க்ளாஸில் ஆயில் பெயிண்ட் செய்வது எப்படி?

தேதி: March 31, 2011

4
Average: 3.9 (12 votes)

 

வரைய விரும்பும் படத்தின் மிரர் இமேஜ் - ஒன்று
ப்ளெயின் கண்ணாடி
ஆயில் பெயிண்ட் தேவையான நிறங்கள்
ப்ரஷ்
க்ளாஸ் அவுட்லைனர்
தின்னர் மற்றும் பஞ்சு
லின்சீட் ஆயில்

 

வரைய விரும்பும் படத்தை வழக்கமாக ரிவர்ஸ் க்ளாஸ் பெயிண்டிங் செய்ய ஒட்டுவது போல் கண்ணாடியின் முன் பக்கம் ஒட்டிவிட்டு பின் பக்கம் படத்தை அவுட்லைனர் கொண்டு வரைந்து கொள்ளவும்.
முதலில் ஆயில் பெயிண்ட்டை தேவையான லின்சீட் ஆயில் கொண்டு கரைத்து தீட்டவும்.
பூக்களில் வர வேண்டிய மற்ற நிறத்தையும் இதே போல் ப்ரஷ் கொண்டு தீட்டவும்.
இப்போது இரண்டு நிறங்களும் கலந்து வர வேண்டிய பகுதியையும் மற்ற பகுதியையும் கை விரல்களால் தேய்த்து தீட்டவும். இப்படி விரலால் தீட்டும்போது வரி வரியாக இல்லாமல் பெயிண்ட் ஒன்று போல் பரவும். நிறங்கள் கலந்து வர வேண்டிய இடங்கள் (படத்தில் வரும் ஷேட்கள்) மிக கச்சிதமாக வரும்.
முன் பக்கம் திருப்பி பார்த்து நிறம் பரவ வேண்டிய இடங்களை சரியாக பின் பக்கம் விரலால் தேய்க்க வேண்டும். இப்போது படம் முழுவதும் வண்ணம் தீட்டி முடித்து காய வைக்கவும்.
இவை காய பெயிண்ட்டின் அளவு பொருத்து நாட்கள் ஆகும். குறைந்தது ஒரு வாரமாவது இது கை படாமல் காத்திருக்க வேண்டும்.
நன்றாக காய்ந்ததும் விரும்பிய நிற அட்டையை பின் பக்கம் கொடுத்து ப்ரேம் செய்து மாட்டுங்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனிதா!இது போல் எத்தனை விதமான வித்தைகள் வச்சிருக்கீங்க?!உங்கல அடிச்சிக்க ஆளே இல்ல போங்க!!!கண்ணு பட போகுது,மிள்காய் சுத்திப் போடுங்க!ஒரு பெண்ணிற்குள் இத்தனை திறமைகள் இருக்குன்னு நினைக்கும் போது எனக்கு பெருமையா இருக்குதுங்க!வாழ்த்துக்கள் வனி,அசத்துங்க!!!!!

Eat healthy

மிக மிக அழகாக இருக்கிறது வனி.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசியா... உங்க பதிவுக்கு மிக்க நன்றி. எல்லா பெண்களும் திறமைசாளிகள் தான்... சில நேரம் வெளி வருவதில்லை. அறுசுவையில் என்னை விட கெட்டிக்காறர்கள் அதிகம் பேர். இங்கே எல்லாரும் தரும் ஊக்கமும் ஆதரவுமே என்னை புதிதாக செய்ய வைக்கிறது. அதனால் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... ரொம்ப ரொம்ப நன்றி. செபா ஆன்ட்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்

vanitha mam... painting romba alaga iruku...niraya thiramai ungata iruku mam... vaalthukal
By
D.Kodi

எப்பிடி வனிக்கா உங்களால மட்டும் இப்பிடியெல்லாம் முடியுது.....ரொம்ப சூப்பரா இருக்கு...வாழ்த்துக்கள் வனிக்கா.....

பாத்திமா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொற்கொடி... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுமதி... ட்ரை பண்ணுங்க உங்களாலையும் முடியும்... இதை விட அழகா செய்வீங்க. மிக்க நன்றி. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா வில்வர் நீங்க எல்லாத்திலயும் வல்லவரப்பா. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று... ஆகா... யாரோ எங்கப்பா பேரை சொதப்பிட்டாங்களே'னு நினைச்சேன்... படிச்சதும் புரிஞ்சுடுச்சு ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புரிஞ்சிடுச்சில்லே ஒகே .

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெண்களின் விழுகாடு குறைதுள்ளது.
இது வருத்தத்திற்குரியது.

வனி க்ளாஸில் ஆயில் பெயிண்ட் பண்ணலாம் சொல்லி இருந்தீங்க. அனுப்பி வைச்சிட்டீங்களே நன்றி. தெளிவான விளக்கத்துடன் அழகா சொல்லி காண்பிச்சி இருக்கீங்க. ரொம்ப நாள் கழித்து க்ளாஸ் பெயிண்டிங் ஆசை நிறைவேறியது. உங்க முறைப்படி நேற்றுதான் செய்து முடித்தேன். அடுத்து காபி பெயிண்டிங் மீராபாய் படம் ப்ரிண்ட் அவுட் எடுத்தாச்சு இனி வரைய வேண்டியதுதான். லின்சீட் ஆயில், இந்த ஆயில் பெயிண்டிங்காக உபயோகப்படுத்த கூடியதா வனி.

வினோஜா... மிக்க நன்றி. க்ளாஸ் பெயிண்ட்டிங் முடிச்சுட்டீங்களா??? ரொம்ப சந்தோஷம் வினோ. காபி பெயிண்ட்டிங்கும் சூப்பரா முடிச்சுடுங்க. நான் ஒன்னு துவங்கினேன் இன்னும் முடிச்சபாடில்லை. ;( லின்சீட் ஆயில் தான் ஆயில் பெயிண்டுக்கு பைன்டிங் மீடியம். கலந்தா கொஞ்சம் பெயிண்ட்ட லூஸ் பண்ணி, ஷைனிங்கும் கொடுக்கும். ட்ரை ஆக்கும் தன்மை கொண்டது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி கலக்குறிங்க சூப்பர் ..தேர்வு செய்த கலரும் அருமை

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி... மிக்க நன்றி. :) தங்கச்சி சாய்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தெரிஞ்ச ஒரு தோழி பெயிண்டிக்குன்னு நிறைய வகுப்பு போயி கத்துகிட்டு நிறைய செய்வாங்க..

வீட்டு கண்ணாடி ஜன்னலில் இதுபோல் நிறைய கலர்கலர் பூக்கள் சிரிக்கும்

அத பார்க்கும்போதெல்லாம் அதுபோல் செய்யணும்னு தோணும்

அவங்ககிட்ட கேட்டா அதெல்லாம் க்ளாஸ் போயிதான் கத்துக்கமுடியும்..கேட்டு எல்லாம் பண்ணமுடியாதுன்னு சொல்வாங்க..அப்படியா?

இதவிட கிளாஸ் பெயிண்டிங்க் எளிதா இருக்குமா?இல்ல நேரடியா இத முயற்சி பண்ணலாமா?

உங்க பெயிண்டிங்க் கலக்கலா இருக்கு...பார்த்தவுடனே செய்யலாம்னு ஆசை இருக்கு

.இதுவே ஷாப்ல கொள்ளை விலையா இருக்குமில்ல..

வாழ்த்துக்கள்

இப்பவே உங்களையும் உங்க வீட்டு எல்லா கைவினைகளையும் பார்க்க
ஆசை :-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வணக்கம் வனிதா...

ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா இருக்குங்க.கைவசம் நிறைய வித்தைகள் வச்சுருக்கீங்க..வாழ்த்துக்கள்.

எனக்கும் கிளாஸ் பெயிண்டிங் பண்ண ரொம்ப ஆசை. முயற்சி பண்ணினேன்.கொஞ்சம் சுமாரா வந்தது.அவுட்லைன் சீராக வரவில்லை.சில இடங்களில் சீராகவும்,சில இடங்களில் அதிகமாகவும் இருந்தது.ப்ராக்டிஸ் பண்ணத் தான் சரியாகும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் என் போன்ற beginners க்காக சில டெக்னிக்ஸ் சொல்லித்தரலாமே?
அல்லது தனி பகுதியாக.. க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி? என்று பேசிக் -ல் இருந்து சொல்லித்தரலாமே?

இரண்டு குட்டீஸ்களை வைத்துக்கொண்டு நீங்கள் இவ்வளவு குறிப்புகள் கொடுப்பதே பெரிய விஷயம்தான்.
ஒரு ஆர்வத்தில்தான் கேட்கிறேன்..தவறாக நினைக்க வேண்டாம் தோழி...

கவிதா.

anbe sivam

இளவரசி... உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

நான் எந்த பயிற்சியும் எடுக்கல... நான் அறுசுவைக்கு அனுப்பிய ஒவ்வொரு க்ளாஸ் பெயிண்ட்டிங்குமே நான் செய்த முதல் பெயிண்டிங் தான். எனக்கு எப்படி செய்யணும்'னு ஒரு ஐடியா இருந்தது செய்தேன்... அந்த அனுபவத்தில் சரியா பெயிண்டிங் செய்ய என்ன செய்யலாம்'னு குறிப்பும் அனுப்பினேன். அவ்வளவு தான்.

அப்படி இருக்கும் போது அறுசுவையில் பார்த்து இப்படி தான் செய்யனும்'னு தெரிஞ்சுகிட்ட நீங்க செய்ய முடியாதா? கண்டிப்பா செய்யலாம். முதல்ல பழக வேண்டியது அவுட்லைனர் கொண்டு வரைய தான். அது பழக்கத்தில் நல்லா வரும். எனக்கு ஹென்னா கோன் பயன்படுத்தும் பழக்கம்... சுலபமா போச்சு.

தைரியமா வீட்டில் உதவாத கண்ணாடி தட்டு ஏதும் இருந்தா முதல் அடெம்ப்ட் அடிங்க. இல்லன்னாலும் நான் பயன்படுத்தி இருக்கும் கண்ணாடியே விலை 25 ரூபாய் தான்... வாங்கியே பெயிண்ட் செய்து பாருங்க. இல்லன்னா முதலில் ஒரு பேப்பர் அல்லது வேஸ்ட் டைல்ஸ் இருந்தா அதுல அவுட்லைனர் கொண்டு வரைந்து பழகிட்டு அதே டிசைனை க்ளாஸில் வரைங்க. இது எல்லாமே நீங்க பயப்படாம தைரியமா வரைய தான் சொல்றேன்.

விலை கொடுத்து வாங்கினால் அதிகம் தான் என்பதை விட... நாமே செய்த ஒரு பொருளை பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி.

அவசியம் மாலே வாங்க, நான் செய்தா எல்லா வேலைகளும் அங்கே தான் இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா... மிக்க நன்றி.

நான் குறிப்பில் கொடுத்திருக்கும் டெக்னிக் படிச்சாலே சுலபமா பண்ணிடலாம். அவுட்லைனர் சரியா வரலன்னு சொல்றீங்க... ஒன்னு பண்ணலாம்... நேரடியா அவுட்லைனர் கொண்டு வரையாம அவுட்லைனரை ஹென்னா கோன் போல் செய்து அதில் கொஞ்சம் எடுத்து வெச்சுகிட்டு வரைங்க. ஓட்ட சின்னதா உங்க வசதிக்கு போட்டுகிட்டா சுலபமா இருக்கும் இல்லையா.

இன்னொரு ஐடியா... நீங்க வரைய போகும் அதே படத்தை முதலில் ஒரு பேப்பர் அல்லது வேஸ்ட் டைல்ஸ்'ல வரைந்து அவுட்லைனர் கொடுத்து பாருங்க. அதே டிசைன் மீண்டும் கண்ணாடியில் வரையும் போது எங்க கஷ்டமா இருந்தது, எப்படி எந்த வாட்டத்தில் வரைந்தா சுலபமா வரும்'னு தெரிஞ்சுடும். அப்போ கஷ்டப்படாம அழகா வரையலாம்.

நீங்க சொன்ன மாதிரி இன்னும் சுலபமா வரைய என்ன செய்யலாம்'னு யோசிச்சு கைவினை இழையில் எழுதறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகோ அழகு.. வனி,ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.சகல கலா வல்லினு உங்களுக்கு ஒரு பட்டம் தரலாம்.

radharani

ராதா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு.. இது எல்லாம் பொறுமையா செய்ற உங்களுக்கு ஒரு சல்யூட்.. என் அக்கா இதெல்லாம் நல்லா செய்வாங்க.. டைலரிங், பெயிண்டிங், ஃபேப்ரிக் பெயிண்ட். ஸ்டோன் ஒர்க், மெஹந்தி, சாயில் பெயிண்ட்ங்.. எம்பிராய்டரினு.. நீங்க செய்றதை பார்த்தால் அவ நியாபகம் தான் வரும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா,

இது தான் முதல் தடவை செய்றீங்கன்னு வேற சொல்றீங்க....அது எப்படிங்க நீங்க செய்தா மட்டும் முதல் தடவையிலே ப்ரெசென்ட் பண்ற அளவுக்கு இருக்கு.....பாராட்டுக்கள். உங்களின் ஸ்ட்ரோக் அனைத்துமே பிரமாதம்.
மேலும் பல வித்தைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் சமையல் அறையில் மாதிரி......என் கைவினை என்ற ஒரு பகுதி ஆரம்பித்து அவரவர் வீட்டில் செய்த கைவினைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைக்கிறன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிதா,
அருமையான வொர்க்.ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

எனக்கு நிறைய வேலை கொடுக்குறீங்க.உங்க ரெசிப்பிக்கு பதிவு போடணும்,உங்க கதைகளுக்கு பின்னூட்டம் கொடுக்கணும்,உங்க க்ளாஸ் பெயிண்டிங்கை பாராட்டணும், ;-)
கிடைக்கிற கொஞ்ச நேரமும்,உங்களுக்கு பதிவு போட்டே செலவாயிடுது. ;-) அறுசுவையில் வேற எதுவும் பார்க்க டைம் பத்தல. :-(

வனிதா..

பதிலளித்ததற்கு நன்றி.நீங்க சொன்ன மாதிரி முயற்சி செய்து பார்க்கிறேன் பா.

நன்றி.
கவிதா.

anbe sivam

ரம்யா... மிக்க நன்றி. உங்க அக்கா இப்போ எங்க இருக்காங்க? நானும் அக்கா தானே? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா... மிக்க நன்றி. ஆமாம் இது எல்லாமே இதுவே முதல் முறை நான் செய்தது. நம்பிக்கையோட வரைய வேண்டியது தான். ;) வரலன்னா எடுத்த போட்டோ'வ டெலீட் பண்ணிட்டு போவேண்டியது தான். ஹிஹிஹீ. நீங்க சொன்ன யோசனை நல்லா இருக்கு... அண்ணா யோசிப்பார்ன்னு நினைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா... //எனக்கு நிறைய வேலை கொடுக்குறீங்க.உங்க ரெசிப்பிக்கு பதிவு போடணும்,உங்க கதைகளுக்கு பின்னூட்டம் கொடுக்கணும்,உங்க க்ளாஸ் பெயிண்டிங்கை பாராட்டணும், ;-)
கிடைக்கிற கொஞ்ச நேரமும்,உங்களுக்கு பதிவு போட்டே செலவாயிடுது// - இதை படிச்சு நான் சிரிச்சுகிட்டே இருக்கேன். என்னடா முகப்பில் எல்லாம் "வனிதா"னு இருக்குன்னு அசந்துட்டேன்... உள்ள வந்ததும் தான் தெரியுது... நம்ம ஹர்ஷா மேடம் வந்திருக்காங்கன்னு. மிக்க நன்றி ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா.. இந்தியால இருக்காங்க.. உங்களையும் சேர்த்து தான்.. ;)..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிதா... செய்து பாருங்க, எதாவது சந்தேகம் வந்தா தயங்காம இங்க கேளுங்க, நிச்சயம் சொல்றேன். ஒன்னு பண்ணிட்டா அப்பறம் நீங்க அசத்துவீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹிஹிஹீ.... நன்றி ரம்யா. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எத்தனை பேரு தான் வைக்க? ஹ்ம்ம் முடியல போங்க. தெளிவான படங்கள், அருமையான விளக்கம். கலர் காம்பினேஷன் பிரமாதம். அடுத்த படைப்புக்காக காத்து இருக்கிறோம்.. கலக்குங்க. :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் வனி,ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்...........

உன்னை போல பிறரையும் நேசி.

வார்த்தைகள் தேடிகிட்டு இருந்தேன் என்ன சொல்றதுனு தெரியல் அக்கா. ரொம்ப அழகா நேர்த்தியா செய்திருக்கீங்க. அது எப்படி பார்த்தத பார்த்தப்படி செய்ற கலை சிலரிடம் தான் இருக்கும் அதில் நீங்களும் உண்டு. தெளிவான விளக்கங்கள் படங்கள் கண்ணை கவருது.

சுகி... //எத்தனை பேரு தான் வைக்க// - நல்ல பேரா வைக்கும் வரை எத்தனை பேரு வேணும்னாலும் வைக்கலாம் ;)

//கலர் காம்பினேஷன் பிரமாதம்// - தங்கச்சி சாய்ஸ்

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சுகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி தேவி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி... //வார்த்தைகள் தேடிகிட்டு இருந்தேன்// - கிடைச்சுதா?? ;) ஹிஹிஹீ. கோச்சுக்காதீங்க.

//அது எப்படி பார்த்தத பார்த்தப்படி செய்ற கலை சிலரிடம் தான் இருக்கும் அதில் நீங்களும் உண்டு// - எதையாவது பார்த்து செய்தா தானே அதே மாதிரி செய்யறோமான்னு யோசிக்கனும்... நாம தான் பார்க்கிறதே இல்லையே ;) தோணுற மாதிரி செய்ய வேண்டியது தான்.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி யாழினி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ அப்போ எதையுமே பார்க்காமலே இவ்வளவு அழகாக செய்றீங்களா. கலக்குங்க கலக்குங்க.

யாழினி... எல்லாரும் எதையாவது கத்துக்க நினைச்சா எதையும் பார்த்து அப்படியே காபி பண்ண கூடாது... பார்த்து ஒரு ஐடியா கிடைச்சதும் நம்ம நம்ம விருப்பத்துக்கு செய்து பார்க்கனும்... அப்போ தான் என்ன பண்ணா எப்படி வரும்... என்ன தப்பு பண்றோம் எல்லாமே புரியும், அது தான் ஒரு விஷயத்தை நாம முழுசா கத்துக்க உதவும். அரச இலை பெயிண்ட் பண்ணப்போ நான் ஃபாப்ரிக் பெயிண்ட் பயன்படுத்தினேன்... ஊரி போச்சு. ஊறாம இருக்க எந்த பெயிண்ட் சரின்னு யோசிச்சு மாத்தினேன். அது தான் அனுபவ பாடம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்...........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நல்லா இருக்கு.. நான் கிளாஸ் பெயிண்ட் வச்சி பண்ணி இருக்கேன். இந்த முறையில் செய்து பார்த்துட்டு செல்றேன்..
உங்களுடைய அழகான குறிப்புக்கு என் வாழ்த்துக்கள்.

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

சுவர்ணா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லக்ஷ்மி... மிக்க நன்றி. க்ளாஸ் பெயிண்ட்டை விட இது ரொம்ப நல்லா வரும் அவசியம் செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா