என் எடை குறையுமா?

அறுசுவை மன்றத்தவர்களுக்கு எனது வணக்கம். நான் இன்றுதான் அறுசுவையில் உறுப்பினராக இணைந்தேன். எனக்கு கல்யாணமாகி 7 வருடங்களாகிறது. முதல் குழந்தை உண்டானபோது எனது எடை 50 கிலோ.குழந்தை பிறக்கும் போது 64 கிலோ. பிறகு என் எடை 60 கிலோவரைதான் குறைந்தது.இப்போ இரண்டாவது குழந்தை பெற்று 2 மாதங்கள்.இப்போ என் எடை 68 கிலோ. எனக்கு தைரொய்ட் பிரச்சனையும் இருக்கு. தாய்ப்பால் நின்றுவிட்டது.கன்னங்களிரண்டும் பருத்து அசிங்கமாக உள்ளது.எனக்கே என்னை கண்ணாடியில் பார்க்க பிடிக்கவில்லை.மனதளவில் நான் மிகவும் உடைந்துபோய் விட்டேன். மறுபடியும் நான் 50 கிலோவிற்கு வரமுடியுமா? கைகளும் மொத்தமாகிட்டுது இதெல்லாம் சரியாகி விடுமா? ப்ளீஸ் யாராவது பதில் சொல்லுங்கள்!எனது உயரம் 1.52சென்ரிமீற்றர். சாதரணமாக நான் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?

ஹை பிரபா, மன்றத்தில் எடை குறைவது பற்றி நிறைய பேசி இருக்கிறார்கள். அதை படித்துபாருங்கள் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். உங்க உயரத்துக்கு 52கிலோ இருக்கலாம். எந்த உடற்பயிற்சி செய்யதாலும் தொடர்ந்து செய்யுங்கள்.கண்டிப்பாக குறையும் தீபா

உங்களுடைய எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ஏன் குறையாது?உங்க உடம்பு உங்க கிட்ட தானே இருக்கு?

கட்டம் கட்டமாக உடல் எடையை குறைக்க பாருங்க..முதலில் 68 கிலோவிலிருந்து 62 க்கு கொண்டு வர பாருங்க..அதன் பின் 56 கிலோ வாக பின் பழையபடி 52 ஆக உங்கள் பழைய அழகை திரும்ப பெரலாம்..முடியாது என்று நினைக்கவே வேண்டாம்..கண்டிப்பாக முடியும்.
ஒரு வாரத்தில் எத்தனை கிலோ எடை குறைக்கிறீர்கள் என்று எழுதி வைய்யுங்க..நல்ல ஒரு டிஜிடல் ஸ்கேல் வாங்கி வெயிட் பாருங்க..க்ராம் குறைந்தாலும் சந்தோஷப்படுங்க..சரியான தூக்கம் தினசரி உடற்பயிற்ச்சி நடை மற்றும் சரியான ஆகாரம் எடுத்துக் கொண்டால் இன்னும் ஒரே வருடத்தில் பழையபடி நீங்க ஆகிடலாம்.

Hi friends... weight adihama irukku enra kawalayai mudalil widungal,, adanal manam thlarwathaum widungal,, mudinda alawu exercise seiwadodu,, nanraha neer arundungal.. LEAVE WORRIES AND THINK OF JOY...

உங்கள் உடல் எடையை படிப்படியாக தான் குறைக்க முடியும். இரண்டு மாதம் ஆகி விட்டதல்லவா....இப்பொழுது நீங்கள் உங்களால் முடிந்த கடினமில்லாத உடற்பயிற்சி செய்யலாம். ஒரு நாள் செய்து பாருங்கள் அது உங்களுக்கு மிகவும் அசௌகரியமாக இல்லையென்றால் தொடராலாம். இல்லையென்றால் சில வாரம் கழித்து செய்யவும்.
அதுவும் இல்லாமல் உங்களுக்கு தைராய்ட் என்று வேறு சொல்லிருகீங்க....அதற்க்கு முதலில் மருத்துவரிடம் காண்பித்து மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் தானாகவே குறையும். என் தோழி ஒருத்தி குழந்தை பிறந்து மிகவும் ஊதிவிட்டாள்...அவளுக்கும் தைராய்ட் இருந்தது....மாத்திரை எடுக்கவில்லை....ஒரு வருடம் கழித்து இப்பொழுது தான் இரண்டு மாதமாக சாப்பிடுகிறாள்....உடல் நன்றாக மெலிந்துள்ளது. நீங்களும் குறையலாம்.....முதலில் மருத்துவரை பாருங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துகளை பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு, நான் முடிந்தவரை உணவுக்கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியும் செய்து பார்க்கிறேன், லாவண்யா நான் கடந்த 4 வருடங்களாக தைரொய்ட் மாத்திரை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன், எனக்கு இரும்புசத்துக் குறைபாடும் முதல்குழந்தை பிறந்ததிலிருந்து இருந்தது, அதற்கும் மாத்திரையும் எடுத்து ஊசியும் போட்டேன். கடந்தமாதம் செக் பண்ணி பார்த்தேன் டாக்டர் தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கசொல்லியிருக்கிறார்.அத்தோடு நான் சுத்த சைவம், தைரொய்ட் பிரச்சனைக்கு அயோடின் சத்து மிகவும் அவசியம் என்கிறார்கள், எந்த மரக்கறிகளில் அயோடின் அதிகம் இருக்கிறது, தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்!

அறுசுவை மன்றத்தவர்களுக்கு எனது வணக்கம். நான் இன்றுதான் அறுசுவையில் உறுப்பினராக இணைந்தேன்

How to reduce over weight.

ப்ரபா தைராய்ட் ப்ரச்சனைக்கு எடை குறைக்க சிறந்த வழி யோகா தான்..
இந்த தைராய்ட் ப்ரச்சனைக்கான ப்ரத்யேக பயிற்ச்cஇகள் செய்வதால் உடம்பு நன்றாக குறையும் இது சம்மந்தமான மற்ற ப்ரச்சனைகளுக்கு கட்டாயம் நிவாரணம் கிடைக்கும்

தளிகா அக்கா நீங்களும், குழந்தைங்க நலமா? நீங்க சொல்லுவது சரி அக்கா. யோகா பன்னா உடல் எடை குறைவதோடு, மைன்டு ரிலக்ஸ்சும் கிடைக்கும். தைராய்டுக்கும் நல்ல பலன் அளிக்கும். இவை என் அனுபவதில் நான் சொல்லுவது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்