பீட்ரூட் கறி

தேதி: March 12, 2011

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் - 1 மீடியம் சைஸ்
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடமிளகாய் - 1 சிறியது (விருப்பத்திற்க்கு ஏற்ப)
பச்சைமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ் ஸ்புன்
கறிவேப்பிலை - 1 கீற்று


 

பீட்ரூட்டை தோல்நீக்கி பொடித்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், மற்றும் வெங்காயம், தக்காளி சிறிய துண்டுகளாக்கவும்.

குடமிளகாய் துண்டுகளாக்கிகொள்ளவும், பச்சைமிளகாயை 2 ஆக கீறிவைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின்னர் பச்சைமிளகாய், குடமிளகாய் போட்டு வதக்கவும்

அடுத்து வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் பிட்ரூட்டை வதக்கவும் எல்லாம் கலந்து வரும்போது மஞ்சள்த்தூள் மற்றும் மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும்.

பச்சை வாசம் போனதும் தேவைக்கு உப்பு போட்டு தண்ணீர் அளவாக விட்டு 3 விசில் வேக வைத்து இறக்கவும்.இந்த டிஸ் கெட்டியாக இல்லாமல் கிரேவியாக இருந்தால் நன்றாக இருக்கும்

இதை பிரெட், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்


குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குடமிளகாய் சேர்க்கத்தேவையிலலை, காரம் குறைத்து போட்டுக்கொள்ளவும்.
இதில் தேங்காய், சீரகம், பூண்டு அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம் அப்போது கெட்டியான பதத்தில் இறக்கவும்

மேலும் சில குறிப்புகள்