மெகந்தி டிசைன் - 8

தேதி: March 21, 2011

5
Average: 4 (29 votes)

 

மெகந்தி கோன்

 

படத்தில் இருப்பது போல் ஒரு பூவும், அதன் மேல் மாங்காய் வடிவமும் வரையவும். அதன் ஓரத்தில் ஒரு கோடு வரைந்து சின்ன சின்ன வளைவுகள் வரைந்துக் கொள்ளவும்.
மாங்காய் உள்ளே இதே போல் டிசைனும், வெளியே பெரிய இதழ்களும் வரையவும்.
அதன் மேல் ஒரு சுழி போல் வரைந்து, அதனை சுற்றி 5 இலைகள் வரையவும்.
தொடர்ச்சியாக ஒரு மாங்காய் வடிவமும் அதை சுற்றி வளைவும் அதன் மேல் புள்ளிகள் வைத்து லேசாக கோடு போல் இழுக்கவும்.
அதன் உள்ளே சின்ன சின்ன அரை வட்டம் வரைந்து உள்ளே புள்ளிகள் வைக்கவும். அந்த மாங்காய் டிசைன் முழுவதும் இதுப்போல் நிரப்பவும்.
மாங்காய் டிசைனின் மேல் ஒரு சிறிய பூவும், அந்த பூவின் மேல் முன்பு வரைந்த மாங்காய் டிசைனுக்கு எதிர்ப்புறமாக இருப்பது போல் இன்னொரு மாங்காய் வடிவம் வரையவும்.
அதன் உள்ளே படத்தில் உள்ளது போல் வரைந்து முடிக்கவும். அதன் ஓரத்தை சுற்றி இலைகள் வரையவும்.
கட்டை விரலுக்கு கீழே படத்தில் உள்ளது போல் வரையவும்.
இலைகள் வரைந்து முடிந்த இடத்தில் ஒரு பூவும், அதனை சுற்றி உள்ள இடைவெளியில் இதுப்போல் வளையங்கள் வரையவும்.
படத்தில் உள்ள மாதிரியை போல் உங்களுக்கு விருப்பமான டிசைன்களை எல்லா விரல்களுக்கும் போட்டுக் கொள்ளவும்.
இறுதியில் இடைவெளி தெரியும் இடங்களில் விரும்பிய டிசைனை போட்டு உங்கள் கையை அழகாக்குங்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

Your mehandi desin very nice.i like it very much your desin keep it up.regards.g.gomathi.

thanks for your first comment.

Eat healthy

simply good and nice

ரசியா... ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். அசத்தலான டிசைன். முதல் குறிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல குறிப்புகள் தர வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanx for ur comment ganelaya & try it

Eat healthy

உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி வனிதா!ஆனால் உங்கல போல் வருமா வனீ!நான் சும்மா ஏதோ என் கைக்கு வந்த டிசைனைப் போட்டேன் அவ்வளவுதான்!!!!!!!!

Eat healthy

ரசி..

பேருக்கேத்த மாதிரி.. ரசினு சொல்லிட்டிங்க.. ரசிச்சிட்டு தான் இருக்கேன். சூப்பர். வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரசியா, வெரி நைஸ்பா, கண்ணை விட்டு எடுக்க முடியல்ல. உங்க டிசைன் நல்ல தெளிவா அருமையா இருக்கு. ராதா சுவாமினாதன்

என் பெயர் ரசி இல்லை ரசியா,என்னை வாழ்த்தி பாராட்டியமைக்கு மிக்க நன்றி

Eat healthy

உங்க பாராட்டைக் கண்டு மகிழ்ந்தேன்,மனம் குளிர்ந்து போனேன்,நன்றி!நன்றி!நன்றி!

Eat healthy

உங்க பேரு ரசியானு தெரியும்.. செல்லமா அப்டி கூப்பிட்டேன்.. வேண்டாம்னா அப்படி கூப்பிடலை.. எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது இல்லையா.. சாரி ;).. அறுசுவை தோழிகளை சுருக்கமா கூப்பிட்டே பழகிடுச்சு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரஸியா,
முகப்பில் உங்க டிசைன் பார்த்துட்டு பேப்பர் கட்டிங்'னு நினச்சேன்.அவ்வளவு தெளிவா அழகா மெஹந்தி போட்டு இருக்கீங்க.பாராட்டுக்கள்.மேலும் நிறைய டிசைன்ஸ் அனுப்புங்க.வாழ்த்துக்கள்.

அழகான டிசைன்..தெளிவா இருக்கு வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரசியா... //ஆனால் உங்கல போல் வருமா வனீ// - நிச்சயம் நான் உங்க டிசைன் பக்கம் கூட நிக்க முடியாது. அத்தனை அருமை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா என்னை நீங்க ரசின்னு உரிமையோட கூப்பிட்டது மிக்க மகிழ்ச்சி,இனிமே அப்படியே கூப்பிடுங்கப்பா!எனக்கு பிடிச்சிருக்கு,எதுக்கு சாரியெல்லாம்?நான் தான் இதை புரிஞ்சிக்காம எழுதுனதுக்கு சாரிப்பா!!!!!!!!!!!உங்கள் ரசி!!!!

Eat healthy

என் டிசைனைப் பார்த்து பாராட்டியதுக்கு நன்றி ஹர்ஷா!கண்டிப்பா நிறைய டிரைன்ஸ் தரேன்!

Eat healthy

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி குமாரி!

Eat healthy

என்ன வனி இப்படி சொல்லி என்னை மெய் சிலிர்க்க வச்சிட்டீங்க,மருதாணினா அது வனிதா தான்,வேனும்னா நான் உங்க அசிஸ்டண்டா இருக்கேன்,அதுக்காக இவ்ளோ பெரிய அவார்டா எனக்கு,ரொம்ப நன்றி வனி!இனி நிறைய டிரைன்ஸ் அனுப்புரேன்பா!

Eat healthy

haei, Very nice design.. Congrats

SubhaLogachandran

ஹாய் ரசியா ,உங்க மெஹந்தி டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ,எனக்கும் மேஹந்திக்கும் ஏணி வைச்ச கூட எட்டாது,சோ யாராவது நல்லா மெஹந்தி போடுறவங்கள கிட்ட சொல்லி இந்த டிசைன் போட்டுகிறேன் ! வாழ்த்துக்கள் !பிரான்ஸ் ல எங்க மெஹந்தி கோன் வாங்குறீங்க ??

வாழ்த்த வார்த்தை வரல ரசியா :-) அழகுனா அழகு கொள்ளை அழகு. முதல் படைப்பே இப்படி அசத்தல்னா, இனி வர போறதா பத்தி சொல்லவே வேண்டாம். professional designers உங்க கிட்ட தோத்துடுவாங்க, பிரமாதமா போட்டு இருக்கீங்க. மேலும் பல டிசைன் அனுப்பனும், நாங்க எல்லாரும் காத்து இருக்கோம். வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

thank u vry much ur congrats!

Eat healthy

டிசைன் ரொம்ப அழகா இருக்கு ரசியா. வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ரசியா ரொம்ப ரொம்ப அருமை அமர்க்களமான டிசைன் முதல் குறிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்(பொறுமை ரொம்ப ஜாஸ்தியா?????????)

உங்க பாராட்டுக்கு நன்றி கல்பனா,உங்களுக்கு எளிதில் போடக்கூடிய டிசைனா சொல்லி தரேன்,கவலைப்படாதீங்க,இது ஒன்னும் மாய வித்தை இல்லை,கண்டிப்பா உங்களுக்கும் வரும்,ஃப்ரான்ஸில் தமிழ் கடைகளில் கிடைக்கும்,அரபு கடைகளிலும் கிடைக்கும் ஆனால் நான் ஊரிலிருந்து வரும் போதே கொஞ்சம் வாங்கி வந்திடுவேன்.

Eat healthy

என்னை வாழ்த்த வார்த்தை இல்லைன்னு சொன்னீங்க,இப்பொ உங்க பாராட்டைக் கேட்டு உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தை வரல,ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சுகந்தி!கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது டிசைன்ஸ் அனுப்பரேன்,என் 2 வால் பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்னால் மெஹந்தி போட முடியாது,இப்போ நான் அனுப்பியது அவர்கள் தூங்கும் போது செய்தது,அவர்கள் முழித்தவுடன் களைத்து விட்டேன்,அதான் சிவந்த பின் என்னால் போட்டோ எடுக்க முடியல!

Eat healthy

நன்றி இமா அவர்களே!உங்களுக்கும் நன்றி பாத்திமா அவர்களே!பொறுமையுடன் கூடிய வேகமும் இருக்கு,இல்லையென்றால் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எல்ல வேலைகளையும் முடிக்க பொறுமை போதாது.

Eat healthy

ஹாய் ரசியா ,உங்க மெஹந்தி டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்....

assalamu alaikkum.............frnd really very super design.regards

எல்லாப் புகழும் இறைவனுக்கே

சூப்பர் டிசைன்.... இன்னும் இது போல நிறைய டிசைன்களை உன்களிடம் இருந்து எதிர் பார்கின்றோம்.வாழ்க வழமுடன்.

உங்க பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!!!

Eat healthy

thank u vry much frnd!

Eat healthy

என் டிசைன் சூப்பர்***உங்க பேர் சூப்பர்!என் மகள்களுக்கு கூட "னா" வில் முடியும் பேர்தான் வச்சிருக்கேன்,நிஸ்ரினா & ஷாஹினா.....பேர் எப்படி இருக்கு?

Eat healthy

பெயர்களும் சூப்பர் தான்.ரொம்ப நன்றிங்க.கேட்க்கவே சந்தோஷமாக உள்ளது.எனது மகள்களின் பெயர்களும் ஹனா &ஹஸ்னா.தான்.

உங்க பேரை போலவே உங்க மகள்களின் பேரும் சூப்பரா இருக்குங்க!உங்களுக்கு 2 மகள்கள் மட்டுமா?அவர்களுக்கு என்ன வயது?

Eat healthy

எனக்கு 3 பிள்ளைகள். முதல் மகள் ஹனா வயது 11.இரண்டாவது மகள் ஹஸ்னா வயது 9.மூன்றாவது மகன் அப்துல் ரஹ்மான் வயது 7.என்னை பற்றி சொல்லியாச்சு.இனி உங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கலேன்.(உங்கள் சொந்த ஊர் இந்தியா.தற்போது பிரான்சில் வசித்து வருகின்றீர்கள்.ப்ரபய்ல் பார்து தெரின்து கொன்டேன்)உங்களை இந்த அறுசுவை மூலம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

என்னைப் பற்றி என்னை விட உங்களுக்கு தெரிந்திருக்கும் போலிருக்கே!ஹாஹாஹா...எனக்கு 2 பெண் குழந்தைகள் மட்டும் தான்,மூத்தவள் நிஸ்ரினா(3 1/2 வயது)இளையவள் ஷாஹினா ( 1 1/2 வயது)இப்போது ஃப்ரான்ஸில் இருக்கேன்,நீங்க இந்தியாவில் எந்த ஊர்?நான் காரைக்கால்,என்னுடைய குறிப்பான கேக் வித் ஐஸிங்கில் போய் பாருங்க,என் 2 மகள்களின் போட்டோ இருக்கும்.இன்ஷா அல்லாஹ் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறேன்!வஸ்ஸலாம்!

Eat healthy

என்னப்பா பிடித்தவர்களை பற்றி தேடிப்படிப்பது ஒன்றும் புதிது இல்லையே.அதை தான் நானும் செய்தேன்.....எனக்கு உங்களை பிடித்திருக்கின்றது.(ஹ்ம் பர்த்தேனுங்க.கேக்கும் சூப்பர்.உங்க பொண்னுகளும் சூப்பர்.ஹேய் ராஸியா நான் இந்தியா இல்லிங்க.என் சொந்த ஊர் இலங்கை.தற்போது டுபாயில் வசித்து வருகின்றோம். எங்களின் இந்த இனிமையான நற்பு தொடரனும்டு அல்லஹ்விடம் பிரார்தித்து பதில் அளியுங்க என்று கூறி விடை பெறுகின்றேன்.வஸ்ஸலாம்..

ரில்வானா நீங்க சிலோனா?நம்ப முடியல,தமிழ் நல்லா எழுதுரீங்க!துபாய் எப்படி இருக்கு,ஒரு முறை துபாய் வரனும்னு ஆசை,அல்லாஹ் தான் நாடனும்,உங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி,எனக்கு வயது 29,உங்களுக்கு?(கேட்க கூடாத கேள்வி)உங்க மெயில் ஐடி இருந்தா குடுங்க,விருப்பமிருந்தால்...............

Eat healthy

என்னப்பா சிலோன் என்றால் தமிழ் தெரியாதா? நான் படித்ததே தமிழ் மொழி தான்.உங்க டுபாய் ஆசையை "அல்லாஹ்" நிறை வேற்றுவான் கவளை வேண்டாம்.என்ன வயதா??? நான் உங்களை விட 3 வயது பெரியவள்...என் இ_மெயில் ஐடி
rilwana161@ymail.com skype id; rilwana hilmy. face book id:rilwana hilmy ( வேறு என்ன வேண்டும்? உங்களுக்கு FB இருந்தால் என்னை அட் பன்னவும். )

வாவ் ரொம்ப அருமையான டிசைன் ரஸியா. அப்படி ஒரு நேர்த்தியா இருக்கு நீங்க நிச்சயம் நிறைய நாட்கள் அனுபவசாலியா இருப்பீங்க சரிதானே ரசியா. வாழ்த்துக்கள் ரஸியா. ரஸியா சில சிம்பிள் டிசைன் கொடுங்க ரஸியா நானும் முயற்சிப்பேன்ல

இல்லை ரில்வானா!இலங்கை தமிழ் நாங்கள் பேசும் தமிழ் போல இருக்காதே உச்சரிப்புகளும் சில வார்த்தைகளும் வேறு படுமே!இங்கே ப்ரான்ஸில் நிறைய இலங்கையர்கள் வசிக்கின்றனர்,அதனால் தான் கேட்டேன்,கோவிச்சுக்காதீங்க லாத்தா (அக்கா)!உங்க ஒரு ஐடி கேட்டதுக்கு எல்லா ஐடியும் தந்துடீங்களே!ரொம்ப நன்றி,உடனே உங்களை ஆட் பன்னிடரேன்!சலாம்

Eat healthy

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி யாழினி!நீங்க கேட்பதற்க்கு முன்னாடியே நான் ஒரு ஈஸியான சுலபமா அனைவராலும் போடக்கூடிய டிசைன் ஒன்னை அருசுவைக்கு அனுப்பியாச்சு,அதைப் பார்த்துவிட்டு சொல்லுங்க யாழினி,சும்மா ஏதோ என் மனதுக்கு வந்த டிசைனை கண் பார்க்க கை போட்டது,அதை உங்க வாய் வாழ்த்த நெகிழ்ந்து போனேன்,நன்றிகள்!!!

Eat healthy

ரசியா... ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர். அசத்தலான டிசைன்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

Hai rasiya How r u?
ரொம்ப அருமையான டிசைன் ரஸியா.

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

thank u so much for ur wishes,did u like it?!!!!!!!!!

Eat healthy

ரஸியா ரொம்ப அழகா, தெளிவா வரைஞ்சு காண்பிச்சு இருக்கீங்க. டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. ரஸியாவின் கைப்போக்கில் வரைந்தாலும் அழகான டிசைனா உருமாறி வந்துடுச்சு. அசத்துங்க ரஸியா. இவ்வளவு அழகா மெகந்தி வரையற திறமையெல்லாம் வைச்சுக்கிட்டு எங்களுக்கு சொல்லி தராம இருந்து இருக்கீங்க:-( உங்களோட அடுத்த ஈஸியான டிசைனை எதிர்ப்பார்த்துக்கிட்டு இருக்கேன்.

வினோஜா!கலையில் கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து காஃபி குடித்துக் கொண்டே உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன்,காலையில் இப்படியொரு பாராட்டை பார்த்தபின் மனம் உற்சாகமாக இருந்தது,உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி வினோஜா!

Eat healthy

you draw the mahandi step by step very helpful to me

very nice