31/2 years baby

என் மகனுக்கு 31/2 வயதாகிறது இன்னும் பால் பாட்டிலில் தான் குடிக்கிறான் எப்படி அந்த பழக்கத்தை மாற்றுவது? அவன் டம்ளரில் பால் குடிக்கமாட்டுகிறான் அவன் இப்பொது தான் கொஞசம் பேசுகிறான் ஆனால் தெளிவாக இல்லை அது எப்பொது சரிஆகும்?
please help me friends

பால் பாட்டிலில் பழகின பிள்ளைகள் டம்ப்லரில் குடிக்க மறுக்கும் எல்லா குழந்தைகளும் அப்படி தான்..அதை பத்தி கவலை படாம நிறுத்துவது தான் நல்லது.
முதலில் ஓரிரு வாரம் பட்டில் பழக்கத்தில் கெடுததலி குழந்தை பாஷையில் மெல்ல சொல்லி புரிய வைய்யுங்க..பின்பு நல்ல சிப்பி கப்கள் வாங்கிட்டு பாட்டிலை தூக்கி போட்டுடுங்க..கண்ணில் அந்த பாட்டில் படாம பாருங்க...தானா மறக்கும்..முதல் கொஞ்ச நாளுக்கு மறுத்தாலும் பின்னாடி க்லாசில் குடிக்க பழகும்

ஹாய் ராஜி '
தங்கள் மகனுக்கு அவனுக்கு பிடித்த கார்ட்டூன் அல்லது விலங்கு உருவம் பதித்த CUP போன்றவற்றை வாங்கி விளையாட்டு கட்டி கொண்டு முதலில் தண்ணீர் கொடுத்து பழகவும். நீ பெரிய பையன் ஆகிவிட்டாய் என்று அடிகடி "பாட்டில் வேண்டாம் என்று" சொல்லி கொண்டே இருக்கவும்.
சுத்தமாக பேச வில்லை என்றால் டாக்டரை அணுக வேண்டும் .பேச ஆரம்பித்து விட்டதால் பயப்பட வேண்டாம்.
தங்கள் வீட்டில் செய்யும் சின்ன சின்ன வேலைகலை அவனிடம் சொல்லி கொண்டே இருக்கவும்.முதலில் சிறிய வார்த்தைகலை பயன் படுத்தும் . DAILY செய்யும் வேலை உதாரணம் "அம்மா காபி போட போகிறேன் KITCHEN னுக்கு " .என்பது போல அடிகடி பேசுவதால் ஆர்வத்தில் அவனுக்கு பேச தோன்றும். நான் இப்படித்தான் என் மகனை பழகினேன். என் கணவரும் ஆபீஸ் விட்டு வந்ததும் அவனிடம் பேசி கொண்டே இருப்பர் .என்னை விட அவர் பங்கு அதிகம் .MY SON AGE -2YRS 3MNTH "அம்மா காபி KITCHEN " என்ற அளவுக்கு சொல்லுகிறான் , தங்களும் முயற்சி செய்து பார்க்கவும்.

இது அனைவரது வீட்டில் நடப்பது தான். இதற்க்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். நமது சோம்பேறித்தனம் தான். குழந்தைக்கு ஒரு எட்டு மாதம் ஆனவுடன் அல்லது பல் முளைக்க ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு நாம் க்ளாஸ் அல்லது சிப்பி கப் பழக்கம் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு விவரம் தெரிந்து விட்டால் அதை மறக்கடிப்பது கடினம் தான். இருந்தாலும் முடியாது என்றில்லை.

பொன்ஷிவ் சொல்வது போல் நீங்கள் குழந்தைக்கு அவர்க்கு விருப்பாமான கார்டூன் படம் போடா கப் வாங்கி அதில் முதலில் தண்ணீர் பழக்கவும். கப் வாங்க செல்லும் போது அவரையும் அழைத்து செல்லுங்கள்...அவரையே தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அனால் வாங்கி கொடுக்கும் முன்னர் அவர்டிம் சொல்லுங்கள்....வீட்டில் இருக்கும் பாட்டிலை நீங்கள் தூக்கி எறிந்தால் தான் இது வாங்கி தருவேன் என்று....வாங்கிட்டு வீட்டிற்கு வந்த பின்னர் அவனிடம் அந்த பழைய பாட்டிலை கொடுத்து குப்பை தொட்டியில் தூக்கி போட சொல்லுங்கள். புது கப் உள்ள சந்தோஷத்தில் அவர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். பாட்டிலை மாற்றிய பின்னர் எந்த காரணம் கொண்டும் பால் குடிக்கவில்லை அதனால் பழைய பாட்டிலில் கொடுக்க வேண்டாம். அவர்கள் அந்த பழக்கத்தை விட மாட்டார்கள்.

சில குழந்தைகள் லேட்டாக தான் பேசுவார்கள். என் அக்கா பையன் கூட நான்கு வயதில் தான் பேச ஆரம்பித்தான். ஆரம்பிக்கும் போதே பெரிய பெரிய வாக்கியமாக பேசினான். சில குழந்தைகளுக்கு மழலை பெரியவர்கள் ஆனாலும் மாறாது. நாம் தான் அவர்கள் பேசும் போது திருத்திவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவனிடம் பேசுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களை பேச உற்சாக படுத்த வேண்டும். ஒரு கதை படித்து விட்டு அவர்களை அதை திருப்பி சொல்ல சொல்லுங்கள். இல்லை எதாவது ஒரு படத்தை காட்டி அதில் என்ன என்ன தெரிகிறது என்ற சொல்ல சொல்லுங்கள். அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தால் அவர்கள் சீக்கிரமே சரளமாக பேசி விடுவார்கள். நீங்கள் அவரை எதாவது ஒரு ப்ளேஸ்கூலில் சேர்த்து விடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி தளிகா, ponshiv,லாவண்யா என் மகன் சிலசமயம் சிப்பி கப்பில் குடிக்கிறான் ஆனால் பெரும்பாலும் பால் பாட்டிலில் தான் பால் குடிக்கிறான் நீங்கள் சொல்வதை முயற்சி செய்து பார்க்கிரேன் மிக்க நன்றி

மேலும் சில பதிவுகள்