கத்திரி,முருங்கை அவியல்

தேதி: March 11, 2011

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவைக்கு ஏற்ப

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/2 கப்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று


 

1.கத்திரிக்காய்,வெங்காயம் இவற்றை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும், முருங்கைக்காயை மற்றும் தக்காளியை துண்டுகளாக்கிகொள்ளவும். பச்சைமிளகாயை 2 ஆக கீறிக்கொள்ளவும்
2.அரைக்க கொடுத்தவற்றை பரபரப்பாக அரைத்துக்கொள்ளவும்
3.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்
4.அடுத்து வெங்காயம், தக்காளி வதக்கவும் அவை வதங்கியதும் முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.
5.பச்சை வாசம் போனதும் அளவாக தண்ணீர் விட்டு, உப்பு போட்டு முக்கால் பதம் வேகவைக்கவேண்டும் காய் குழைந்து போகவிடாமல் பார்த்துக்கொள்ளவும்
6.அதன் பின் அரைத்த தேஙாய்த்துருவலை சேர்த்து கிளறி எல்லாம் கலந்து வரும்போது இறக்கவும்
7.தேவைப்பட்டால் எண்ணெய் கூடுதலாக விட்டுக்கொள்ளவும், காரம் தேவைக்கு பயன்படுத்தலாம் இந்த அவியல் தயிர் சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஸ்


அரைத்த விழுதை முக்கால் பதத்திலேயே சேர்த்து கிண்டும் போது காய்கள் எல்லாமும் சேர்ந்து குழைவாக வரும் அதனால் தான் குழைவாக வேகவைக்கவேண்டாம் என்று முதலில் எழுதி இருந்தேன்

மேலும் சில குறிப்புகள்