கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 9

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

chithra - 94
gandhiseetha - 88

இவற்றில் இருந்து வரும் Mar 07 ஆம் தேதி முதல் Mar 14 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை யாழினி செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கிறார். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

என் நேற்றைய இன்றைய மெனு...

சித்ராவின் --சின்னவெங்காயவத்தல்குழம்பு..
சித்ராவின்---வெல்ல அவல் .
சித்ராவின் --தவலடை.
சித்ராவின் ----சுலபரசம்.
சித்ராவின் ---பட்டாணி சுண்டல்...
யாழினி கணக்கு எடுத்துக்கங்க.............

வாழு, வாழவிடு..

ஹாய் வனிக்கா ரொம்ப நன்றி நான் வரலைனாலும் சூப்பரா அரம்பிச்சு வச்சுட்டீங்க. நல்லது அக்கா. ஆரம்பிச்சு வச்சு குறிப்புகளும் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா?

தோழிகளே ரொம்ப நல்லா சீக்கிரம் சீக்கிரம் செய்து காண்பிக்கிறீங்க. எல்லா தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள். இந்த முறை நிறைய பேர் கலந்துக்கனும்னு கேட்டுகறேன்.

யாழினி... வந்துட்டீங்களா?? மிக்க மகிழ்ச்சி. நான் ஒன்னு கேட்கவா??? சில நேரம் நீங்க வருவீங்கன்னு நானும், நான் வருவேன்னு நீங்களும் காத்திருக்க வேண்டாமே, நீங்க விரும்பினா நீங்களே இனி எப்போதும் முழுமையா இந்த பகுதியை தொடங்கி நடத்துங்களேன். நானும் எல்லாரையும் போல் பங்குபெருகிறேன். உங்களால் வர முடியாத சூழலில் சொன்னால் தோழிகள் யார் இருந்தாலும் தொடங்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலாட்டா கிச்சன் பகுதி - 9 தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்.

இன்று எனது கணக்கில்;
சித்ராவின்: ரிப்பன் பகோடா,கொத்தமல்லி சாதம்
சீதாவின்: சுவையான தேங்காய் சட்னி,ஈசி சிக்கன் கிரேவி
மீண்டும் நாளைய சமையலுடன் வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மிக்க நன்றி யோகராணி. சமைச்சு அசத்துங்கோ. இன்னும் நிறைய கொண்டு வருவீங்கன்னு நாங்க காத்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி என் கணக்கு:

சித்ராவின் - கரம் மசாலாப் பொடி, கடலை மாவு லட்டு

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி... என் கணக்கு:

சித்ராவின் - ட்ரை ஃப்ரூட் டிலைட், 1-2-3 ஊத்தப்பம்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ரேக்ஃபாஸ்ட்

சித்ரா -----------உப்பப்பம்
சித்ரா -----------தாளகம் எனப்படும் குழம்பு
சித்ரா -----------கேரள நெய் பாயசம்
லஞ்ச்

சித்ரா -----------கொத்துமல்லி சாதம்
சித்ரா -----------உருளைக்கிழங்கு, கேரட்கறி
டின்னர்

சித்ரா -----------குடகு இட்லி
காந்தி சீதா -----------கொள்ளு சட்னி

இன்று என் கணக்கு
காந்திசீதா====அவசரதக்காளி சட்னி,ஈசி சிக்கன்க்ரேவி,உலர்பழலட்டு
சித்ரா===1-2-3ஊத்தாப்பம்,மிளகாய் மசியல்.

நேற்றைய என் கணக்கு:
திருமதி.சீதா : சுவையான தேங்காய் சட்னி, நட்ஸ் அவல் உப்புமா(குழந்தைகளுக்காக), அவசர தக்காளி சட்னி,
திருமதி.சித்ரா : சின்ன வெங்காய வத்தக்குழம்பு

மேலும் சில பதிவுகள்