தேதி: April 4, 2011
மெகந்தி கோன்
உங்கள் உள்ளங்கையில் பேனாவைக் கொண்டு ஒரு சதுரம் வரைந்து அதை 4 பாகமாக பிரிக்கவும்.

ஒவ்வொரு சதுரத்தையும் மீண்டும் 4 பாகமாக பிரிக்கவும். இப்போது மொத்தம் 16 கட்டங்கள் இருக்கும்.

ஒரு கட்டத்தில் கூட்டல் மற்றும் பெருக்கல் குறி போட்டு படத்தில் இருப்பது போல் செய்யவும்.

இதே போல் எல்லா கட்டங்களிலும் வரையவும்.

முதல் கட்டத்தில் படத்தில் இருப்பது போல் ஒரு கட்டம் விட்டு ஒரு கட்டத்தை மருதாணி கொண்டு நிரப்பவும்.

அடுத்த கட்டம் ஆரம்பிக்கும் போது முதல் கட்டத்தில் மருதாணி இல்லாத இடத்திலிருந்து மருதாணி பூச ஆரம்பிக்கவும்.

இதே போல் ஒவ்வொரு கட்டமாக செய்து முடித்தால் படத்தில் இருப்பது போல் பூக்கள் டிசைன் வரும்.

விரல்களுக்கும் அதே போல் ஒரு கட்டம் வீதம் ஒவ்வொரு விரலுக்கும் 3 கட்டங்கள் வரைந்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த கட்டங்களையும் மேலே சொல்லியது போல் மருதாணிக் கொண்டு நிரப்பவும். அழகான பூக்கள் டிசைன் உங்கள் கைகளில் தவழும்.

இலை மருதாணி வைத்தால் இந்த டிசைனுக்கு இன்னும் நல்லா இருக்கும். மருதாணி வைக்க சரியாக வராதவர்கள் இப்படி பேனாவில் முதலில் வரைந்துக் கொண்டு செய்தால் நன்றாக வரும்.

Comments
மெஹந்தி
வித்தியாசமாக இருக்கு நிஸ்ரினா. அழகா இருக்கு, பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
rasia madam
simply super desin.keep it up. last week i was tried your previous mehandi desin it came out well.regards.g.gomathi.
rasia
ஹாய் தோழி, அழகா இசியா இருக்கு..........கண்டிப்பா இன்னைக்கே போட்டு பாக்குரேன். வாழ்த்துக்கள்..............
உன்னை போல பிறரையும் நேசி.
ரஸி
இப்படி கூப்பிடுவதற்கு முன், முன்னால் மெஹந்தி டிசைன் போஸ்ட்டிக்கில் என்ன பதில் தந்திருக்கீனு பார்த்தேன்.. ரொம்ப நன்றி ரஸி..
சரி மேட்டருக்கு வரேன்.. மீண்டும் ஒரு சூப்பரான , வித்தியாசமான டிசைன் குடுத்திருக்கிங்க.. வாழ்த்துக்கள் ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
அன்பு ரசியா
அன்பு ரசியா... ரொம்ப ரொம்ப வித்தியாசமான அழகான டிசைன். போட தெரியாதவங்க கூட அழகா போட்டுடலாம். வாழ்த்துக்கள். :) கலக்கறீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி இமா!
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க!
Eat healthy
thank u so much gomathi!
thnx for ur wish!congrats for my design came well,i m so happy & try this new design!
Eat healthy
தோழி தேவி!
போட்டு பார்த்துட்டு சொல்லுங்க தேவி!
Eat healthy
ரமி (ரம்யா)
நானும் உங்களை செல்லமா ரமின்னு கூப்பிடரேன்,ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு!
Eat healthy
அன்பு வனிதா!
"கலக்குறீங்க" இல்ல...கலக்குவோம்!!!ஹிஹிஹி!நன்றி வனி!
Eat healthy
ரெசியா
சலாம் ரெசியா....நலமா?
ரொம்ப சூப்பரா இருக்கு..கண்டிப்பா நானும் போட்டு பார்ப்பேன்...
வாழ்த்துக்கள்....
ஹசீன்
salam lulu
நான் நலம் நீங்க நலமா?போட்டு பார்த்துட்டு சொல்லுங்க லுலு!நன்றி!
Eat healthy
ரஸியா,
ரஸியா,
வித்தியாசமான டிசைன்.அழகா போட்டு இருக்கீங்க.மேலும் பல குறிப்புகள் அனுப்புங்க.வாழ்த்துக்கள்.
ரஸியா
ரஸியா மற்றொரு அழகான, எளிமையான டிசைன சொல்லி கொடுத்து இருக்கீங்க சூப்பர். சின்ன குழந்தைகள் கூட ஈஸியா மெகந்தி போட்டுக்கலாம் இந்த டிசைன பார்த்து தொடர்ந்து அசத்துங்க. வேற என்ன கைவினையெல்லாம் செய்வீங்க தெரிஞ்சா அதையும் சொல்லி கொடுங்க ரஸியா.
harshaa
மிக்க நன்றி ஹர்ஷா!அடுத்த குறிப்பும் அனுப்பியாச்சு!
Eat healthy
நன்றி வினோஜா
நான் மெஹந்தி ஏதோ ஓரளவுக்கு போடுவேன்,கைவினைகளிலும் ஆர்வம் உண்டு,முடிந்தளவு எனக்கு தெரிந்ததை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக் கொள்கிறேன்!நன்றி!
Eat healthy
mehandi
ஹாய் ரஸியா! வணக்கம்.உங்கள் குறிப்பு சுலபமாகவும் அழகாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.
hello gangamanikandan
உங்க பாராட்டுக்கு நன்றிங்க!போட்டு பார்த்தீங்களா?
Eat healthy
assalamu alaikum
hai nisrina h r u? super desain, nan kandipaha pottu parpen.realy super. gud ni8.
alaikumus salam
hello kasmukthar!i m fine & how r u?thank u so much n have a nice day
Eat healthy
hai
i am samiha . fine , nenga rompa supera comment anupurenga.nenga yanna panrenga madam.
hai samiha
sorry for the late reply,i m a housewife..........etha vachi naan supera comment anuppurenu solreenga samiha???????????
Eat healthy