ஹாய் ஜெயந்தி மாமி,

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளா உங்களை தான் தேடிகிட்டு இருக்கென்,ஏற்கனவே உங்களுக்கு பதிவு கர்பிணி பெண்கள் பகுதியில் போட்டென்,ஆனால் நீங்க வர மாட்டீங்கன்னு சொன்னங்க,இப்பவாவது வந்து பதில் சொல்லிட்டு போங்க.

நான் 4 வருடங்களுக்கு பிறகு 2வது கர்ப்பம் தரித்துள்ளேன்,எனக்கு முதல் பிரசவம் c-ஷெக்ஷன் தான்,அதன் பிறகு வயிற்றில் பிரசவ கோடுகளும்,தொப்பையும் விழுந்து விட்டது,இப்பொழுது 5 வது மாதம் நடக்கிறது,பிரசவ கோடுகள்,தொப்பை விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்,உங்கள் மஞ்சள் டிரீட்மெண்ட் படித்தேன்,அதை உபயோகித்தால் முதல் பிரசவ கோடுகளும் சரியாகுமா?மஞ்சள் பூசிய பிறகு எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்,சோப்பு தேய்க்கலாமா?இந்த மஞ்சள் உபயோகித்தால் உடலில் உள்ள கருப்பு திட்டுக்கள்(சொறிந்ததால்,தீ பட்டதால் ஏற்பட்டது)மறையுமா?

மேலும் எனக்கு முதல் பிரசவத்திற்கு பிறகு கன்னங்கள் குண்டாகி விட்டன,இந்த முறை கன்னங்கள் குண்டாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்,நிறைய பேர் பால் குடுத்தாலே எடை அதிகரிக்காது என்று சொன்னார்கள்,நான் 9 மாதம் வரை பால் குடுத்தேன்,ஆனாலும் என் கன்னங்கள் குண்டாக மாறி விட்டன,அது ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மேலும் சில பதிவுகள்