bottle feeding

one week ah en paiyan bottle feed panna matikeran ....palum kudika matran rmba kashta pattu kuthalum adey thathuvduran..na lactozan kudukurean..ippo na milk powder change pannunoma..therindal sollunga..patiniyah thoonguran.now he s 8mnth completed.

குழந்தைக்கு சில நேரம் வாயில் புண்ணாகியுள்ளதோ தெரியாது. அப்;படி இருந்தாலும் பொட்டில் எடுக்காது/ ஸ்பூனால் கொடுத்துப் பாருங்கள். மற்ற சாப்பாடுகள் எடுக்கிறதா.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சுமையா, குழந்தைக்கு பால் பவுடர் பிடிக்காமல் போயிருக்கும். டாக்டர் அறிவுரையின்படி பால்பவுடர் மாற்றி பாருங்கள். குழந்தை குடிக்கும் பால் பாட்டிலின் ரப்பர் வாடை வந்தாலும் குழந்தைகள் வாயில் வைக்க மாட்டார்கள். அதை மாற்றி பாருங்கள். அப்படியும் குடிக்க வில்லையென்றால் சிறிது கேழ்வரகை வறுத்து ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து பால் பிழிந்து கஞ்சியாக காய்ச்சி கொடுங்கள். எனக்கு தெரிந்து கேழ்வரகு கஞ்சியை 6ம் மாதத்தில் இருந்தே கொடுத்து வருவதை பார்த்திருக்கிறேன். விரும்பினால் (குழந்தை) சிறிது புழுங்கல் அரிசியையும் வைத்து சேர்த்து அரைத்து பால் பிழியலாம். அப்படியும் குடிக்கவில்லையென்றால் நீங்கள் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சரியான வழி. கவலைவேண்டாம். போக போக நன்றாக சாப்பிடுவான்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பாட்டிலை நன்றாக கழுவிட்டு கொதிக்கும் தண்ணீரில் நிபில் பாட்டில் மூடி எல்லாத்தையும் போட்டு எடுத்துட்டு குடுத்து பாருங்க...பால் பவுடர் லாக்டோஜன் -2 குடுக்கலாம்... நீங்க என்ன குடுகுரிங்க... என் பொண்ணு பால் குடிக்கலா என்றால் நான் நிப்பிளை மாத்துவேன் அல்லது பாலுக்கு பதில் வேற எதாவது கொடுப்பேன்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஒன்னும் வருத்தப்படாதீங்க..இதே பருவத்தில் எல்லா பிள்ளைகளுமே தற்காலிகமாக சாப்பிட மறுப்பதும் பால் குடிக்க மறுப்பதும் சகஜம்..ரொம்ப நாளைக்கு இது தொடராது ஓரிரு வாரத்தில் சரியாகி விடும்.
எதாவது ஒரு காரணம் இருக்கலாம்..பல் முளைக்கவோ,எதாவது சவுகரியம் தோனவோ செய்யலாம்...நீங்கள் பட்டினியாக கிடக்கிறது என்று வருத்தப்படாதீங்க பசித்தால் கட்டாயம் குடிக்கும் நமக்கு தான் மனசு கேட்காது..இதற்காக நீங்கள் பாலை மாற்ற அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது..பாலை மாற்றினாலும் சர்க்கரை சேர்த்து கொடுப்பதை பழக்கபடுத்தாதீங்க..கொஞ்ச நாளைக்கு ஸ்பூனால் க்லாசில் இருந்து எடுத்து கொடுத்து பாருங்க...சரியாகிடும்

ni8 time la ava adampidikeran...bottle vai vekamatikeran .ithanala kai sapiketa...ni8 mulluka thoonguran..
kealvaragu kanjiii midni8 la kudukalama..vera vali erunda sollunga pa..

niga solra mathiri en paiyanuku pallumolaiyah poguthundu nenaikurean..ethukuduthalum kadikeran...ni8 8 clock saputu mudikurathoda seri..,athuku aparam avan patiniya ga vea erukan..
sipper use pannulama?????

ஹாய் friends அனைவரும் நலமா? என் பொண்ணுக்கு வரும் ஜுன் வந்தால் 2 வயசு ஆகுது. அவளும் இப்ப கொஞ்ச நாளா சரியா பால் குடிக்க மாட்டேன்றா. ஆரம்பத்தில் நல்லா தான் குடிச்சுட்டு இருந்தா, இப்ப என்ன காரணம்னே தெரியல. நான் organic whole மில்க் தான் குடுக்கறேன். சரின்னு இப்ப 4 நாள் முன்னாடி ஜுனியர் ஹார்லிக்ஸ்- 123 கலந்து குடுக்கறேன், அது நல்ல டேஸ்டாவும் இருக்கு, ஆனால் அதற்கும் என் மகளிடம் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. நான் என்ன பண்றது? இப்ப சிப்பர்ல தான் குடிக்கிறா. நான் தினமும் தவறாமல் sterilize பண்ணிடுவேன், தோழி சுமையாவிற்கு இருப்பது போல் தான் எனக்கும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.வேறு என்ன tricks மூலம் அவளை நன்றாக பால் குடிக்க வைப்பது? தோழிகள் தான் இதற்கு ஒரு வழி சொல்லணும்.

அனேக அன்புடன்
ஜெயந்தி

என் பெண்ணும் இப்படி தான் இரண்டு வயது ஆகும் போது பால் குடிப்பதை அடியோடு நிறுத்தி விட்டால்.....நானும் தலையால் தண்ணீர் குடித்தும் பார்த்து விட்டேன்....ஒன்றும் நடக்கவில்லை......அவளுக்கு இப்பொழுது மூன்று வயதாகிறது...இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்திருக்கிறாள்.
குழந்தைகள் அப்படி தான் அவர்களை அவர்கள் போக்கில் (குறிப்பாக சாப்பாடு விஷயத்தில்) விட்டு தான் பிடிக்க வேண்டும். பால் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் கால்ஷியம் அதிகம் உள்ள யோகர்ட், சீஸ் அல்லது பிரொக்கோலி கொடுக்கலாம். நீங்கள் பீடியாசூர் கூட ட்ரை பண்ணி பார்க்கலாம். நீங்கள் பாலில் ஸ்ட்ராபெர்ரி அல்லது சாக்லட் ப்ளேவர் கூட கலந்து கொடுக்கலாம். அல்லது சோயா பால் ட்ரை பண்ணி பாருங்க. (நானும் இத்தனையும் ட்ரை பண்ணேன்...எல்லாம் ப்ளாப் தான்) அதற்காக பால் ட்ரை பண்ணுவதை விட கூடாது.
நீங்கள் அவளை மெல்ல சிப்பரிலிருந்து க்ளாசில் குடிக்க வைக்க பார்க்கவும். நீங்கள் கவலை படாதீர்கள் எலாம் சரி ஆகி விடும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் லாவண்யா! ஓ!! உங்க பொண்ணும் அப்படித்தான் இருந்தாளா? அப்படின்னா இவளையும் விட்டுத் தான் பிடிக்கணும்... pediasure நான் இருக்கும் இடத்தில் இருக்கான்னு தெரியல, அதுவும் இல்லாம அது குடிச்சா வயிறு எப்பவும் மந்தமாவே இருக்குன்னு நம்ம தோழிகள் வேற ஒரு பதிவுல சொல்லி இருந்தாங்களே, அதான் நான் அது ட்ரை பண்ணல... இவளுக்கு சீஸ், யோகர்ட் எல்லாமே குடுத்துட்டு தான் இருக்கேன்... Great Value-la வர்ற flavoured யோகர்ட் குடுக்கலாமா? நைட் தூங்கும் முன்னாடியும், காலையில் ஒரு 8 மணிக்கும் தான் பால் குடுப்பேன்,அதை குடிக்க தான் இவ்வளவு கிராக்கி....

என் மகளும் டம்ளரில் தண்ணீர், ஜுஸ் எல்லாம் குடிப்பா, பால் இது வரை ட்ரை பண்ணினது இல்ல, இப்ப போய் ட்ரை பண்ணி "உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணான்னு" ஆகணுமான்னு யோசிக்கிறேன் :)

அனேக அன்புடன்
ஜெயந்தி

Formula milka feeding bottle la kodukalama.kannad ( pekan) bottle use panalama ila plastic bottle use panalama.

Life Is Easy When U "Accept All"

மேலும் சில பதிவுகள்