வாழ்வின் முதலடி எடுத்துவைக்கும் என் மகனுக்கு வாழ்த்துக்களும்...ஆசிகளும்..........

வெளிஉலக வாழ்வில் முதல் அடியாக நாளை பள்ளிக்கு செல்கிறான் என் மகன் பிரவின்ராஜா,அவனுக்கு என் வாழ்த்துக்கள்........ நீங்களும் வாழ்த்துவீர்களென நம்புகிறேன்...........
சீதாம்மா,ராதா,அனைவரும் நலமா?

ஹாய் ரேணுகா,

பிரவின்குட்டிக்கு என் அன்பான் வாழ்த்துக்கள். நல்ல பண்புள்ள, அறிவுள்ள, பாசமுள்ள பிள்ளையாக வளர என் வாழ்த்துக்கள்!

ஹாய் பிரியா நலமா? மிக்க நன்றிப்பா....வீட்டில் அனைவரும் நலமா?

பிரவினுக்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ரேணு உங்கள் மகன் ப்ரவீன் பார் போற்றும் மிக பெரிய வல்லவனாகவும் நல்ல மனம் படத்தை மனிதனாகவும் இந்த உலகில் வளம் வருவான் அதற்கு என் வாழ்த்துக்கள்.
ஜாலியான மூட்ல தான இருக்காரு? மனதளவில் ரெடியா இருக்காரா?

ப்ரவீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

பூங்காற்று,யாழினி.....
நன்றிகள்.........
நல்லா கேட்டீங்க யாழ்,இங்கு வந்து பாருங்கள் அவன் பண்ணும் சேட்டையை....ஸ்லேட்,பென்சில்,புக்ஸ்,வாட்டர் பாட்டில் எல்லாத்தையும் ஸ்கூல்பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டு அலும்பு பண்றான்பா... அவங்க அப்பா ஆபீஸ் போரச்சேல்லாம் எனக்கும் ஸ்கூல் லேட்டாச்சு கொண்டிவிடுங்கன்னு சொல்றான்...
நேரா LKG விடலாம்னா அவன் ஸ்கூல்போகனும்னு (அடம்தாங்காமலே)தொல்லை பண்ணியதாலே இப்ப PRE KG சேர்த்திட்டோம்....

ஓ ரொம்ப ஆர்வமா தான் இருக்காரு ப்ரவீன் சார். ஆமாம் ரேணு இப்ப உள்ள பசங்கலாம் ரொம்ப ஸ்போர்ட்டிவ் அப்பறம் ஆர்வமாவும் இருக்காங்கப்பா. உங்களுக்கு பிரச்சனை இல்லை ரேணு ஆனான் நீங்க பயப்படாமல் இருங்கப்பா அவன் எல்லாத்தை சமாளிச்சு வந்துடுவான்.

ரேணு ... சூப்பர். முதன் முதலில் பள்ளிக்கு போறானா குட்டி. கண்ணா... நல்லா படிச்சு அப்பா, அம்மா'கு நல்ல பேர் வாங்கி கொடுக்கனும்'னு நான் சொன்னென்னு சொல்லுங்க. எதிர் காலத்தில் அவன் சிறப்பா வர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழ்,வனி.............
ஆமாம் யாழ் பசங்க ஸ்போட்டிவ்தான்,எனக்கு என்ன பயம்னா பிரவின்ராஜா தூங்கும்போதுதான் ஒரு இடத்தில் இருப்பான்.... முழிச்சுட்டான்னா அவன் பின்னாடியே நான் ஓடனும் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு இவனிடம் வேளையிருக்கும்.மிஸ் பொறுக்கமுடியாமல் அடித்திவிடுவார்கலோ என்றுதான்.நானே சில்லக்கூடாது இருந்தாலும் சொகிறேன் இவனை அடிக்காமல் அவன்வழியில் விட்டால் நிறைய கற்றுக் கொள்வான்ப்பா....இக்காலத்தில் அனைத்து குழந்தைகளும்(நான்பார்த்தவரையில்)ஸ்பீடுதான்ப்பா...
வனி கண்டிப்பா சொல்கிறேன் வனி...வாழ்த்துக்கு நன்றி வனி...

பிரவீனுக்கு என் அன்பு ஆசிகள். கல்வியில் பல ஏற்றங்களை காண கடவுளிடம் பிரார்த்திக்கிரேன். ஹாய் பிரவீன் செல்லம் ஆல் த பெஸ்ட் கண்ணா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்