் கணக்கு:

சீதாவின் - தேங்காய் பால் ஜூஸ், முப்பருப்பு சட்னி

சித்ராவின் - கொண்டைக்கடலை சுண்டல், கொத்தமல்லி சாதம்

யாழினி... எப்போ வரீங்க? கணக்கில் சேர்த்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலை ப்ரேக்ஃபாஸ்ட்

சித்ரா-- வாழைப்பழ தோசை
சித்ரா-- நேத்து கொட்டுமாவு பச்சடி
சித்ரா-- கடலை மாவு லட்டு

லஞ்ச்

சித்ரா-- மஞ்சள் பொங்கல் சாதம்
சித்ரா-- சின்ன வெங்காயம் வத்தக்குழம்பு
சித்ரா-- பரங்கி பால் கூட்டு

டின்னர்

காந்தி சீதா-- சேமியா,மேகி, ப்ரெட் கிச்சடி
காந்தி சீதா-- கீரை சட்னி

இன்று என் மெனு
சித்ரா===மிளகு புளியோதரை,பருப்புபொடி,
காந்திசீதா===மொறுமொறு உ.கிழங்கு டிக்கா,மாதுளைமில்க்‌ஷேக்
பாஸ்தா,ரவாதோசை[சித்ரா}சுவையான,தேங்காய் சட்னி{இரவுக்கு}

என் கணக்கு(mon & tue):
திருமதி.சித்ரா : பூசணிக்காய் மோர் குழம்பு,சுலப ரசம்,வெல்ல அவல்,கடலை மாவு லட்டு,வாழைப்பழத் தோசை,காலிஃப்ளவர் - பட்டாணி குருமா

நேற்று நட்ஸ் அவல் உப்புமா செய்தேன்.அதையும் என் கணக்கில் சேர்த்துக்கோங்க யாழினி.

இன்று திருமதி.காந்திசீதாவின் குறிப்பில் இருந்து ஈசி காளான் குழம்பு,ஈசி கேரட் அல்வா செய்தேன்.

ப்ரேக்ஃபாஸ்ட்

சித்ராவின் - திரட்டுப்பால்
சித்ராவின் - 1-2-3 ஊத்தப்பம்
சித்ராவின் - தேன் கமலா பச்சடி
லஞ்ச்

சித்ராவின் - மிளகு புளியோதரை
சித்ராவின் - பூசனிக்காய் மோர்க்குழம்பு
சித்ராவின் - நூதன கத்தரிக்காய் கறி
டின்னர்

சித்ராவின் - காஞ்சிபுரம் இட்லி
சித்ராவின் - மிளகாய் மசியல்

இன்று என் கணக்கு,சித்ரா===லாப்ஸி அல்வா,கடப்பா,டீமசாலா
காந்திசீதா==தே.பால் ஜுஸ்,வெஜ்கட்லட்

கோமு, ரீம், சுமதி, ஹர்ஷா... தொடர்ந்து சமைச்சு அசத்தறீங்க. வாழ்த்துக்கள். :)

யாழினி... என் கணக்கு:

சீதாவின் - பீர்க்கங்காய் குழம்பு, கொள்ளு சட்னி, சுவையான தேங்காய் சட்னி

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்