கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 9

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

chithra - 94
gandhiseetha - 88

இவற்றில் இருந்து வரும் Mar 07 ஆம் தேதி முதல் Mar 14 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை யாழினி செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கிறார். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

ஆஹா எல்லாரும் இதே ஸ்பீடுலயே வாங்க வந்து அசத்துங்க. கலட்டா கிச்சன் இப்ப தான் சூடு பிடிக்குது போல சரி சரி. எல்லாருடைய குறிப்புகளையும் கணக்கு எடுத்துகிட்டேன்

சரி வனிதாக்கு நான் முடிந்தளவு எப்படியாக இருந்தாலும் ஆரம்பித்து வைத்து விடுகிறேன் அப்படி நான் இல்லாத பட்சத்தில் நம்ம தோழிகள் யாராவது ஆரம்பிக்கட்டும். நீங்க இருந்தீங்கன்னா எனக்கு தெரியாத சில நேரங்களில் பழகாத சூழ்நிலைகளை கேட்டு தெரிந்துக் கொள்ளலாமேனு நினைச்சேன். எனக்கு நல்ல சப்போட்டாவும் இருந்தீங்க. பர்வாயில்லை அக்கா உங்களுக்கு வர முடியாத சூழ்நிலை என்றால் அதற்கு என்ன செய்வது. நான் பார்த்துக் கொள்கிறேன்.

அடடா யாழினி... நான் வர முடியலன்னு சொல்லல, யார் ஆரம்பிக்கிறதுன்னு குழப்பம் இல்லாம இருவருக்கு பதிலா ஒருவரே தொடர்ந்து நடத்தினா நல்லா இருக்கும்'னு தான் சொன்னேன். நீங்க எப்ப என்ன சந்தேகம், என்ன உதவின்னு கேட்டாலும் இங்கயே தான் இருக்கேன், உடனே சொல்லிடுவேன். பொறுப்பு ஒருவருடையதா இருந்தா குழப்பம் இல்லாம இருக்கும் இல்லையா. உங்களுக்கு சப்போர்ட் பண்ண நாங்க எப்பவும் இருக்கோம்.

உங்களால் ஆரம்பிக்க முடியாத நிலைன்னா சொன்னீங்கன்னா நானே இருந்தா உடனே துவங்கி கொடுத்துடறேன். நான் ஒரேயடியா கழன்டுக்கறேன்னு சொல்லல, உங்க தலைமையில் நடந்தா நல்லா இருக்கும்'னு தான் சொல்றேன். நான் எப்பவும் போல வந்து பங்கு பெறுவேன் எல்லா பகுதியிலும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோமு, ரீம், சுமதி... எப்படிங்க??? எப்படி இவ்வளவு சமைச்சு அசத்தறீங்க!!! கலக்குங்க. ஒரு நாள் என்னையும் யாழினியையும் வீட்டுக்கு கூப்பிட கூடாதா??? வந்து விருந்து சாப்பிடுவோம்ல ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்ப வேணாலும் சாப்பிட வரலாம். யாழினியையும் இன்னும் நிறையா பேரையும் கூட்டிவந்தாலும் சந்தோஷமா சமைச்சுப்போடரேன். நான் நிறைய கத்துக்கிட்டதே
அறுசுவை லேந்துதான். அந்ததோழிகளுக்கு இல்லாததா. வாங்க.

ஹாய் வனி & யாழினி,

நம்ம கலாட்டா கிச்சனுக்கு இந்த முறை கொஞ்சம் தாமதமா வந்திருக்கேன்! சொன்னா நம்ப மாட்டிங்க... இந்த வார தொடக்கத்திலேயே எல்லா குறிப்புகளும் பார்த்து ஒரு 16,17 குறிப்புகள் பக்கம் மார்க் பண்ணி வைத்திருந்தேன்.
இப்பதான் முதல் இரண்டு ... என்ன செய்ய வனி?, ஒரே வேலை இங்கே..., அதான். சரி, என்னால் முடிந்த வரை செய்து சொல்ல முயற்சிக்கிறேன், ஒக்கே?!

இப்ப என் கணக்கில் குறிச்சிக்கோங்க யாழினி.

சித்ரா - வாழைப்பழ தோசை
காந்தி சீதா - ஈசி காளான் குழம்பு

இரண்டுமே நன்றாக இருந்தது. மீண்டும் நாளை சந்திக்கலாம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிக்கா வாங்க வாங்க....இங்க இப்ப சம்மர் ஆரம்பிக்க போகுது...எல்லாரும் வாங்க வந்து சுத்தி பாத்துட்டு போகலாம்....ஆனா ஒரு விஷயம் நீங்க நினைக்குற அளவுக்கு நான் சமையலில் புலி இல்லை...இப்ப தான் L.K.G. முடிச்சு U.K.G. வந்துருக்கேன்(1 1/2 வருசமாதான் சமைச்சுட்டு இருக்கேன்)...
யாழினி இன்றைய என் கணக்கு:
திருமதி.சீதா: பெப்பர் ஈரல், மொரு மொரு சிக்கென், பாஸ்தா(சுலப முறை), காரட் அல்வா(சுலபமான சுவையான முறை).....

ப்ரேக்ஃபாஸ்ட்

சித்ரா -- டால் ரொட்டி
சித்ரா -- காலிஃப்ளவர் பட்டாணி க்ருமா
சித்ரா -- வெல்ல அவல்
லஞ்ச்

சித்ரா -- மோர்க்குழம்பு கதம்ப சாதம்
சித்ரா -- வாழைப்பூ பிட்லை
டின்னர்

சித்ரா -- சுலபமான ரவா தோசை
சித்ரா -- கட்டா மீட்டா நிம்பு

வனிக்கா நீங்க சொன்னதை நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் சாரிகா. நானே தொடர்ந்து நடத்திடுறேன் இல்லையென்றால் முதலிலேயே சொல்லி விடுகிறேன் அக்கா. நீங்கள் சொல்வதும் சரிதான்கா.

வனி,ஒரு ப்ளைட்டை பிடிச்சு,சவுதி வந்திருங்க,அசத்திடலாம்.
இன்று என் கணக்கு
காந்தி சீதா=====ஈஸி மட்டன்பிரியாணி,ஈஸிசில்லி சிக்கன்,காரட் அல்வா,காரமல் பனானா வித் ஐஸ்கிரீம்.

மேலும் சில பதிவுகள்