ஹேர் ஸ்பா நா என்ன??

ஹாய் தோழீஸ்...ஹேர் ஸ்பா நா என்ன??அது பண்ணினால் முடி சாப்ட் ஆகுமா?எனக்கு முடி ரொம்ப ட்ரை ஆ rough ஆ இருக்கு..வீட்டிலேய செய்ய எதாவது ட்ரீட்மென்ட் இருக்கா??

யாரவது சொல்லுங்கலேன்...ப்ளீஸ் ப்பா.

தீபா.. ஹேர் ஸ்பா என்பது முடிக்கு ஈர பதம் கொடுத்து, பொடுகு வராம தடுக்க செய்யும் ஒரு ட்ரீட்மன்ட். அது ஒன்னும் இல்லை... சாதாரணமா எண்ணை தேய்த்து மசாஜ் செய்து, ஷாம்பூ போட்டு வாஷ் பண்ணி, கண்டிஷனர் போட்டு வாஷ் பண்ணி விடுறது தான். இதை நிதானமா நேரம் எடுத்து நல்ல தரமான பொருட்களால் பண்ணா முடி நல்ல பளபளப்பு, சாஃப்ட்னஸும் கிடைக்குமாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாருமே பதில் போடலேனு நெனச்சேன்..ரொம்ப நன்றிப்பா...நான் டவ் ஷாம்பூ அண்ட் கண்டிஷனர் உஸ் பண்றேன்..ஒன்னும் வித்யாசம் தெரியல..எந்த எண்ணெய் வெச்சு தேச்சு குளிச்ச முடி சாப்ட் ஆஹும்??தெரிந்தால் சொல்லுங்கள்....

தெரியலயே தீபா.. நான் இதுவரைக்கும் செய்துகிட்டது இல்லை. நீங்க ஒரு முறை நல்ல பெரிய பியூட்டி சலூன்'கு போய் செய்துக்கங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா அவங்க என்ன ப்ராண்டு பயன்படுத்தறாங்களோ அதையே பயன்படுத்துங்க. சில பியூட்டி பார்லரில் நீங்க கேட்டா விலைக்கு அந்த கிட் கூட கிடைக்கலாம். தேவாவை காணோம்... இருந்தா உடனே நல்ல ஆலோசனை சொல்லி இருப்பாங்க. பாப்ஸ் உமா'வையும் காணோம். காத்திருங்க தோழிகளுக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்