வாழ்வா? சாவா?

அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.நான் இந்த பகுதிக்கு புதியவள்.
என் மனதில் நிறைய குழப்பங்களும், வேதனைகளும்,சொல்லில் அடங்காதவை.பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன்.தயவு செய்து உதவுங்கள். நான் யுஏயில் வசித்து வருகின்றேன்.எனக்கு 3 பெண் பிள்ளைகள்.வயது 11, 10, 8.நான் இங்கு 3 வருடங்களாக வசித்து வருகின்றேன்.என் கணவர் இங்கு வேளை செய்கின்றார்.நான் வீட்டில் தான் இருக்கின்றேன்.என் சொந்த ஊர் இலங்கை.அங்கு எங்களுக்கு என்று செந்தமாக வீடு ஏதும் இல்லைங்க.நான் அங்கு நிறைய கஷ்டப்பட்டேன்.என் கணவர் இங்கு வந்து 6 மாதத்தில் தான் நானும் என் பிள்ளைகளும் இங்கு வந்தோம்.இந்த நாட்டிள் எல்லாவற்றிட்கும் நிறைய பணம் தான் வேண்டும்.என் கணவர் உழைக்கும் பணத்தில் வீட்டு வாடகை,சாப்பட்டு செல்வு,ஸ்கூல் ஃபீஸ் என்று போனால் எதுவுமே மிச்சம் இல்லைங்க. சரி பரவாயில்லை ச்ந்தோஷமாக சரி இருக்கின்றோமே என்று இவ்வள்வு நாட்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.ஆனால் தற்ப்போது திடீர் என்று என் கணவர் என்னையும் எனது பிள்ளைகளயும் பாரமாக நினைக்கின்றார்.எங்களை திரும்ப எங்கள் நாட்டுக்கே போகும்படி சொல்கின்றார்.நான் அங்கு போனால் கணவர் இல்லாமல் தனியாக கஷ்டப்படுவதும் அவருக்கு நண்றாகத் தெரியும்.எனக்கு துனைக்கு இருப்பதற்கும் அங்கு யாரும் இல்லை.இப்படி பல பிரச்சிணைகள். தற்போது எனக்கு வாழ்க்கைஎன் கணவர் நான் அவருடன் இல்லை என்றால் கோல் பன்னுவதோ அன்பு காட்டுவதோ கிடயாது.பணத்தை மட்டும் அனுப்புவதோடு சரி.நான் இப்போது அநாதையான மாதரி ஒரு பீளிங்..
வாழ்க்கையே வெறுக்கின்றது.நான் என்ன முடிவு எடுப்பது? தயவு செய்து உதவுங்க

பாரமாக இருக்கிறது என்று எதோ ஒரு கவலையில் விரக்தியாக சொல்லியிருப்பார்..இங்கு குடும்பத்தோடு வாழ்வது அதுவும் சிக்கனமான குறைந்த வருமானத்தில் ரொம்ப ரொம்ப கஷ்டம்..நல்லா யோசிங்க..ஒன்னு வீட்டில் நீங்கள் எதாவது செய்யலாம்..படித்திருந்தால் வேலைக்கு போங்க..இல்லையென்றால் தைய்யல் தெரிந்தால் தைக்கவோ அல்லது எதாவது சில கேம்ப்,ஆபீஸ்கள் பழக்கமிருந்தால் சமைத்து கட்டி கொடுத்தால் நல்ல வருமானம் வரும்..ஆனால் இது லீகலி முடியாது என்று நினைக்கிறேன்.
அவருக்கு ஒன்று சம்பாதிப்பதில் உபகாரமாக இருக்க பாருங்க இல்ல சொந்த நாட்டில் எப்படியாவது சமாளிக்க பாருங்க..மனசில் தைரியம் இருந்தால் எங்கும் எதையும் சாதிக்கலாம்..சொந்த நாட்டில் சில காலம் தனியாக தங்கியிருந்து எப்படிசமாளிக்க முடியுமா என்று யோசிங்க

எனக்கு தையள் நன்றாகத் தெரியும்.அதனுடன் பூ வேளைப்பாடுகளும் தெரியும்.படித்து இருக்கின்றேன்.அசிஸ்டன்ட் டீச்ச்ர் வேளைக்காக அப்ளலை செய்துள்ளேன் ஆனால் எந்த பயனும் இல்லை.உங்களுக்கு தெரிந்த ஏதேனும் வேளை (தையள் சம்பந்தப்பட்ட) இருந்தால் சொல்லவும்.பிலீஸ்

தோழி ஹுரையா வெளிநாட்டில் வசிக்கும் போது கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் கட்டுப்படியாகும் என்று மற்றவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். கட்டுப்படியாகாத செலவுக்கு மத்தியில் அங்கே வாழ்வதும் பலனில்லை. நீங்கள் சொல்வது போல் சந்தோசமாகவாவது இருக்கலாம் தான். ஆனால் 3 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் ஆவர்களது எதிர்காலத்தையும் பார்க்க வேண்டும்.அதனால் நீங்கள் இலங்கைக்குப் போனால் உங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியுமாகும்/ பிள்ளைகளை கவர்ன்மென்ட் ஸ்கூலில் சேர்க்கலாம். நாட்டில் இருந்தால் உங்களுக்குத்தெரிந்த கை வேலைகளைக்கூட செய்யலாம். டியூசன் வகுப்புகள் எடுக்கலாம். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள், அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் .ஊருக்குப் போனல் கணவர் உங்கள் மீது அன்பு காட்ட மாட்டார் என்று கூறியிருந்த்தீர்கள் உங்கள் இருவரையும் நம்பி 3பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை சொல்லிப்புரிய வையுங்கள் நீங்கள் அவர் மீது வைத்துள்ள பாசத்தை செயலில் காட்டுங்கள் . ஆலோசனை சொல்வது இலகு தான் செயல் படுத்துவது கடினம்தான். ஆனாலும் மனம் தளராதீர்கள் கணவருடன் மனம் விட்டுக்கலந்தாலோசித்து முடிவெடுங்கள். அந்த முடிவு உங்கள் வாழ்வில் விடிவைத்தோற்றுவிக்க வேண்டும் என பிரார்த்திது விடை பெறுகிறேன். மாஷா அல்லாஹ்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

எனக்கு புரியிது பூங்காற்று.உங்களுக்கு நன்றி.நான் யோசித்து நல்ல முடிவொன்ரிற்கு வருகின்றேன்.

தோழியே முதலில் தலைப்பை மாற்றுங்கள். நீங்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. 3 பெண் பிள்ளைகளை பெற்ற தாய் இது போல மனம் உடைந்து பேசினால் உங்களை நம்பியிருக்கும் பிள்ளைகள் என்னாவது? யோசித்து பார்த்தீர்களா? உங்களுக்காவது கணவர், குழந்தைகள் உள்ளார்கள். இதில் எந்த உறவுகளும் இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்.உங்களுக்கு இப்போது பொருளாதார பிரச்சனை பெரிதாக இருந்தாலும், அதை விட பெரிய பிரச்சனை உங்களிடம் தன்னம்பிக்கை இல்லாதது தான்.முதல் வேலையாக மனதளவில் தெளிவாகுங்கள்.

//தற்ப்போது திடீர் என்று என் கணவர் என்னையும் எனது பிள்ளைகளயும் பாரமாக நினைக்கின்றார்.எங்களை திரும்ப எங்கள் நாட்டுக்கே போகும்படி சொல்கின்றார்.//

உங்கள் கணவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை கவனிக்கவும், பிள்ளைகள் படிப்புக்குமே சரியாக உள்ளது என்று சொன்னீர்கள். அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு குடும்பத்தையும் வைத்துக் கொண்டு சேமிப்பதென்பது மிகவும் அரிதான ஒன்றே. அதனால் தான் என்னவோ உங்கள் கணவர் உங்களை குழந்தைகளோடு ஊருக்கு திரும்ப சொல்லியிருக்கிறார். உங்களுக்கு 3 பெண் பிள்ளைகள் என்று வேறு சொன்னீர்கள். குழந்தைகளின் எதிர்கால சேமிப்பு கருதியும் அவர் அப்படி சொல்லியிருக்கலாம்.உங்களையும், குழந்தைகளையும் பாரமாக நினைத்திருந்தால் ஏன் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருக்க போகிறார். 3 வருடங்கள் அங்கேயே வைத்திருக்க போகிறார்? யோசித்து பாருங்கள்.உங்கள் மூத்த பெண்ணுக்கு இப்போதே 10 வயதாகிறது. இன்னும் ஓரிரு வருடங்களோ அல்லது மூன்று வருடங்களோ கழித்து அவள் பெரியவளாகலாம். உங்களுக்கென எந்த சேமிப்போ சொந்த வீடோ இல்லை.அவர் அதையெல்லாம் கருத்தில் கொண்டு இனி குழந்தைகளுக்காக சேமிக்க முடிவெடுத்திருப்பார். அது குடும்பத்தை அவருடனே வைத்திருந்தால் நடக்காது. தனி நபராக இருந்தால் சம்பாத்தியத்தில் பெருமளவு சேமிக்க முடியும்.

//கோல் பன்னுவதோ அன்பு காட்டுவதோ கிடயாது.பணத்தை மட்டும் அனுப்புவதோடு சரி.//

உங்கள் கணவர் வெளிநாட்டுக்கு போன 6 மாதத்தில் உங்களையும் அங்கே அழைத்து கொண்டார் என்று சொன்னீர்கள். இந்த 6 மாதத்தை வைத்து அவர் எப்போதுமே கால் பண்ண மாட்டார் என்று சொல்ல முடியாது தோழியே. ஏனென்றால் அவர் அங்கே போன புதிது. சம்பளத்திற்கு தகுந்தாற் போல தானே போன் பேச முடியும்? தவிர அங்கே அவரின் சூழ்நிலை எப்படி இருந்திருக்குமோ? உங்கள் மீதும், பிள்ளைகள் மீதும் அன்பில்லாதவர் எப்படியோ போகட்டும் என்று ஊரிலேயே விட்டிருக்கலாம் இல்லையா? ஆனால் அப்படி செய்யாமல் ஏன் செலவு செய்து உங்களை அங்கே அழைத்து சென்றார்? தோழியே, நீங்கள் தனியாக இருப்பதால் இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்.

ஓய்வு நேரத்தில் உங்களுக்கு தெரிந்த, பிடித்த கைவேலைகளை செய்து பாருங்கள். நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை பாருங்கள். அவள் விகடன் புத்தகம் வாங்கி படியுங்கள். அதில் பெண்கள் எந்த அளவிற்கு வாழ்க்கையில் அடிபட்டு, அதிலேயே மூழ்கிவிடாமல், போராடி நீந்தி கரையேறி தொழில் தொடங்கி வெற்றி கொடி நாட்டி இருக்கிறார்கள். அதை போன்ற சில நிகழ்ச்சிகளை படித்தால் நீங்கள் ஓரளவு மனத்தெளிவு அடைவீர்கள்.

நீங்கள் இந்தகால தலைமுறையை சேர்ந்தவர். என் தாய் அந்த காலத்து பெண்மணி (1957ல் பிறந்தவர்) நாங்கள் மூவருமே பெண் பிள்ளைகள் தான். அம்மா திருமணத்திற்கு முன்பு கூட வெளி உலகம் அறியாதவர். திருமணத்திற்கு பிறகு ஏறக்குறைய நாங்கள் தலையெடுத்த பிறகு, ஏன் இன்று கூட வெளியில் வந்ததில்லை. என் தந்தை தரும் சொற்ப சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்தி மூவரையும் படிக்க வைத்து, வீடு வாசலாக்கி, சிறப்பாக திருமணம் செய்து சீர் எல்லாம் செய்தார். வீட்டிலேயே சீட்டு பிடிப்பது, மற்றும் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி இதையெல்லாம் செய்தார். அவர் தந்த நம்பிக்கையில் தான் வீட்டை கட்டினோம். வீட்டின் ஒவ்வொரு முக்கிய முடிவுகளையும் எடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் வைத்துள்ளார். அவராலேயே முடியும் போது, நீங்கள் இந்த தலைமுறையை சேர்ந்தவர். நீங்கள் எத்தனையோ சாதிக்கலாமே.

கடவுள் மனிதர்களை சாவதற்காக படைக்க வில்லை. வாழ்வதற்கே படைக்கிறார். சாதிப்பதும், வீணாக இருந்து மாண்டு போவதும் அவரவர் கைகளில் தான் உள்ளது.நீங்கள் படித்திருந்தால் உங்கள் ஊரில் வேலைக்கு முயற்சி செய்து பாருங்கள். அல்லது உங்களுக்கு தெரிந்த கைதொழிலில் சாதிக்க பாருங்கள். உங்கள் பெற்றோர் குறித்தும், கணவரின் பெற்றோர் குறித்தும் நீங்கள் எங்குமே குறிப்பிடவில்லை.

தோழியே அதிகமாக பேசி உங்களை மேலும் துயரப்படுத்திவிட்டேன் போலும். நான் பிறகு வந்து பேசுகிறேன். நல்லதே நடக்கும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அருமையாக சம்பாதிக்கக் கூடிய இரண்டு திற்மைகளை வைத்திருக்கிறீர்கள்..ஒன்று டியூஷன் எடுப்பது..கை நிறைய பணம் கிடைக்கும்.
நீங்கள் எப்படி எது என்று பார்க்காமல் உங்கள் ஃப்ளொரில் உள்ள எல்லோரிடமும் சொல்லி வையுங்க..ஒரு பிள்ளை வந்து நல்ல படிக்க வைத்தால் நிறைய குழந்தைகள் மெல்ல மெல்ல வருவார்கள்..ஒரு குழந்தையிடம் 150௨00 திர்ஹம் வாங்குகிறார்கள்..அதற்கு மேலும் கூட வாங்குகிறார்கள்,...ஒரு 15 குழந்தைகள் சேர்வது ஒன்றும் கடினமே அல்ல.
தைய்யல் தெரிந்தாலும் அப்படியே முடிந்தால் அருகிலுள்ள இந்தியன் சோஷியல் சென்டெர் அல்லது எதாவது இம்மாதிரியான இடங்களில் சென்று நிறைய நோடீஸ் போட்டு வைத்து வரலாம்..இப்படியாக மெல்ல மெல்ல தான் ஒவ்வொன்றும் தெரியவரும்..சம்பாதிக்க தொடங்கிவிட்டால் உங்கள் ப்ரச்சனை மறிஅந்து விடும்..
கணவரும் வந்து ஆறு மாதம் தானே ஆகிறது இன்னும் போக போக பதவி உயர்வு சம்பளம் ஹைக் எல்லாம் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையிலும் வசந்தம் வரத் தான் போகிறது

மேலும் சில பதிவுகள்