அரிசி முறுக்கு

தேதி: March 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

புழுங்கல் அரிசி - 1/2 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
பொட்டுகடலை - 1/2 கப்
டால்டா - 50 கிராம்
உப்பு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
ஓமம் - 1 பின்ச்
பச்சை மிளகாய் - 2
கறுப்பு எள் - 3 ஸ்பூன்
எண்ணை - வறுக்க


 

அரிசிகளை ஊறவைக்கவும்.பொட்டுகடலையை பொடிக்கவும்
அரிசிகளையும்,பச்சைமிளகாயும் தண்ணீர் அதிகம் இல்லாமல் அரைத்து எடுக்கவும்..தண்ணீர் கூடினால் சரியாக வராது
அரைத்த அரிசியில் பொட்டுகடலை பொடி மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கெடுக்கவும்
இனி முருக்கு பிடியில் மாவை இட்டு ஒரு பெரிய துணி விரித்தோ அல்லது சின்ன சின்ன கவரில் பிழிந்தோ வைக்கவும்
அதே சமயம் எண்ணையை காயவைத்து பிழியும் முறுக்கை காய்ந்து போகும் முன் எண்ணையில் பொரித்து எடுக்கவும்


நமது சுவையின் விருப்பத்திற்கேற்ப இதனுடன் சின்ன வெங்காயம் இரண்டு சேர்க்கவோ,பூண்டு பல் இரண்டு சேர்த்து அரைக்கவோ செய்யலாம்..மணமாக இருக்கும்.டால்டா இல்லையென்றால் வெண்ணை 3 ஸ்பூன் சேர்க்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

அரிசியை மைய அரைக்க வேண்டுமா? அல்லது இட்லி மாவுக்கு அரைக்கும் பதத்திலா? என் பாட்டி வாணலியிலேயே முறுக்கு பிழிவதை பார்த்திருக்கிறேன். அப்படி செய்ய கூடாதா?

கொஞ்சம் கெட்டியாக அரைக்க வேண்டும்..இட்லி மாவை விடவும் கெட்டியாக இடியப்பத்திற்கு செய்யும் பருவத்தில் மாவு கடைசியாக இருக்க வேண்டும்

நன்றி தளிகா..