கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 9

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

chithra - 94
gandhiseetha - 88

இவற்றில் இருந்து வரும் Mar 07 ஆம் தேதி முதல் Mar 14 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

கணக்குபிள்ளை யாழினி செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கிறார். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

நான் இந்த வாரம் இவர்களது குறிப்பிலிருந்து சமைத்தது....
சித்ராவின் சுலப ரசம், 1-2-3 ஊத்தாப்பம், நூதன கத்தரிக்காய் கறி, மிளகு புளியோதரை

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நேற்று முடிவு அறிவிக்க முடியவில்லை அனைவரும் மன்னிக்கவும்.

KOMU:
சித்ரா - லப்ஸி அல்வா, முழு உளுந்து அடை, தக்காளிபீட்ரூட் இனிப்பு பச்சடி, வாழைப்பழ தோசை, நேத்து கொட்டுமாவு பச்சடி, கடலை மாவு லட்டு, மஞ்சள் பொங்கல் சாதம், சின்ன வெங்காயம் வத்தக்குழம்பு, பரங்கி பால் கூட்டு, திரட்டுப்பால், 1-2-3 ஊத்தப்பம், தேன் கமலா பச்சடி, மிளகு புளியோதரை, பூசனிக்காய் மோர்க்குழம்பு, நூதன கத்தரிக்காய் கறி, காஞ்சிபுரம் இட்லி, மிளகாய் மசியல், உப்பப்பம், தாளகம் எனப்படும் குழம்பு, கேரள நெய் பாயசம், கொத்துமல்லி சாதம், உருளைக்கிழங்கு, கேரட்கறி, குடகு இட்லி, டால் ரொட்டி, காலிஃப்ளவர் பட்டாணி க்ருமா, வெல்ல அவல், மோர்க்குழம்பு கதம்ப சாதம், வாழைப்பூ பிட்லை, சுலபமான ரவா தோசை, கட்டா மீட்டா நிம்பு, பனீர் வாழைக்காய் கட்லெட்
காந்தி சீதா - முள்ளங்கி சட்னி, நெந்திரம் பழ மோர்க்குழம்பு, வெண்டைக்காய் சிப்ஸ், வெஜிடபுள் கோதுமை தோசை, சேமியா,மேகி, ப்ரெட் கிச்சடி, கீரை சட்னி, கொள்ளு சட்னி, சிவப்பு அவல் பாயசம், முப்பருப்பு சட்னி, முள்ளங்கி பருப்பு குழம்பு, சிவப்பு பூசனிக்காய் கறி, ஈசி உளுந்து வடை, ஈசி தேங்கா சட்னி

VANITHA:
சித்ரா - வெஜ்டபுள் கோதுமை தோசை, அவசர தக்காளி சட்னி, வாழைப்பழத் தோசை, சேனைக்கிழங்கு மோர் குழம்பு, டீ மசாலா, கொண்டைக்கடலை சுண்டல், கொத்தமல்லி சாதம்
காந்தி சீதா - தேங்காய் பால் ஜூஸ், முப்பருப்பு சட்னி, பீர்க்கங்காய் குழம்பு, கொள்ளு சட்னி, சுவையான தேங்காய் சட்னி, கரம் மசாலாப் பொடி, கடலை மாவு லட்டு, ட்ரை ஃப்ரூட் டிலைட், 1-2-3 ஊத்தப்பம்

HARSHA:
காந்திசீதா - புளிகுழம்பு மற்றும் உருளை கிழங்கை மைக்ரோ அவனில் சுலபமாக வேக வைக்கும் முறை, நட்ஸ் அவல் உப்புமா, ஈசி காளான் குழம்பு, ஈசி கேரட் அல்வா, வெஜிடபிள் கோதுமை தோசை, அவசர தக்காளி சட்னி

LAVANYA:
காந்திசீதா - ஈஸி காரட் ஹல்வா, ஈஸி உளுந்த வடை
சித்ரா - கடப்பா, சுலப ரசம், 1-2-3 ஊத்தாப்பம், நூதன கத்தரிக்காய் கறி, மிளகு புளியோதரை

REEM:
சித்ரா - மிளகு புளியோதரை, பருப்புபொடி, ரவாதோசை, சுவையான தேங்காய் சட்னி, லாப்ஸி அல்வா, கடப்பா, டீமசாலா, 1-2-3ஊத்தாப்பம், மிளகாய் மசியல், கேரளா நெய்பாயாசம், சுலப ரசம்,கடலைபருப்பு சுண்டல்
காந்தி சீதா - மொறுமொறு உ.கிழங்கு டிக்கா,மாதுளைமில்க்‌ஷேக், பாஸ்தா, தே.பால் ஜுஸ், வெஜ்கட்லட், அவசரதக்காளி சட்னி, ஈசி சிக்கன்க்ரேவி, உலர்பழலட்டு, ஈஸி மட்டன்பிரியாணி, ஈஸிசில்லி சிக்கன், காரட் அல்வா, காரமல் பனானா வித் ஐஸ்கிரீம், ஈசி உளுந்து வடை, ப்ரஞ்சுஃப்ரை, மயோனீஸ் டிப், முட்டை கட்லட், கமர்கட், பீனட்பட்டர் நூடுல்ஸ்

SUMATHI CHANDRAN:
சித்ரா - பூசணிக்காய் மோர் குழம்பு,சுலப ரசம்,வெல்ல அவல்,கடலை மாவு லட்டு,வாழைப்பழத் தோசை,காலிஃப்ளவர் - பட்டாணி குருமா, சின்ன வெங்காய வத்தக்குழம்பு
காந்தி சீதா - சுவையான தேங்காய் சட்னி, நட்ஸ் அவல் உப்புமா(குழந்தைகளுக்காக), அவசர தக்காளி சட்னி, ஈசி காளான் குழம்பு

RUKSANAMAMMU:
சித்ரா - சின்னவெங்காயவத்தல்குழம்பு, வெல்ல அவல், தவலடை, சுலபரசம், பட்டாணி சுண்டல்

YOGARANI:
சித்ரா - ரிப்பன் பகோடா, கொத்தமல்லி சாதம், சுவையான தேங்காய் சட்னி,ஈசி சிக்கன் கிரேவி, வாழைப்பழத் தோசை, மிளகு புளியோதரை
காந்தி சீதா - இறால் வருவல்(சுலப முறை),தக்காளி செலரி ஜூஸ்

SUSRI:
சித்ரா - வாழைப்பழ தோசை, சின்ன வெங்காய வத்தல் குழம்பு , வெண்டைக்காய் மசாலா, சுலப ரசம், பட்டாணி சுண்டல்
காந்தி சீதா - ஈசி காளான் குழம்பு, பீர்க்கங்காய் குழம்பு

VINNIE:
சித்ரா - பூசணிக்காய் மோர் குழம்பு, சின்ன வெங்காய வத்தல் குழம்பு, கொண்டைக்கடலை சுண்டல்
காந்திசீதா - மொரு மொரு உருளை டிக்கா

கலாட்டா கிச்சன் பகுதி - 9, கடந்த ஒரு வாரமாக நம் அறுசுவை தோழிகளின் ஒத்துழைப்பாலும் பங்கெடுப்பினாலும் சிறப்பாக நடந்து இன்று இனிதே நிறைவுற்றது. இந்த வாரம் நாம் செய்து அசத்திய இருவரின் குறிப்புகள் சித்ரா - 94, காந்தி சீதா - 88 இந்த வாரத்தின் மொத்தம் குறிப்புகளின் எண்ணிக்கை 182 முதலில் இவ்வளவு நல்ல நல்ல எளிதான குறிப்புகளை நமக்களித்த சித்ரா மற்றும் காந்திசீதா இருவருக்கும் மிக்க நன்றி. பழைய தோழிகள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் ஏன் கலட்டா கிச்சனில் கலந்துக் கொள்வதில்லை என்று தெரியவில்லை. நீங்கள் எல்லாரும் ஆதரவு தந்தால் தான் இந்த பகுதியை நல்ல முறையில் நடத்தி செல்ல முடியும். புதிதாக வந்து கலந்துக் கொண்டவர்களுக்கும் எப்போதும் போல அழகாக வந்து தாங்கள் செய்த குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அடுத்த பகுதியை இன்னும் சிறப்பாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறோம்.

சித்ரா அவர்களின் 94 குறிப்புகளில் 46 செய்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.
காந்தி சீதா அவர்களின் 88 குறிப்புகளில் 45 செய்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.

இருவரின் குறிப்புகளையும் சேர்த்தால் மொத்தம் 182 குறிப்புகள் வருகிறது, அதில் 91 குறிப்புகளை நமது தோழிகள் வனிதா, வின்னி, ரீம், ருக்சானா, சுமதி சந்திரன், லாவண்யா, சுஸ்ரீ, யோகராணி, கோமு அனைவரும் சேர்ந்து செய்து அசத்தி இருக்கின்றனர். இவர்களில் யார் அதிக குறிப்புகள் செய்திருக்கின்றாரோ அவரே அசத்தல் ராணி மற்றும் அசத்தல் இளவரசிகள்.

கலாட்டா கிச்சன் பகுதி 9ன் வெற்றியாளர்கள் பின் வருமாறு:

46 குறிப்புகள் செய்து கலட்டா கிச்சன் பகுதி 9ன் அசத்தல் ராணி பட்டத்தை வெல்பவர் திருமதி. கோமு அவர்கள்
************************************************
அசத்தல் ராணி கோமு அவர்கள்
************************************************

30 குறிப்புகள் செய்து கலட்டா கிச்சன் பகுதி 9ன் அசத்தல் இளவரசி பட்டத்தை வெல்பவர் திருமதி. ரீம் அவர்கள்
************************************************
அசத்தல் இளவரசி ரீம் அவர்கள்
************************************************

16 குறிப்புகள் செய்து கலட்டா கிச்சன் பகுதி 9ன் அசத்தல் இளவரசி பட்டத்தை வெல்பவர் திருமதி. வனிதா அவர்கள்
************************************************
அசத்தல் இளவரசி வனிதா அவர்கள்
************************************************

இந்த வாரம் திருமதி. சித்ரா அவர்களின் சின்ன வெங்காய வத்த குழம்பு மற்றும் வாழைப்பழதோசை 5 முறைகள் செய்து பார்க்கப்பட்டு சிறந்த குறிப்பிற்கான முதல் இடத்தை பிடிக்கிறது.
திருமதி. காந்திசீதா அவர்களின் ஈஸி காளான் குழம்பு 4 முறைகள் செய்து பார்க்கப்பட்டு சிறந்த குறிப்பிற்கான இரண்டாம் இடத்தை பிடிக்கிறது.

கோமு தொடர்ந்து 3 முறையாக ராணி பட்டத்தை வென்று செல்லுகிறார்கள் வாழ்த்துக்கள் கோமு. கலட்டா கிச்சனை ஆரம்பித்து அருமையாக நடத்தி சென்று கொண்டிருக்கும் நம்ம வனிதாவு இந்த முறை இளவரசி ஆகிட்டாங்க வாழ்த்துக்கள் வனிக்கா. 4 வது முறையாக திருமதி. ரீம் அவர்கள் இளவரசி பட்டத்தை வென்று செல்கிறார்கள் வாழ்த்துக்கள் ரீம்

இதில் கலந்துக் கொண்ட அத்தனை பேருக்கும் எங்கள் நன்றியை மனதார தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பகுதியை விட அடுத்த பகுதியை இன்னும் சிறப்பாக வெற்றியடைய வைக்க வேண்டும். கலந்துக் கொண்டவர்களுக்கும் கலந்துக் கொண்டு பட்டங்கள் வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கலாட்டா கிச்சனை சிறப்பாக நடத்திய யாழினிக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்....
அசத்தல் ராணி கோமுவுக்கு எனது வாழ்த்துக்கள்....
அசத்தல் இளவரசிகள் ரீம் மற்றும் வனிக்கா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்....
மற்றும் கலந்து கொண்டு சிறப்பித அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்,நன்றிகளும்......

ஆஹா... வழக்கம் போல கோமு தட்டிகிட்டு போயிட்டாங்களே!!! ;(

இருந்தாலும் நம்ம பாராட்டாம இருக்க முடியுமா??? அவங்க தான் நம்மை எல்லாம் வீட்டுக்கு சாப்பிட வர சொல்லிட்டாங்களே.... அதனால "அசத்தல் ராணி" மகுடம் சூடிய எங்கள் அன்பு தோழி கோமு'வுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும். :D

கூடவே "இளவரசி" மகுடம் சூடி எப்போது கலாட்டா கிச்சனில் பங்கு பெற்று சிறப்பிக்கும் நம் அன்பு தோழி ரீம்'கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

அப்படியே போனா போதுன்னு எனக்கு குட்டி இலவரசி பட்டம் தந்த நம்ம அன்பு தோழி நம்ம கலாட்டா கிச்சன் தலைவி யாழினி'கு நன்றிகள் பல. அம்மா'வை சமைக்க வச்சே பட்டம் வாங்கிய நம்ம தலை "வனிதா"கு சிறப்பு வாழ்த்துக்கள்.... [அம்மா'கு பாஸ் பண்ணிடணும்... சரியா வனிதா??? ;) ஹிஹிஹீ] கீப் இட் அப் வனி.

கலந்து கொண்டு இந்த பகுதியை சிறப்பிக்கும் அனைத்து தோழிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த முறை கோமு, ரீம்'அ விட அதிகமா சமைக்க உங்க கணவர்'ட இப்பவே சொல்லி வைங்க :D

இந்த முறை சமைக்க முடியாதவங்க எல்லாம் அடுத்தவாட்டி நிச்சயம் கலந்துக்கணும்'னு இப்போதைக்கு அன்பான வேண்டுகோள் வைக்கிறோம். அடுத்தவாட்டியும் வரலன்னா பென்ச் தான்.

சுவையான குறிப்புகள் பல தந்து நம்ம கிச்சனை அசத்தும் தோழிகளுக்கும் நன்றிகள் பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்.

அசத்தல் ராணி கோமுவுக்கும்,அசத்தல் இளவரசிகள் ரீம் மற்றும் வனிதாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

வழக்கம் போல அருமையா கணக்கு பார்த்து,வெற்றியாளர்களை அறிவித்த நம்ம யாழினிக்கும் பாராட்டுக்கள்.

வனிதா,
கண்டிப்பா அடுத்த முறை அசத்தல் மன்னன் பட்டமோ,அச்த்தல் இளவரசன் பட்டமோ வாங்கணும்னு என்னவரிடம் சொல்லிட்டேன்.

வெற்றி பெற்ற தோழிகள் கோமு,ரீம் மற்றும்வனிதா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
(வனிதா அப்படியா சங்கதி......எங்களுக்கு சமையல் உதவி செய்ய பக்கத்தில் அம்மா இல்லையே)

இதை அருமையாக‌ ந‌ட‌த்தி செல்லும் யாழினிக்கும், வனிதாவுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்க‌ள்!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்