சிம்பிள் பேட்ச் ஒர்க் டிசைன்

தேதி: March 10, 2011

4
Average: 3.5 (13 votes)

 

ப்ளெயின் பட்டியாலா டாப் - லைட் கலர்
டார்க் நிற பூக்கள் நிறைந்த துணி
கிலிட்டர்ஸ் - கோல்டு, சில்வர் நிறம்
ஃபெவி க்ளு
கத்தரிக்கோல்
ஜர்தோஸி
வட்டமான கோல்டுநிற சம்கி
லேஸ்

 

பட்டியாலா டாப்பில் டிசைன் செய்வதற்கு அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பட்டியாலா டாப்பின் நிறத்திற்கேற்ப லேஸ்ஸை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.
ஒரு பேப்பரில் மாங்காய் டிசைனை வரைந்துக் கொள்ளவும். டார்க்நிற துணியில் இந்த மாங்காய் டிசைனை வைத்து கத்தரிக்கோலால் அதன் வடிவத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நன்றாக வரைய தெரியும் எனில் நேரடியாக துணியில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சுடிதார் நெக் டிசைனின் ஓரத்தை சுற்றி ஃபெவிக்ளு வைத்து கோல்டுநிற சம்கியை இடைவெளிவிட்டு ஒட்டவும்.
இதுப்போல் நெக் டிசைனுக்குகேற்ப சம்கியை ஒட்டி முடிக்கவும்.
துணியில் நறுக்கி வைத்துள்ள மாங்காய் டிசைனின் பின்பக்கம் முழுவதும் ஃபெவிக்ளு தடவி நெக் டிசைனுக்கு கீழ் ஒட்டி விடவும்.
இந்த மாங்காய் டிசைன் ஓரத்தை சுற்றி க்ளு வைத்து கோல்டுநிற ஜர்தோஸியை ஒட்டவும்.
நெக் டிசைன் ஒரத்தில் சம்கியை ஒட்டியது போல் இந்த மாங்காய் டிசைன் ஓரத்திலும் கோல்டுநிற சம்கியை ஒட்டிக்கொள்ளவும்.
ஜர்தோஸி ஒட்டிய துணியின் மேல் சில்வர்நிற கிலிட்டர்ஸால் சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும். இப்போது மேல்பக்க டிசைன் முடிந்து விட்டது.
அடுத்து டாப் கீழ் டிசைன் செய்ய வேண்டும். முன்பு வரைந்த மாங்காய் டிசைனை விட கொஞ்சம் சிறியதாக வரைந்து எடுத்துக் கொள்ளவும். அந்த அளவைப் போல் துணிகளில் வைத்து, 5 துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை டாப் கீழிலிருந்து 5 செ.மீ விட்டு வரிசையாக 5 துண்டுகளையும் படத்தில் உள்ளது போல் இடைவெளி விட்டு ஒட்டிக் கொள்ளவும்.
டாப்ஸின் அடியில் தேவையான நீளத்திற்கு ஃபெவிக்களு தடவி லேஸ்ஸை ஒட்டி விடவும்.
அவற்றின் ஓரங்களில் கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் போன்று கொடுக்கவும். மாங்காய் டிசைன் உள்ளே சில்வர்நிற கிலிட்டர்ஸால் சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும்.
இதுப்போல் எல்லாவற்றிலும் கிலிட்டர்ஸ் கொடுத்து முடிக்கவும். ஒரு நாள் முழுவதும் நன்றாக காயவிட்டு பின்பக்கம் திருப்பி அயர்ன் செய்துக் கொள்ளவும்.
ப்ளெயின் பட்டியாலா டாப்பில் செய்த பேட்ச் ஒர்க் டிசைன் ரெடி. இந்த மாடலை போன்று நீங்கள் ப்ளவுஸ், சுடிதார், குழந்தைகளின் ஆடை, பெட் ஷீட் ஆகியவற்றில் இந்த பேட்ச் ஒர்க் டிசைன் செய்யலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த பேட்ச் ஒர்க் டிசைன் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

super. i have a one plain chudithar. i will try your desin. keep it up.with regards.g.gomathi.

ஹாய் அண்ணி, ரொம்ப அழகா இருக்கு. நான் செய்து பாக்குரேன் .(ஆனா இங்க ஜர்தோஸி கிடைக்க மாட்டுது). வாழ்த்துக்கள்.....................

உன்னை போல பிறரையும் நேசி.

செண்பகா... சூப்பர் வேலைப்பாடு. அசத்திட்டீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

senbaga சூப்பர் வேலைபாடுங்க.புக்மார்க் பன்னிட்டேன்.நீங்களும் குட்டியும் cuteஆ இருக்கீங்க.

hi

hai Shenbaga mam.... design romba alaga iruku mam last weak than en plain chudithar onuku fulla stones vachi design panen inum 2 plain chudithars iruku mam.... intha design kuthudu vetla certificate vaga poren.... Seiyavum easya .... pkaarathukum arumaia iruku mam valthukal...
By
D.Kodi

ரொம்ப அழகா இருக்கு செண்பகா. பாராட்டுக்கள்.
'ஜர்தோசி' என்னன்னு தெரியலயே! கோல்ட் / சில்வர் கலர்ல, சதுரமா ஸ்ப்ரிங் போல நீளமா இருக்குமே அதுவா?

‍- இமா க்றிஸ்

எத்தனை திறமைகள் கைவசம் வைத்திருக்கிறீர்கள்.!!!

மிகவும் அழகுதான் உங்கள் சிம்பிள் பேட்ச் ஒர்க் டிசைன்.
அருமையாய் விளக்கியுள்ளீர்கள்.....சூப்பர்..!!

பார்க்க மிக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள் செண்பகா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

I WORKED WITH STONES ON MY MOTHERS SAREE AND I PASTED THE STONES WITH FABRIC GLUE.. AFTER THAT WE HAVE TO IRON THE SAREE IN THE REVERSE SIDE .. MY DOUBT IS THAT AFTER IRONING WE CAN WASH THE SAREE A MAM, AND THE STONES WONT COME OUT KNOW.. PLEASE CLEAR MY DOUBT..

ஹேமா... 24 மணி நேரத்துக்கு பின் துணியை பின் பக்கமாக தேய்க்கலாம். 7 நாட்களுக்கு பின் துவைக்கலாம். ஸ்டோன்ஸ் விழாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks very much..

///ஜர்தோசி' என்னன்னு தெரியலயே! கோல்ட் / சில்வர் கலர்ல, சதுரமா ஸ்ப்ரிங் போல நீளமா இருக்குமே அதுவா?///

இமா மேடம் , ஸ்ப்ரிங் மாதிரி இருக்குமே அதே தான் ஜர்தோஸி.

உன்னை போல பிறரையும் நேசி.

நான் உங்க பக்கத்துக்கு புதுசா வந்துருக்கேன் என்னை தோழியா ஏத்துக்குவீங்கலா ப்ளீஸ்.

பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி தேவி.

நூரி.. அரட்டை பக்கம் போங்க. அங்கதான் எல்லோரையும் சந்திக்கலாம்.

‍- இமா க்றிஸ்

nice idea sistr

சகோதரி நான் இந்த வலைபதிவிற்க்கு புதியவள் குறிப்பாக உங்களின் ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக உள்ளது கலம்காரி பேட்ச் செய்வது எப்படி என்று கூற முடியுமா