Receipies

how do i add my receipies in this website. Kindly help me.

kindly help me sisters

அன்னபூரணி, இந்த arusuvaiadmin@gmail.com மெயில் அட்ரசுக்கு உங்களோட குறிப்பை அனுப்பி வைத்தால் அது அறுசுவையில் இடம் பெறும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thank you very much madam

அன்னபூரணி.. வலது பக்கக் கீழ் மூலையில் பாருங்கள்.
//அறுசுவை
எங்களைப் பற்றி
கேள்வி பதில்
தொடர்புக்கு
பெயர்ப்பதிவு
நிபந்தனைகள்
தமிழ் எழுத்துதவி // இப்படி இருக்கும்.
'கேள்வி பதிலில்' குறிப்புகள் அனுப்புவது தொடர்பான விபரங்கள் அனைத்தும் காணலாம். 'தமிழ் எழுத்துதவி' போனால் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~`
சகோதர சகோதரிகளே, 'ரெசிபி' என்று தலைப்பு இருப்பதால் இங்கு பதிவிடுகிறேன், பச்சை நிறம் வருகிற மாதிரி ஏதாவது ஃபிங்கர் ஃபுட் சொல்லுங்கள் பார்க்கலாம். 'செய்ன்ட் பாட்ரிக்ஸ் டே' வருது இல்ல, அதுக்கு ஏதாச்சும் கொண்டு போக வேணும் ஸ்கூலுக்கு. கோக்னட் ரொக், பச்சை சட்னி சான்விச், குக்கீஸ், மாஷ்மெல்லோஸ், கலர் கேக் இவை எல்லாம் பண்ணியாச்சு. வேற ஏதாச்சும் வீட்ல இருக்கிறதை வச்சு சட்டென்று பண்ற மாதிரி இருந்தா நல்லது. முன்னாடியே நன்றி சொல்லி வைக்கிறேன்.

-இமா

‍- இமா க்றிஸ்

குகும்பர் கட் பண்ணி வையுங்க ;)

கேசரி மாதிரியே துண்டு போட்டு வைப்பது போல் செய்வாங்களே அப்படி பச்சை நிறம் சேர்த்து செய்து பீஸ்'அ கட் பண்ணி வைங்க.

கொத்தமல்லி அரைத்து மாரினேட் செய்து சிக்கன் அல்லது மீன் துண்டு க்ரில் பண்ணலாம்.

நீங்க சொல்ற டே பற்றி எனக்கு தெரியாது, பச்சை நிறம்'னு சொன்னீங்கன்னு எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு இமா,

ப்ராக்கோலியை நீளத் துண்டுகளாக்கி, லேசாக தண்ணீர் தெளித்து, மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்து, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்து, சாப்பிடலாம்.

மைக்ரோ அவனில் வைக்கிறதால நிறம் மாறாமல் இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய்,
கடல் பாசி(china grass) க்ரீன் கலர் இட்டு வையுங்க.
பிஸ்தா மில்க் க்ஷேக் செய்யலாம்.

ஹசீன்

பட்டாணி சுண்டல்,புதினா,மல்லி அரைத்து சேர்த்து செய்யும்,உ.கிழங்கு கட்லட்,டிக்கி செய்யலாம். ஸ்வீட்க்கு பிஸ்தா ரோல்ஸ்.

http://www.arusuvai.com/tamil/node/14285 அப்சராவின் முந்திரி பிஸ்தா ரோல் ரெசிப்பி.

நாலு பேருமே நல்ல யோசனைகள் சொல்லி இருக்கிறீங்க. மிக்க நன்றி.

வனிதா, http://en.wikipedia.org/wiki/Saint_Patrick%27s_Day பாருங்க.
அன்று பச்சை நிறத்துல ட்ரெஸ் பண்ணிட்டுப் போவோம். க்ரேப்ஸ், மிட்டாய் என்று எதெல்லாம் பச்சை நிறத்தில் கிடைக்குமோ அதெல்லாம் 'மார்னிங் டீ' என்று வரும். ;)

சீதாலக்ஷ்மி, உங்களை மிஸ் பண்ணிட்டேன். அடுத்த தடவை சந்திப்போம். ;)

இது காலைத் தேனீர் இடைவேளைக்கு. மீதிப் பேரும் வந்து ஐடியா சொல்லி வைங்க, நடுவுல ஒரு நாள்தான் இருக்கு. ;) இந்தத் தடவை எடுத்தது போக மீதி யோசனைகளை 2012க்கு வைத்துக் கொள்வேன். (வெஜிடேரியனா சொன்னா நல்லது. சிக்கன் என்னைக் கண்டா பறந்துரும்.)

‍- இமா க்றிஸ்

அனைவரது யோசனைகளும் நன்றாக இருந்தன. எங்கள் 'ஸ்டாஃப்' ஒரு கலவையான கூட்டம். ;) அவர்களையும் சந்தர்ப்பத்தையும் மனதில் வைத்து...
சீதாலக்ஷ்மி சொன்னதுபோல் ப்ரோகோலி, அதோடு செலரி ஸ்டிக்ஸ் தொட்டுக் கொள்ள செலரி சட்னி எடுத்துப் போனேன். (அதோடு பச்சைநிற பட்டாணி பை - http://www.arusuvai.com/tamil/node/18576 ) பாராட்டுக்கு கிடைத்தது. மிக்க நன்றி.
நிச்சயம் அடுத்த வருடம் மீதி யோசனைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ;) உதவ முன்வந்த அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்