எச்சிவி வைரஸ் பாதிப்பு பற்றி தெரியுமா?

தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... என் அம்மாக்கு கொஞ்ச நாளாவே ஒடம்பு முடியலை எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தும் கூட எதுமில்லைன்னு சொன்னாங்களே தவிர என்ன ப்ரச்சனைன்னு கண்டுபிடிக்கலை. நிறைய டாக்டர்ஸ்கிட்ட போய் கடைசியா பாத்ததுக்கு எச்‌சி‌வி வைரஸ் ரத்தத்தில் கலந்துருக்குன்னு சொல்லிருக்காங்க. கொஞ்ச நாளுக்கு முன்ன காய்ச்சல் வந்துருந்துச்சு. டாக்டர்ட்ட போய் பாத்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டாங்க. இப்ப சொல்றாங்க அது டெங்கு காய்ச்சலா இருக்கும்னு... நேத்துதான் கோவைல பாத்தாங்க. அப்ப எச்சிவி-ன்னு சொல்லிட்டாங்க. ஒரு வருசம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்னு சொல்லிருக்காங்க. அதுக்கு முதல்ல ரத்தத்தை டெஸ்ட் பன்ன சொல்லிருக்காங்க. அது டெல்லில தான் டெஸ்ட் பன்னமுடியுமாம். இங்க எங்கயும் பன்ன மாட்டாங்களாம். 12000 செலவாகும்னு சொல்லிருக்காங்க அது மட்டும் இல்லாம மருந்து மாத்துரைகளுக்கு மட்டும் மாசம் 50000 ஆகும்னும் சொல்லிருக்காங்க. 12மாசம் கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்னு சொல்லிருகாங்க. 12 மாசம் எடுத்துக்கிட்டா கம்ப்ளீட்டா சரியாய்ரும்ன்னும் சொல்லிருக்காங்க. கடவுள் அருளால சீக்கிரமே அவங்களுக்கு சரியாய்ரனும் இதான் எங்க ப்ரார்த்தனை...

இதைப்பத்தி மேலும் ஏதாவது தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க எல்லாரும். என்ன மாறிய உணவுமுறைகள் எடுத்துக்கனும்? குழந்தையை பக்கத்துல விடலாமா? மத்தவங்களுக்கும் பரவுமா? வேற ஏதாவது ப்ரச்சனைகள் வருமா இதனால???

லதா எச்சிவி வைரஸ் பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்க சொன்ன பிறகு இதுமாதிரி இருக்கு என்று நினைக்க தோன்றுக்கிறது. தையரிமாக இருங்கள் லதா அம்மாவ ஒரு வருடத்திற்குள் குணமாகிடலாம் டாக்டர் சொல்லி இருக்காங்கள. அம்மா சீக்கிரம் குணமடைய இறைவனிடம் ப்ராத்தனை செய்கிறேன். இந்த வைரஸ் எதன் மூலம் பரவுவது டாக்டர் ஏதாவது சொன்னாங்களா லதா. அவர்களிடம் உணவு முறை பற்றி கேட்டு இருக்கலாமே.

லதா... HCV (Hepatitis C virus ) பற்றி படிச்சதை சொல்றேன். அது லிவரை தாக்ககூடிய ஒரு நோய். எப்பவும் ரத்த பரிசோதனையில் தான் கண்டுபிடிக்க முடியும். (PCR Test). இது இருந்தா பசியின்மை, காய்ச்சல், எடை குறைவு, வயிற்று வலி, மஞ்சள் காமாலை போன்ற சிம்ப்டம்ஸ் ஏற்படலாம். தொடுவதாலோ, அருகில் இருப்பதாலோ பரவாது. நேரடியாக இந்த நோய் தாக்கப்பட்டவரின் ரத்தம் மூலமே பரவும் (blood-to-blood contact). நோய் குணமாவது அவரவர் உடல் நிலையையும் நோயின் தாக்கத்தையும் பொருத்தது. 3 மாதம் முதல் 1 வருடம் வரை ஆகலாம். மருத்துவர் அறிவுரை படி ரத்தபரிசோதனை செய்து மருந்து கொடுங்கள். விரைவில் குணமடைய பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க அம்மா இறைவன் அருளால் விரைவில் குணமடைவாங்க. கவலைபடாதீங்க.

அன்புடன்
THAVAM

எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நலமா? பதிவுக்கு நன்றி... ஆமாம்பா இதைமாறி நானுமே கேள்விப்பட்டதே இல்லை இப்பதான் தெரியுது... எல்லாருமே தைரியாமாதான் இருக்கோம்... கண்டிப்பா ஒரு வருசத்துக்குள்ளயே சரியாய்ரும்னு சொல்லிருக்காங்க. அம்மாக்கு ரத்தத்தின் மூலமாதான் பரவிருக்கு... இன்னும் ஒரு டெஸ்ட் இருக்குப்பா அதை எடுத்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கும் போது தான் உணவுமுறைகளை பத்தி சொல்ரதா சொல்லிருக்கார் டாக்டர்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நலமா? நானும் நிறைய கூகுல்ல சர்ச் பன்னிப்பாத்து தெரிஞ்சுக்கிட்டேன் வனிதா. நீங்க சொன்னது ரொம்ப உதவியா இருந்துச்சு. நன்றிப்பா...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காது இந்த ப்ரச்சனை இருந்து சரியாய்ருக்கா? யாருக்காது இந்த ப்ரச்சனை இருந்து அவங்க ட்ரீட்மெண்ட் எடுத்து சரியாய்ருக்காங்களா? ப்ளீஸ் கொஞசம் சொல்லுங்க.....

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நாங்க கேரளால வேற ஒரு ஹாஸ்பிட்டல்ல பாத்தோம் பட் அங்க இருக்க டாக்டர்ஸ் நாங்க முதல்ல எடுத்த டெஸ்ட் எதையும் ஒத்துக்காம மறுபடியும் எல்லா டெஸ்ட்டையும் எடுக்க சொன்னாங்க. எல்லா டெஸ்ட்டும் முடிஞ்சு இப்ப அவங்க ஒன்னும் பன்ன முடியாதுன்னு சொல்றாங்க. ரொம்ப சீரியஸான கண்டிசன் இது சாரின்னும் சொல்றாங்க ப்ளீஸ் ட்ரீட்மெண்ட் எடுத்தா கண்டிப்பா சரியாய்ரும் தானே? இங்க பாத்த டாக்டர்ஸ் அவங்க சொன்ன மாறி எதுமே சொல்லலையே? எங்களுக்கு ஒன்னுமே புரியலை ரொம்ப பயமாருக்கு... மறுபடியும் இன்னொரு டாக்டர்கிட்ட பாக்கலாமா? யார் சொல்றதை நம்பறது? ட்ரீட்மெண்ட் எடுக்கலாமா? செலவைப்பத்தி எந்த கஷ்டமும் இல்லை அவங்க எங்களுக்கு கிடைச்சா போதும். உங்களுக்கு தெரிஞ்சா வேற ஸ்பெஷலிஸ்ட் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா கவலபடாதிங்க அமமா நல்லார்பாங்க

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

கடவுள் அருளால் உங்கள் அம்மா விரைவில் குணமடைவர்.டாக்டர் ஒரு வருடத்தில் சரியாகும் என கூறியிருக்கிறார் அத்துடன் உங்களின் அன்பான அரவணைப்பும் நம்பிக்கையும் உங்கள் அன்னையை வெகு சீக்கிரம் குணமடையச் செய்யும்.

நல்லாருக்கீங்களா? தேங்க்ஸ்பா உங்க கமெண்ட்க்கு... நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம். ப்ளட் டெஸ்ட்டுக்கு ப்ளட் குடுத்துருக்கோம். இன்னும் பதினஞ்சு நாள் ஆகுமாம் ரிசல்ட் வரதுக்கு. வந்தன்ன எவ்ளோ பரவிருக்குன்னு பாத்துட்டு தான் ட்ரீட்மெண்ட் பத்தி டாக்டர் சொல்றதா சொல்லிருக்காங்க. நம்ம தமவணி அண்ணா ஒரு டாக்டர் சொல்லிருக்கார் சேலத்தில. ரிப்போர்ட் வந்தன்ன அவரையும் ஒரு முறை போய் பார்க்கலாம்னு இருக்கோம்... பாக்கலாம் என்னதான் நடக்குதுன்னு...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்