அரச இலை பெயிண்டிங்

தேதி: March 7, 2011

5
Average: 4.3 (16 votes)

 

அரச இலை
ஆயில் பெயிண்ட்
சின்ன டூத் ப்ரஷ்
க்லிட்டர்ஸ்
டார்க் நிற துணி
பெயிண்ட் ப்ரஷ்

 

அரச இலை நீரில் போட்டு 15 - 20 நாள் வரை வைக்கவும். தினமும் இலை மற்றும் நீரின் நிலையை பார்க்கவும். நீர் மாற்றி வைக்க வேண்டும். ஆனால் இலை பழுதாக கூடாது. ஒரு கட்டத்தில் இலையின் மேல் உள்ள பச்சை நிறம் ஒரு லேயர் போல் உரிந்து வந்துவிடும். அந்த நிலையில் எடுத்து லேசாக நீர் விட்டு கழுவினால் படத்தில் இருப்பது போல் இலை கிடைக்கும்.
இப்போது இலையில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும் பச்சை நிறத்தை ப்ரஷ் கொண்டு நீக்கலாம். மிகவும் மெதுவாக பொறுமையாக செய்ய வேண்டிய வேலை இது. இல்லை என்றால் இலை முழுவதும் பாழாகும்.
நன்றாக நீக்கி சுத்தம் செய்து கழுவிய இலையை ஒரு நாள் முழுக்க காய வைத்து எடுத்தால் வரைவதற்கு அழகான இலை தயார்.
முதலில் வரைய விரும்பும் படத்தை எதாவது பேப்பரில் வரைந்து கொண்டு அதன் மேல் இலையை வைத்து வரையலாம். நேரடியாகவே வரைய வரும் என்றால் தேவையில்லை. ஆனால் கீழே ஒரு பேப்பர் வைத்து கொண்டு இலையை மேலே வைத்து வரையவும்.
படத்தை மேலோட்டமாக ஒரு முறை வரைந்து கொள்ளவும். ப்ரஷ்ஷை மேலோட்டமாக வைத்து வரைய வேண்டும். அழுத்தம் தந்தால் இலையின் ஓட்டைகள் வழியாக கீழிருக்கும் பேப்பருக்கு போய்விடும்.
பின் அதன் உள்ளே நிரப்ப வேண்டிய இடங்களை நிறம் கொண்டு நிரப்பவும்.
இப்போது இலையை வேறு இடத்தில் மாற்றி வைத்து பாருங்கள். பல இடங்களில் பெயிண்ட் ஒட்டாதது போல் இருக்கலாம். அந்த இடங்களில் பெயிண்ட் கீழிருந்த பேப்பருக்கு போயிருக்கும். அதனால் மீண்டும் ஒரு முறை மேலோட்டமாக வரையவும்.
இது போல் மேலும் மேலும் ஒரு 2 கோட் பெயிண்டிங் கொடுத்தால் படம் பார்க்க தெளிவாக இருக்கும்.
இலையை நன்றாக பெயிண்ட் காயும் வரை கைப்படாமல் வைத்திருக்கவும். ஆயில் பெயிண்ட் காய நாட்கள் ஆகும். விரும்பினால் படத்தில் இருப்பது போல் இலையின் ஓரங்களில் க்லிட்டர் கொண்டு அலங்கரிக்கலாம். இப்போது அழகான அரச இலை பெயிண்டிங் தயார். டார்க் நிற துணி ஒன்றை பின்னுக்கு கொடுத்து ப்ரேம் செய்தால் இலை பளிச்சென்று இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுப்பர் வனீ. ;) பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

அழஹா இருக்கு மா....எல்லாம் நீங்களே யோசிச்சி செய்விங்களா? அல்லது கத்துகிடின்களா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. இன்று வரும் என்று நினைக்கவே இல்லை... :)

இமா... மிக்க நன்றி. :)

குமாரி... மிக்க நன்றி. இப்படிலாம் இருக்குன்னு தெரியும், அதான் தோணுற மாதிரிலாம் ட்ரை பண்ணினேன். இது 3'வது இலை. ஒன்னு பெயிண்ட் வேறு பயன்படுத்தி ஊறி போச்சு, ஒன்னு ரொம்ப நாள் தண்ணீரில் இருந்து பாழா போச்சு. இது தான் ஒழுங்கா வந்தது. குழந்தைங்க விழுந்து எழுந்து சைக்கில் கத்துக்குற மாதிரி தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்பவே அருமையாய் இருக்குங்க வாழ்த்துக்கள்..... அப்பப்பா எவ்லோ திரமைகள் இருக்கு உங்ககிட்ட சூப்பர்........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா... மிக்க நன்றி :) திறமை ஏற்கனவே இருந்ததில்லை, இப்போ அறுசுவையால் லேசா வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு உங்க பெய்ண்டிங் நானும் முயற்சி பண்ணி சொல்லுறேன்

ரொம்ப அழகா இருக்கு உங்க பெய்ண்டிங் நானும் முயற்சி பண்ணி சொல்லுறேன்

super. keep it up. you are very great.with regards.g.gomathi.

வனிதா! ரொம்ப அழகாய் இருக்கு அரச இலை பெயிண்டிங்.
எனக்கு உங்களைப் போல் பொறுமையெல்லாம் இல்லை.
இந்த பெயிண்டிங்கை பாக்கிறப்போ பொறுமையாய் இருந்து செய்ய வேண்டும் போல் உள்ளது.
வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வர்ஷா... மிக்க நன்றி. செய்து பாருங்க.

கோமதி... மிக்க நன்றி. தொடர்ந்து எல்லா கைவினையிலும் உங்க பதிவு காண்பது மகிழ்ச்சி.

யோகராணி... ரொம்ப ரொம்ப ரொம்ப பொறுமை வேணும். ;( சந்தேகமே வேண்டாம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொள்ளை அழகு உங்களின் கைவண்ணம் ;)......வாழ்த்துக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாவ் வனி
ப்ராமதமா இருக்கு.. சரி இத்தனை செய்றீங்க.. வீட்டுல வைக்க இடம் ஏதும் ஒதுக்கி இருக்கிங்களா? ;) வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா,
பிள்ளையாரை ரொம்ப அழகா வரைந்து இருக்கீங்க.அரச இலையில் கூட ஓவியம் வரைய முடியுமா? :) ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

hai... vanitha mam arasa ilai pillayar migavum arumai...ungaluku romba porumai mam.... romba alaga iruku elai pillaiyar... vaalthukal....

By
D.Kodi

லாவண்யா... மிக்க நன்றி.

ரம்யா... இப்போ செய்துட்டு இருக்குறது எல்லாம் மாலே விட்டுக்காக செய்தது. அங்க நிறையவே இடம் இருக்கு :) மிக்க நன்றி.

ஹர்ஷா... என்ன இப்படி கேட்டுட்டீங்க? அரச இலையில் வினயகர், கிருஷ்னரெல்லாம் ரொம்ப பிரபலம் ஆச்சே. மிக்க நன்றி.

கொடி... மிக்க நன்றி. பொறுமை இந்த விஷயத்தில் மட்டும் தான் இருக்கு. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி, இங்கு ஒரு கண்காட்சியில பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது...

நான் போன சமயம் வேறு ஒருவர் தான் இந்த செக் ஷனில் இருந்தார். என்ன பெயின்ட் என்று கேட்கும் போது அவருக்கு சரியான விவரம் தெரியவில்லை...இங்கே நீங்க இந்த குறிப்ப கொடுத்திருக்கிரதை பார்த்த உடனே ரொம்ப சந்தோஷம்..தாங்ஸ் அக்கா....

அப்புறம் ஒரு சின்ன குறிப்பு ... நான் பார்த்த கண்காட்ச்சியில் வாழ்த்து அட்டை மாதிரி பண்ணி இருந்தாங்க..அதோட விலை ரூ.60..

இனிமே நாங்களாவது........ விலை கொடுத்து வாங்கிறதாவது......
இப்படி சொல்ல வச்சது வனி அக்கா தான்...

God bless us.

i like it

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

ரூபி... மிக்க நன்றி. 60 ரூபாய் ரொம்பவே கம்மி தான். நான் செய்ததுக்கு ஃப்ரேமோடு சேர்த்து செலவே 300. அதை 500'கு என்னிடம் ஒருவர் கேட்டார். நோ... விற்பனைக்கு அல்ல'னு சொல்லிட்டேன். நானே பல இடங்களில் 500 முதல் 1000 வரை கூட அரச இலை பெயிண்டிங் விற்று பார்த்திருக்கேன். இனி நீங்க வாங்க வேண்டாமே நீங்களே செய்து அசத்துங்க :) ஃப்ரேம் செய்வது மட்டுமில்லை, நீங்க சொன்ன மாதிரி வாழ்த்து அட்டை, புக் மார்க் எல்லாம் செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சத்யா ஆஷா... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் வனிக்கா....சூப்பரா இருக்கு....நா பேசாம உங்க கிட்ட வந்து studentaa join பண்ணிக்கலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்(பீஸ் கொடுத்துதான்).....

சுமதி... வாங்க வாங்க, பீஸ் இல்லாம எனக்கு தெரிஞ்சதை சொல்லிதரேன். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்க பதிவுகளே என்னை ஏதேனும் செய்ய வைத்து கொண்டே இருக்கிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி என்ன தான் செய்ய மாட்டீங்க...வல்லவனுக்கு புல்லும் ஆயுதமா

தளிகா... மிக்க நன்றி உங்க பின்னூட்டத்துக்கு. இது என்னோட ரொம்ப நாள் ஆசை... பல நாள் முயற்சி.... ஒரு சில நேரத்துல ரோட்டோரம் அரச மரத்தை தேடிட்டே போவேன். ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அசத்துரிங்க போங்க. அழகா இருக்கு அரச இலை பெயிண்டிங். ஆயில் பெயிண்டிங் வச்சு அறுசுவைல முதல் க்ராஃப்ட் நினைக்கிறேன். இலையை எப்படி பதப்படுத்தும் சொன்ன விதம் ரொம்ப நல்லா இருக்கு. ஆயில் பெயிண்டிங் வைச்சு வேற என்ன என்ன க்ராஃப்ட் செய்யலாம்.

வினோஜா.. மிக்க நன்றி. ஆயில் பெயிண்ட் எல்லா பெயிண்டிங்'கும் பயன்படுத்தலாம். அடுத்து ஒன்னு அனுப்பறேன் பாருங்க க்ளாசில் ஆயில் பெயிண்ட் பயன்படுத்தி செய்வது. சாதாரண பெயிண்டிங் கூட ஆயில் பெயிண்ட்டில் பண்ணா நல்லா இருக்கும், வெகு நாட்கள் காயனும் அவ்வளவு தான். ஆனா இன்னைக்கு வரைந்து பாதியில் விட்டதை 4 நாள் கழிச்சு கூட மாற்றி வரைய டச் பண்ணலாம். ஈரம் இருந்துட்டே இருக்கும். கண்ணாடி இல்லாம ப்ரேம் செய்ய நினைச்சா ஆயில் பெயிண்ட் பயன்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி க்ளாசில் ஆயில் பெயிண்டிங்கா பார்க்க ஆவலா தான் இருக்கு. அனுப்பி வைங்க வனி எதிர்ப்பார்க்கிறேன்.

வனி ரொம்ப ரொம்ப அழகு. எப்படிதான் நீங்கள் எல்லாம் செய்றீங்கன்னு தெரியவில்லை. ரொம்ப அழகு. இதற்கு ரொம்ப பொறுமை வேண்டும். இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வினோஜா... அத்தனை சூப்பராலாம் இருக்காது, ஆனா ஆயில் பெயிண்ட் பயன்படுத்தி க்ளாஸ் பெயிண்டிங் செய்ய ஒரு ஐடியா கிடைக்கும். மிக்க நன்றி.

ரேவதி... கண்டிப்பா பொறுமை ரொம்ப ரொம்ப வேண்டும். நான் ரொம்ப நிதானமா பண்ண முதல் வேலைன்னு தான் சொல்லணும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா