ஹாட் சிக்கன்

தேதி: March 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் - இரண்டு
அரைக்க:
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
வர மிளகாய் - 6
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க :
பட்டை
கிராம்பு
கறிவேப்பிலை


 

மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு விழுதை அரைத்து தனியாக வைக்கவும். அதே போல் வரமிளகாய், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.
வரமிளகாய் விழுதை சிக்கனுடன் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு அதன் பின் வெங்காயம் போட்டு வதக்கவும்
பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை இதனுள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்த பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் ரெடி. வரமிளகாய் கலவை சிக்கனுடன் நன்றாக ஊற வேண்டும், அப்போது தான் காரம் பிடிக்கும். கார விரும்பிகளுக்கு சப்பு கொட்ட வைக்கும் டிஷ் இது!!!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுகி வர வர சமையல் ல அசத்துரிங்க.சூப்பர் டிஷ் வாழ்த்துக்கள்..................... விருப்பபட்டியல் ல கூட சேத்துட்டேன். ;)

உன்னை போல பிறரையும் நேசி.

நல்ல காரசாரமான குறிப்பு.வாழ்த்துகள்.

Tharifa.

சுகி

நாக்குல எச்சி வருது.. காரம் ரொம்ப அதிகமோ.. ;).. சூப்பர் வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகி நல்ல காரசாரமான எனக்கு பிடித்த குறிப்பு வாழ்த்துக்கள்டா

சுகி,சுகுணா சிக்கனை மாற்றி சுகந்தி சிக்கன்னு வைக்கலாம் போல இருக்கே :) சிக்கன் ரெசிப்பியா தந்து அசத்துறே சுகி. எனக்கும் சிக்கன் தான் பிடிக்கும் பா. மட்டன் சாப்பிட மாட்டேன்... ஆடு பாவம்...;)) (சாத்தான் வேதம் ஓதுதுல) வித்தியாசமான முறை நல்ல டேஸ்டாவும் இருக்கும் போல. படமே சொல்லுது. கண்டிப்பா ஒருநாள் செய்துட்டு உனக்கு மெயில் பண்றேன் சுகி. வாழ்த்துக்கள் :) தொடரட்டும் உன் சமையல் அதகளம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுகந்தி, மிக அருமையான கலர்ஃபுல்லாக இருக்கு உங்கள் குறிப்பு.
நாங்களும் இப்படி தான் செய்வோம்.நல்ல டேஸ்ட்டான குறிப்புதான்.
வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சுகி... அடுத்த முறை சிக்கன் செய்தா இதை தான் முதல்ல ட்ரை பண்ண போறேன். எனக்கு காரம்'னா ரொம்ப இஷ்டம். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தேவி - அசத்த எல்லாம் இல்ல. நீ வேற.. நீ இதை பண்ணி பாரு. சூப்பர் ஹ வரும். வாழ்த்துக்கு நன்றி டா

ஹனிபா - உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்யா - உங்க ஊர் காரம், எங்க ஊர் காரம் இல்ல, செம தூக்கலா இருக்கும். நீங்க பண்ணி பாருங்க. :)

பாத்திமா - அம்மா, என்னோட எல்லா குறிப்புக்கும் வந்து பதிவு போடறீங்க. ரொம்ப சந்தோசம், தேங்க்ஸ் மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சிரிப்பே தாங்கல, போங்க. நாம ஒரு சிக்கன் ஷாப் ஓபன் பண்ணி, என் பேரு வெச்சுடலாம்.
//ஆடு பாவம்...;)) (சாத்தான் வேதம் ஓதுதுல)// - இதுக்கு தான் குட்டீஸ் கூடவே சுத்த கூடாதுன்னு சொல்றது, இன்னும் குழந்தையே பேசறீங்க. இருந்தாலும் அது கூட அழகா இருக்கு, சீக்கரம் பண்ணி பாத்துட்டு மெயில் பண்ணுங்க. நான் காத்து இருக்கேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

யோகராணி - உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

வனி - நான் இது பண்ணும் பொது, உங்களை நினைச்சுட்டே தான் பண்ணினேன், நீங்களும் என்னை மாதிரி நல்ல கார விரும்பின்னு தெரியுமே...சீக்கரம் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகி, நான் நேத்து இந்த ஹாட் சிக்கன் செய்தேன் ட. ரொம்ப நல்லா இருந்துச்சு மிளகு ,சீரகம் சேந்து சூப்பர் மணம்& சூப்பர் டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது. நன்றி சுகி ம

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் சுகந்தி உங்க ஹாட் சிக்கன் செயதேன்பா நன்றாக இருந்தது

சுகி இன்னிக்கு ஹாட்சிக்கன் செய்தேன் செம சூப்பர் செம காரம் அண்ணாவுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்சுது இருவருமே காரவிரும்பிகள்:)
அண்ணா சொன்னாங்க சுகி குறிப்பு செய்து நல்லாலாம போகுமான்னு :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுகந்தி,
காரமாக ஏதாவது செய்வதற்காக தேடி உங்கள் குறிப்பை கண்டு பிடித்தேன் :)
ரொம்ப நன்றாக இருந்தது :) நீங்கள் சொல்லி இருக்கும் ஆறு மிளகாய்க்கு பதில் நான் பத்து மிளகாய் சேர்த்தேன்... காரம் ரொம்பவே தூக்கல் ஆனால் சுவை ரொம்ப சூப்பர் :)

சூப்பர் குறிப்பு சுகந்தி :)

மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)