சாயம் போச்சு டும் டும் டும் டும்

புது சுடிதார்களில் சாயம் போய் பாபர் சூட் ஆன கதை ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ முறை ஆகிவிட்டது..தோ இப்ப கூட ஒன்னு போச்சு செம்ம எரிச்சலில் இருக்கிறேன்.
இதை எப்படி தவிர்ப்பது??புது புது விலை அதிகமுள்ள சல்வார்கள் தான் ..ஒன்னு பேன்ட் இல்ல டாப் இல்ல ஷால் இப்படி எதாவது ஒன்னு சாயம் போய் விடுகிறது...தரம் என்றால் என்ன அர்த்தம்???
விலை கூடுதல் கொடுத்தால் அதற்கேற்ப இருக்க வேண்டுமல்லவா? மூன்னூறு ரூபாய் கொடுத்தாலும் மூவாயிரம் கொடுத்தாலும் இது தான் கதி?ஏன் இப்படி ஆகிறது..சாயம் போகாமல் தடுக்க எதுவாவது உண்டா?

தளிகா.... இது இப்போ வரும் துணிகளுக்கே உள்ள சாபம். ;( கேட்டா "ட்ரை க்ளீன்"னு ஒரு வார்த்தை ஸ்டைலா சொல்லிக்குவாங்க. அதை விடுங்க. பட்டானாலும் சரி, மற்ர துணி ஆனாலும் சரி முதல் வாஷ் வெறும் நீரில் இருக்கனுமாம். அதாவது சும்மா தண்ணீரில் முக்கி எடுக்கணும். பிழியவோ, வெய்யிலில் போடவோ, சோப் போடவோ கூடாது. சிலர் சொல்றாங்க துணியை முதலில் உப்பு கலந்த தண்ணீரில் முக்கி எடுத்தா சாயம் போகவே போகாதுன்னு. முயற்சி செய்து பாருங்களேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நமக்கு எப்படி தெரியும் வனி. கலருக்கு ஆசைப்பட்டு எடுத்தா ஒரு நாள் அணிந்து, ஒரே நாளில் வீணா போயிடுது. உங்க டிப்ஸ்க்கு நன்றி. ஒரு சாயம் போகற கைக்குட்டையில் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.

அய்யோ எனக்கும் இதே பிரச்சினைதான். டாப்ஸ் சுடிதார் எல்லாம் எவ்வளவு விலை கூடுதலாக வாங்கினாலும் சாயம் போகுது :(. இவ்வளவு விலை வாங்கறாங்களே அந்த துணிக்கு கலர் ஃபிக்சர் யூஸ் பண்ணினா என்ன குறைஞ்சா போயிடுவானுங்க.

என் அண்ணி மயில்கழுத்து நிறத்தில் அழகான சுடிதார் வாங்கி அதை போட்டுக்கிட்டு கோவிலுக்கு வந்தாங்க. திரும்பி வரும் போது நீலகண்டராக மாறிட்டாங்க! வேறென்ன கழுத்தைச் சுற்றி போட்டிருந்த துப்பட்டா வியர்வையில் நனைந்து சாயம் போய் கழுத்தில் ஒட்டிக் கொண்டது. சுடிதார் விலையும் ரொம்ப குறைவுதான் ரூபாய் 2000 :(. என்ன தரமோ என்ன துணியோ என்ன நிறமோ :(((

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கும் இந்த பிரச்சனை உண்டு. ஆனால் என் துணில சாயம் படுரத விட என் கனவரின் துணியில் போய் ஒட்டிகிறது. அதை அவரிடம் இருந்து மறைப்பதற்க்கு நான் படும் பாடு இருக்கே. ஐய்யோ சொல்ல வார்த்தை இல்லை. ஒரு துணியில் உள்ள சாயம் மற்ற துணியில் பட்டால் என்ன செய்வது. அதை எப்படி போக்குவது. யாராவது இதற்க்கு ஒரு டிப்ஸ் கொடுங்களேன் ப்ளீஸ்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா இங்கயும் அதே அழுவை..எப்படி மத்த துணிகளில் உள்ள சாயம் போக்குறது?

வினோஜா... இதை தான் செய்வதாகவும் பட்டு புடவை கூட சாயம் போவதில்லைன்னும் தங்கை வழி உறவினர் சொன்னது. நானும் இது வரை முயற்சி செய்ததில்லை. அம்மா சொன்னாங்க அவங்களும் இந்த ஐடியா இதுக்கு முன் யாரோ சொல்லி கேட்டதாக. ட்ரை பண்ணுங்க.

கவிசிவா... 200, 300'கு எடுக்குறதே தேவல... 1000, 2000 தான் இப்பலாம் தரம் கம்மி. ;( நான் ஒரு சுடிதார் நாயுடுஹாலில் ரொம்ப விரும்பி எங்க சென்னை வீடு கிரகப்ரவேசத்துக்கு போட்டேன்... அன்று ஒரு நாள் தான் நான் அந்த சுடி போட்டது. இன்றும் போட்டோவில் பார்த்து ஃபீல் பண்றேன். 2500 ரூபாய் ஆச்சே... சும்மாவா???

சோனியா... சாயம் வேறு துணியில் பிடிச்சா உடனே வேனிஷ் போடுங்க. கண்டிப்பா போகும், துணியும் பாழாகாது. சிலர் எலுமிச்சை போட்டா போகும்'னு சொல்ராங்க. அதையும் ட்ரை பண்ணுங்க. நான் மஞ்சள் பிடிச்சாலே ஆலா இல்லன்னா வேனிஷ் போடுவேன்... நிச்சயம் துணியில் பிடிச்ச கலர் போயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா ஹா வீட்டுக்கு வீடு வாசப்படி :). சில துணிகளில் ஒட்டிக் கொண்ட சாயங்களை ப்ளீச் கலந்த நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பின்னர் துவைத்தால் போய் விடுகிறது. ப்ளீச்சை தண்ணீரில் நன்கு கலந்த பின்னர்தான் துணியை அமிழ்த்தணும் இல்லேன்னா மொத்தமும் பாழாயிடும் கவனம் தேவை.

சிலவகை சாயங்கள் இதற்கெல்லாம் அசையமாட்டேன்னு அடம்ப் பிடிச்சுக்குது. அப்புறம் என்ன தூக்கிப் போட வேண்டியதுதான் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தளிகா எனக்கும் இதே ப்ராப்ளம்

ஹேண்ட் வாஷ் பண்ணினாலும் டபுள் கலர் துணின்னா..கரையோட கலர் மற்ற பகுதியில ஒட்டிக்குது

ஒரு துப்பட்டா கூட இரண்டு கலர் இருந்தா எப்படி பிரிச்சு வச்சு துவைக்கிறது...அதுவும் அலசறதுக்குள்ள ஒட்டிக்குது..
அதுமாதிரி சுடிதாரெல்லாம் வீட்டில தனியா இருக்கறப்ப மட்டும் போடறமாதிரி யூஸ் பண்ண வேண்டியிருக்கு :-
வனி நீங்க சொன்ன டிப்ஸ் நீங்க ட்ரை பண்ணிருக்கீங்களா..
நல்ல டிப்ஸ்க்கு நன்றி...நானும் முயற்சிக்கிறேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

# முதல் தடவை கழுவ முன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் ஊறப் போடுங்கள். (இப்படிச் செய்தாலும் அடுத்தடுத்த முறைகளில் சாயம் போகாது என்று நிச்சயம் சொல்ல முடியாது.)
# சவர்க்காரத்தில் ஊற விடாது உடனே கழுவுங்கள்.
# எப்பொழுதும் சாயம் போகும் என்று எதிர்பார்க்கும் துணிகளைத் தனியாகக் கழுவி வேறு துணிகளில் படாமல் உலரப் போடுங்கள். கிடையாகப் போட்டால் அதே துணியில் இடம் மாறி சாயம் பிடித்துக் கொள்ளாது.

சாயம் பிடித்தால் நீங்குவது கடினம்தான். அப்படி நீங்கினாலும் துணியின் புதுமை திரும்பி வராது. ;(

‍- இமா க்றிஸ்

அடடா... எல்லாருக்கும் இப்படிதானா... நான் கூட, நான் மட்டும் தான் ஏமாந்து போய் இப்படி வாங்கிடறேன் - நு நினைத்தேன்... :) அதுவும் அந்த துப்பட்டா சுடிதாருக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம ஆயிடுது... 2-வது முறை போட்டா துப்பட்டா மாத்தி போட்டுட்டியா- நு கேக்கறாங்க.. :(

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்