ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையோர நகரங்களை, பெரிய அளவிலான சுனாமியும் தாக்கியுள்ளதாக செய்தி காண்கின்றோம்.
ஜப்பான் வாழ் அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவரும் நலமாக இருக்கின்றார்கள் என்றும் நம்புகின்றோம். தற்போதைய நிலவரம் குறித்து யாரேனும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
அட்மின் அண்ணா
உங்களுக்கு தெருஞ்சு, நம்ம அறுசுவை ல யார் எல்லாம் ஜப்பான் ல இருக்காங்க? கதீஜா மட்டும் தான் எனக்கு தெரியும். நீங்க பேரு சொன்ன, எங்க கிட்ட ஐடி இருந்தா,வேற எதுலயாவது ஆன்லைன்/மெயில் ல இருக்காங்களான்னு செக் பண்ண முடியும்.
எல்லா தொலைதொடர்பு கட் பண்ணிட்டாங்க, இருந்தாலும் நீங்க உங்களுக்கு யாரவது தெருஞ்சா சொல்லுங்க அண்ணா
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
நானும் நியூஸ் பார்த்தேன்
நானும் நியூஸ் பார்த்தேன் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது ...
கதீஜா கூட தொலைபேசி தொடர்பு இருந்தால் பேசி பாருங்க பா
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
pls help
நானும் பார்த்தேன். ரொம்ப கஷ்டமா இருக்கு? ப்ளீஸ் இதில் நம் தோழிகள் யாராவது இருகிறார்களா? உடனே தேடி சொல்லுங்கள். அவர்களுக்கு எதவும் ஆக கூடாது என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
நியூசிலாந்து, ஆஸ்ரேலியா சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எச்சரிக்கை செய்து இருக்காங்க நியூசிலாந்து மக்கள் மற்றும் நம்ம இமா, சத்யா அப்பறம் ஆஸிரேலியாவில் இருக்கும் தேவா அனைவரும் நல்ல பாதுகாப்பான இடத்தில் தானே இருக்கீங்க. ரொம்ப அலர்ட்டாவே இருங்கபா. முடிந்தால் உங்கள் நிலையை எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க.
இந்த நிகழ்வுகளிலிருந்தும், பாதிப்புகளிலிருந்து மீண்டு வர இறைவன் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனபலத்தை அளிக்க வேண்டும்.
தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது
தற்போதைய நிலவரப்படி, அங்கு 14 கட்டிடத்தில் தீப்பற்றி எரிகிறது.....சேத நிலவரம் தெரியவில்லை. மக்கள் அனைவரும் நலமோடு இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.....
உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.
நியூசி,இந்தோனேசியா,ஆஸ்திரேலியா
இந்த நாடுகளில் அடுத்து சுனாமி வரும்னு எச்சரிக்கை விடுத்துருக்காங்க தோழிகள் யாரேனும் இருக்கீங்களா எல்லோரும் மிகவும் பாதுகாப்பா இருங்கபா.உங்க அனைவருக்காவும் நாங்க கடவுளிடம் நலமுடன் இருக்க ப்ரார்த்திக்கிரோம்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தூதரக தொடர்பு
ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்கூட தொடர்பிழந்து விட்டதாக தொலைக் காட்சிகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு இருப்போம்.
அன்புடன்
THAVAM
பிரார்த்திக்கிறேன்
தோழிகளே தயவு செய்து யாரவது தகவல் தாங்க ப. மனசு கஷ்டமா இருக்கு எல்லோரும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன். _()_
உன்னை போல பிறரையும் நேசி.
HI FRIENDS
என் RELATIVES அங்கே இருக்கிரார்கள்.நானும் ஆண்டவனை வேண்டுக்கிறேன் தோழிகளே நீங்கலும் வேண்டுகள்,
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
எனது பிரார்த்தனைகள்
ஜப்பான் நாட்டில் வசிக்கும் எல்லா நாட்டு மக்களும் நலமுடன் வாழ எனது பிரார்த்தனைகள் .சௌமியன்