ஓட்ஸ் ஆலு பர்பி

தேதி: March 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

திருமதி. இளவரசி அவர்கள், ஒரு சமையல் போட்டிக்காக முயற்சி செய்த இந்த குறிப்பினை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த காம்பினேஷன் சுவை சூப்பராக இருக்கும் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

 

ஓட்ஸ் - ஒரு கப்
உருளைக்கிழங்கு மசித்தது - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீனி - 3 கப்
பால் பவுடர் - ஒரு கப்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி


 

முதலில் ஓட்ஸை வெறும் வாணலியில் சிறிது கலர் மாறும் வரை 2 நிமிடம் வறுக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
பின் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் ஈரம் போக வதக்கி பொடிக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மிக்ஸியில் மசிக்கவும்.
ஓட்ஸ், தேங்காய் துருவல், உருளைக்கிழங்கு, சீனி இவற்றை நன்றாக கலந்து மைக்ரோமீடியமில் 10 நிமிடம் வைக்கவும். இடையிடையே கலந்து விடவும். ஓரளவிற்கு கலந்து வெந்ததும் இதனுடன் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் மைக்ரோ மீடியமில் வைக்கவும்
ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் இளவரசி எப்படி இருக்கீங்க?
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குறிப்பு.
ரொம்ப ஆழகா டெக்ரேட்டிவ் செய்து இருக்கீங்க இளவரசி.
எங்கே கலந்து கொண்ட போட்டி என்று தெரிந்து கொள்ளலாமா...?
நல்லா சிம்பிளாக இருக்கு உங்க செய்முறை.
வாழ்த்துக்கள் இளவரசி.

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஓவன் இல்லாம பண்ண முடியுமா

இளவரசி

நல்ல சத்தான சூப்பர் குறிப்பு..
கார்னிஷ் அழகா செய்து இருக்கிங்க
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்க நலமா?
உங்கள் பாராட்டிற்கு நன்றி...நான் கத்தார்ல இருக்கேன்.
நான் இருக்கும் நகரில் இந்தியர்களுக்கென ஒரு சங்கம் உண்டு அவர்கள் நடத்திய போட்டி 125 பேர் கலந்து கொண்டார்கள்..!!!பரிசு வரவில்லை..எனக்கு..
இருந்தாலும் அதுல பங்கு கொண்டதே திருப்தியா இருந்தது ..ஏன்னா இதுக்காக புதுசா நானே யோசித்து இது கத்துகிட்டேன் சுவையும் அருமையா இருந்துச்சு..
அதான் பகிர்ந்துகொண்டேன்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தாராளமா பண்ணலாம் மிதமான தீயில் வைத்து அடுப்பிலேயே..
நான் தொடர்ந்து கிளறும் சிரமம் தவிர்க்க இப்படி ஓவனில் செய்தேன்..
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்..உருளைக்கிழங்கு சேர்ப்பதால் சீக்கிரம் கெட்டியாகிவிடும்..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றிங்க உங்க பாராட்டுக்கு,

இனிய திருமண வாழ்க்கை எப்படியிருக்கு

கைப்புண் ஆறிவிட்டதா?

உங்க பட்டியின் தீர்ப்பு ஒரு வாரம் கழித்துதான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது..படிச்சேன் அருமையோ அருமை...அப்பவே சொல்ல நினைச்சு
சிஸ்டம் ப்ராப்ளமில் விட்டு போச்சு...அருசுவையில் நான் வியந்து பார்ப்பதில் நீங்களும் ஒருவர் :-)

உங்க பாராட்டுக்கு நன்றிங்க...இத முயற்சி பண்ணுங்க...இது அல்வா மாதிரி

சீக்கிரம் எடுத்தாலும் நல்ல ருசியாத்தான் இருக்கும்..ஆனால் எனக்கு

அல்வாவைவிட பர்பியாக கடித்து சாப்பிட பிடித்தது

சிநேகமுடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி

உங்க குறிப்பை பாராட்டி எழுதி இருந்தா நீங்க என்னை பத்தி எழுதறீங்க..ரொம்ப நன்றி.. கைப்புண் ஆறிவிட்டது.. திருமண வாழ்க்கை சூப்பரா போகுது.. உங்களை வியப்பில் ஆற்றுமளவு ஏதும் நான் செய்யவில்லை. உங்கள் எழுத்துக்கு தான் நான் வியந்து போயிருக்கிறேன்.

அரட்டை இங்கு வேண்டாமென நான் அரட்டை இழையில் உங்களை அழைத்தேன்.. நீங்கள் இல்லை போல. அதான் இதிலேயே பதிவிட்டுவிட்டேன்..நீங்கள் எப்படியும் பார்ப்பீர்கள் என.
கண்டிப்பா இந்த ஸ்வீட்டை செய்கிறேன்.. நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இளவரசி, உங்களோட பேசியே நாளாச்சு பா. எப்படியிருக்கீங்க? படத்தை பார்க்கும் போதே அது கேக் தானோன்னு நினைச்சேன். அருமையான சத்தான குறிப்பு பா. உங்களுக்கெல்லாம் எப்படிப்பா இப்படி நல்ல ஐடியாக்கள் எல்லாம் உதிக்குது. எனக்கும் சொல்லித் தாங்களேன். உங்களை பார்க்க பொறாமையாத்தான் இருக்கு. பட்டியில் வாதங்களாகட்டும்,சமையலாகட்டும் சூப்பர் இளவரசி :) உங்களுக்காகவே இந்த ரெசிப்பி செய்துடறேன். வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் சூப்பரா இருக்குப்பா பர்பி.நான் அருசுவைக்கு புதியவள்.தோழிகள் சொல்லுவதை பார்த்தால் நீங்கள் திறமைகளில் இளவரசி அல்ல ராணி என தெரிகிறது.வாழ்த்துக்கள்.அவனில் எந்த மாடல்.கம்பெனி.அளவு. நல்லது கொஞ்சம் சொல்லுங்களேன்.

நல்லா இருக்கேன்பா ..எப்பவும் புதுசா முயற்சி பண்றதில கொஞ்சம் ஆர்வம் அதிகம் அதான் இப்படியெல்லாம்...:)
உங்க பாராட்டுக்கு நன்றி கல்பனா
உங்களுக்கு இல்லாத திறமையா...நீங்களே இப்படி சொல்வதுதான் சங்கோஜமா இருக்கு..நீங்கதாங்க சூப்பர் ..உங்க வர்ணனை,நகைச்சுவை கலந்த எழுத்துக்களை படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்..
செய்து பார்த்துட்டு சொல்லுங்க
நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பாராட்டுக்கு நன்றிங்க

//இளவரசி அல்ல ராணி ..//

நீங்க புதுசுங்கறதால இத பார்த்துட்டு என்னை பத்தி தப்பான முடிவுக்கு வந்துடாதீங்க :)
நான் கத்துக்குட்டிதான் என்பதையும் உண்மையான திறமை ராணிகள் அறுசுவையில் நிறைய இருக்காங்கன்றதயும் போகப்போக தெரிஞ்சுப்பீங்க..

நான் frigidaire oven வச்சுருக்கேன்..

வேற ,மாடல் பத்தி தெரியல

இந்த பர்பி அடுப்பிலேயே செய்யலாம்..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

first time i will talk to you. super recipe. i will try your recipe. keep it up.with regards.g.gomathi.

ஓட்ஸ் ஆலு பர்பி,
அருமையான, சத்தான, சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். உங்கள் படைப்புகள் தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இளவரசி... பார்க்கவே அழகா இருக்கு. குழந்தைகளூக்கு பிடிச்ச எல்லாம் ஒன்னா சேர்த்து நடுவில் ஓட்ஸ் சேர்த்து சத்தான சுவையான அழகான பர்பி. நிச்சயம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முயற்சி பண்ணிட்டு சொல்லுங்க கோமதி

பாராட்டுக்கு நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களுடன் பேசிநெடு நாள் ஆயிற்று..

நலமா இருக்கீங்களா?

வாழ்த்துக்கு நன்றி...செய்துட்டு சொல்லுங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க?பிள்ளைகள் நலமா?
வாழ்த்துக்கு நன்றி வனி..முயற்சி பண்ணி பாருங்க..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி... நானும் குழந்தைகளும் நலம். சென்னையில் தான் சுற்றி கொண்டிருக்கேன் ;) ஹிஹிஹீ. சொல்ல வந்த முக்கியமான மேட்டரை கேளுங்க... உங்க குறிப்பை உடனே செய்துட்டேன். தேவையான பொருளெல்லாம் இருந்தது, செய்து சாப்பிட்டாச்சு. சூப்பர்ங்க. அடுப்பிலேயே தான் செய்தேன், கிளறிவிட்டுகிட்டே இருந்தேன். ரொம்ப சுவையான பர்பி. குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டாங்க. மகிழ்ச்சியா இருந்தது. இனி அடிக்கடி செய்வேன். ரொம்ப ரொம்ப நன்றி.... இன்னும் பல சுவையான குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இளவரசி,எப்படி இருக்கீங்க?

ஓட்ஸ் ஆலு பர்பி புதுவிதமான பர்பியாயிருக்கு,செய்யவும்
எளிமையானதாயிருக்கு,பார்த்தாலே டேஸ்ட் தெரியுது.உங்களுக்கு எப்படி பரிசு கொடுக்காம விட்டாங்க?!! கொஞ்சம்கூட நியாயமேயில்லை இளவரசி.

போனவாரம்தான் உங்க சுவையான சமையல் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன் இளவரசி.நீங்க பேச்சில் மட்டுமில்லாம சுவையான சமையலிலும்,அதை அழகுற படைக்கும் விதத்திலும் சிறந்தவங்க.உங்க குறிப்புகளில் படங்கள் அழகாகவும்,தெளிவாகவும் இருக்கு இளவரசி.

புதுவிதமான பர்பி,அவசியம் செய்து பார்க்கிறேன் இளவரசி.இப்போதைக்கு விருப்பபட்டியல்ல சேர்த்திட்டேன்.சுவையான குறி்ப்பிற்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் இளவரசி.

அன்புடன்
நித்திலா

நல்லா இருக்கேன்..

உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி..
உடனடியா செய்து பின்னூட்டமும் கொடுத்தது உற்சாகமா இருக்கு..வனி
மிக்க நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி... நல்ல குறிப்புன்னு மனசுல தோணிட்டா காத்திருப்பதே இல்லை, உடனே செய்து சாப்பிட்டுடுவேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கேன் நித்திலா

//உங்களுக்கு எப்படி பரிசு கொடுக்காம விட்டாங்க?!! //

அவ்வளவு நம்பிக்கையா!! என்மேல..:)

நீங்க ஜட்ஜா வந்திருந்தா எனக்கு கிடைச்சிருக்குமோ என்னவோ..

டிசைன்,டெகரேஷன்,க்ரியேட்டிவிட்டி,இனோவேஷன்,ஒரிஜினாலிட்டி,
நியூட்டிரிஷியன் வேல்யூ,டேஸ்ட் இது எல்லாத்துக்கும் புள்ளிகள் கொடுத்து செலக்ட் பண்ணினாங்க மூணு ஜட்ஜஸ்..இதுல டேஸ்ட்ல நம்பிக்கை இருந்தாலும் வேற எதுல போச்சுன்னு சரியா கணிக்க முடியல

//அழகுற படைக்கும் விதத்திலும் //

உண்மையில் இதுல நான் கொஞ்சம் வீக் என்று மத்தவங்களோட ப்ரசண்டேஷன பார்த்து புரிஞ்சுட்டேன்

உங்க அன்புக்கும் ,பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றியும் ,மகிழ்ச்சியும்
என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பாக்கரக்கே சூப்பர் ஹ இருக்கு, விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன், நேரம் கிடைக்கும் போது பண்ணி பார்க்கறேன். ஈனக டேகரெட் பண்ணி இருக்க விதம் அருமையிலும் அருமை. மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

கேக் மாதிரியே இருக்கு பார்க்க.நல்ல ரெசிப்பி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பாராட்டுக்கு நன்றிங்க...
பர்பியே சரியா செய்ய வராதவங்ககூட இத தைரியமா முயற்சி பண்ணலாம் :-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நல்லா இருக்கீங்களா?
இந்த போட்டியில நாச்சியாவும் கலந்துகிட்டாங்க..அவங்களுக்கு இதன் சுவை பிடித்துப்போக அப்படியே முழுசா எல்லா பர்பியையும் எடுத்துக்கிட்டாங்க :-)
உங்க சமையல் வீடியோ சூப்பர்..உங்க குரல் கேட்டாச்சு..உங்களத்தான் எப்ப பார்க்கபோறேன்னு தெரியல :-)
பாராட்டுக்கு நன்றிங்க
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.