கார குழம்பு

தேதி: March 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (21 votes)

திருமதி. ரேணுகா அவர்களின் குறிப்பினை செய்து பார்த்து அதனை விளக்கப்படங்களுடன் நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - அரை கப்
தக்காளி - இரண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
தாளிக்க:-
கடுகு, உளுந்து
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
வறுத்து பொடிக்க:-
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி


 

முதலில் மேற்சொன்ன தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பூண்டையும் உரித்து பூண்டை மட்டும் இரண்டாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
வறுக்க வேண்டியவற்றை ஒரு சட்டியில் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
அதை மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் தாளித்து வெங்காயம் பூண்டை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின் புளி கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதித்த பின் அரைத்த பொடியை போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்து குழம்பு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
செம காரமான காரகுழம்பு ரெடி. சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்..


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Each step by step photos are came out very well.your recipe also very nice.regards.g.gomathi.

ஹாய் ருக்ஸ்...
காரக்குழம்பு சூப்பர்....
வாழ்த்துக்கள்..

ஹசீன்

அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் செஞ்சதோட இல்லாம படம் எடுத்து போடுவது பாராட்ட வேண்டிய விஷயம்.
குழம்பு மிளகாயோடு ப்ரசண்ட் பண்ணியிருக்கறது அழகா இருக்கு
வாழ்த்துக்கள் ருக்சானா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா என்னா காரம் ஆனாலும் சூப்பர் கார விரும்பிகளுக்கு சூப்பரான டிஷ்

அன்புடன்
ஸ்ரீ

பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு. superb. keep it up.

vazhga valamudan

ருக்சானா,
உங்களுக்கு கார குழம்புனா ரொம்ப பிடிக்குமா? நல்லா செய்து இருக்கீங்க.படங்களும் நல்லா வந்து இருக்கு.வாழ்த்துக்கள்.

ருக்சனா... ரேணு குறிப்பா? சுவையான குறிப்பு தந்த ரேணுக்கும் அதை அழகாக செய்து காட்டிய உங்களுக்கும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ருக்‌ஷானா,

உங்க காரக் குழம்பு குறிப்பு பார்த்து, என் மகள் செய்து பார்த்து, என்னிடம் சொன்னார். நானும் செய்தேன். சூப்பர் டேஸ்ட்.

குறிப்பைத் தந்த ரேணுகாவுக்கும், செய்து காட்டிய உங்களுக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.

அன்புடன்

சீதாலஷ்மி

unka kara kolambu supera eruku..... i m gonna try now thanks ruks

Annbe shivam