கலாட்டா கிச்சன் அசத்தலான பகுதி - 10

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம். வந்தாச்சு தோழிகளே நீங்கள் எல்லாரும் வந்து ஆஜராகும்படி கேட்குக் கொள்கிறோம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

muthulakshmi - 101
hawwa aliyar - 102

இவற்றில் இருந்து வரும் Mar 21 ஆம் தேதி முதல் Mar 28 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

கலக்கலான பத்தாவது பகுதிக்கு வந்தாச்சு வாங்க தோழிகளே எல்லாரும் வந்து சமைத்து அசத்திட வாருங்கள்.

யாழினி... துவங்கிட்டீங்களா... தோ... வந்துட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க வனிக்கா சீக்கிரம் இன்னக்கி ஏதாவது குறிப்பு செய்துட்டு வந்து கணக்கு சொல்லி ஆரம்பிச்சு வைங்க நானும் இப்ப தான் சில குறிப்புகள் எடுத்து வைச்சிருக்கேன் செய்வதற்கு. நானும் செய்துட்டு வந்து சொல்றேன்கா.

யாழினி... சேருங்க முத்துலக்ஷ்மியின் - ரவா பொங்கல்

இப்போதைக்கு அவசரத்தில் இது மட்டுமே... மதியம் சமைத்த பின் வருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா ரொம்ப பாஸ்ட் தான் நீங்க அம்மாடியோ.
என்னுடைய கணக்கு இன்னக்கி மதியம் இதுதான் ஆரம்பம்.
முத்துலெஷ்மி - கத்திரிக்காய் வறுவல், வெஜிடபுள் பருப்பு சாதம்

ஹாய் யாழி,தொடங்கியாச்சா கலாட்டா கிச்சன்? உங்களுக்கும்,பங்கேற்று சிறப்பிக்கவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.யாழி,நோட் பண்ணிக்கங்க.

மாலை:

முத்துலக்ஷமி - பாசிப்பருப்பு பாயசம்
முத்துலக்ஷமி - மசாலா பொரி

பைடா யாழி.

அன்புடன்
நித்திலா

யாழினி கணக்கு ப்ளீஸ்... ;)

அலியாரின் - இளநீர் கடல்பாசி, கேரளத்து அவியல், அவசர மோர்குழம்பு

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இன்று ஹவ்வா அலியாரின் அவல் பாயசம் மற்றும் வாழைக்காய் பஜ்ஜு செய்தேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இன்று நான் சமைத்தவை,

1.வெஜிடபிள் பருப்பு சாதம்- திருமதி.முத்து லக்ஷ்மியின் குறிப்பு.
2.வறுத்த தேங்காய் துறுவல் சாதம் - திருமதி.ஹவ்வா அலியாரின் குறிப்பு.
இரண்டுமே ரொம்ப நல்லா இருந்தது.

யாழினி என் கணக்கில் குறிச்சுங்கோங்க.

ஹாய் யாழி,குட்மார்னிங்.சாரிடா.நேத்து பதிவு போட முடியலை.

முதல்நாள் இரவு:

முத்துலக்ஷமியின் - மிளகு தோசை,கொத்தமல்லி தொக்கு

நேற்றைய மெனு:

காலை:

முத்துலக்ஷமியின் - ரவா பொங்கல்

மதியம்:

முத்துலக்ஷமியின் - வெண்டைக்காய் புளிக்குழம்பு,கத்திரிக்காய் கூட்டு

ஹவ்வா அலியாரின் - உருளைக்கிழங்கு மசாலா

மாலை:

முத்துலக்ஷமியின் - அவல் கேசரி

இரவு:

முத்துலக்ஷமியின் - ரவா தோசை

ஓகே.பைடா யாழி.

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்