Wart removal - உங்க சிகிச்சை அனுப‌வ‌த்தை சொல்லுங்க‌...

எனக்கு நடுமுதுகில் ஒரு மரு (முதலில் சின்னதா இருந்தது, இப்ப கொஞ்சம் பெரிசா வளர்ந்துட்ட மாதிரி தெரியுது! :( , இருக்கு). இதனால் எந்த வலியும் இல்லை, பிரச்சனையும் இல்லை. சென்றமுறை டெர்மட்லாஜிஸ்டிடம் ஜஸ்ட் கேட்டபோது, இது ரொம்ப நார்மல், அடுத்தமுறை வரும்போது சொல்லுங்க, கொஞ்சம் பெயின் கில்லர் மெடிசன் போட்டு 'கட்' செய்து ரீமூவ் செய்துவிடலாம் என்று கேஷுவலாக சொன்னாங்க.

நான் ஊரில், அம்மாவிடன் முன்பு எப்போதோ இதுகுறித்து சொல்லிக்கொண்டு இருந்தபோது, இங்கே இந்தியா வரும்போதுகூட ஈஸியா எடுத்துவிடலாம். (அப்பாக்கு சின்ன சைசில், கையில் இருந்த ஒன்றிரண்டை அப்படிதான் எடுத்தாங்க, என்று அம்மா சொன்னாங்க.)

தோழிகள் யாராவது இந்த மாதிரி, மரு ரீமூவ் பண்ணி இருக்கிங்களா? வெளிநாட்டிலா? இல்லை, இந்தியாவிலா?
இந்தியாவில் எந்த‌‌ மாதிரி மெத்த‌ட் பின்ப‌ற்றுகிறார்கள்?.
இதுபோல மருவை ரீமூவ் செய்தால் வலி இருக்குமா?! இல்லை, எதுக்கு வம்பு, என்று பேசாம விட்டுவிடவா?!
இதற்கு ஏதேனும் வீட்டு வைத்தியம் இருக்கா?!

நிறைய கேள்விகள்தான்! :) என்ன செய்ய, ஒரே குழப்பம். தோழிகள், கொஞ்சம் பதில்,சிகிச்சை அனுப‌வ‌த்தை சொல்லுவிங்களா?!

ஹாய் சுஸ்ரீ, இந்தவாட்டி ஊருக்குப் போனப்போ முகத்தில் இருந்த மருக்களை எல்லாம் நீக்கினேன். ஆனால் டாக்டர் ஒரு சில மருக்களை எடுக்க மாட்டேனு சொல்லிட்டார் :(. அவற்றை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துதான் நீக்க வேண்டுமாம். சாதாரணமான wart நீக்குவது போல் Electro-cauterization செய்து நீக்கினால் பின்னர் பிரச்சினை வருமாம். அதனால் மருத்துவர் யோசனை படி செய்யுங்கள்.

Electro-cauterization செய்தால் மரு பெரியதாக இருந்தால் அதில் ஒரு ஊசி போட்டு எலக்ட்ரிக் ஸ்பார்க் செய்து நீக்கி விடுவார்கள். ஊசிபோடும் போது எறும்பு கடிப்பது போல் ஒரு வலி இருக்கும் அவ்வளவுதான். முகத்தில் மிகச்சிறிய அளவில் இருந்தால் ஊசி எதுவும் போடாமல் நேரடியாகவே எலக்ட்ரிக் ஸ்பார்க் செய்து நீக்கி விடுவார்கள். எனக்கு அதிகம் வலி இல்லை. புருவம் த்ரெட்டிங் செய்யும் போது ஏற்படும் வலி போல்தான் இருக்கும்.

நீக்கியபின் ஒருவாரத்திற்குள் முழுவதும் குணமாகி விடும். ஆண்டிசெப்டிக் ஆயிண்ட்மெண்ட் மட்டும் போட்டுக் கொண்டால் போதும். பயப்படவே வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பேர் சரிதானா? நல்லாருக்கீங்களா? என் ஹஸ்ஸோட அண்ணாக்கு பின்கழுத்துல சின்னதா வந்த மரு பெருசா வளர்ந்துருச்சு. அதுக்கு ஒரு தலைமுடியை எடுத்து இருக்க அதைச்சுத்தி கட்டி விட்டாங்க. ஒரு வாரத்துல அதுவா விழுந்துருச்சு. மறுபடியும் வளரலை. சோ ட்ரை பன்னிப்பாருங்க முடிஞ்சா.....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் சுஸ்ரீ,
நலமா இருக்கீங்களா?எனக்கு ஒரு வருடத்திற்க்கு முன் கையில் மோதிர விரலில் சின்ன மரு போல் வந்தது.ஆனால் கொஞ்ச நாட்களில் பெரிதாகி வலி வர ஆரம்பித்து விட்டது.எந்த பொருட்களையும் தூக்க முடியாமல் போனது.துணி பிழிய முடியாது.சரி இங்கு உள்ள டெர்மெடோலஜிஸ்ட்டிடம் சென்றேன்.அவர் அதனை பார்த்து விட்டு அதை கட் செய்து விடலாம்.ஒன்றும் பிரச்சினையில்லை.உடனே என் கணவர் வலி எதுவும் இருக்குமா என்றார்.டாக்டர் அதெல்லாம் இருக்காது.வலி தெரியாமல் இருக்க ஊசி போடுவோம் என்றார்.

தெரியா தனமாக டாக்டர் சொல்லை நம்பி சென்றேன்.ஊசி போடும் போதே சிறிது வலித்தது.சரி என்னதான் செய்கிறார்கள் என்று அவர்கள் செய்வதை பார்த்து கொண்டு இருந்தேன்.electro cauterization method எலெக்ட்ரிக் ஸ்பார்க் போல் ரொம்ப மெலிதான ஸ்பார்க்கை கொண்டு அந்த இடத்தில் சுற்றி காண்பித்து கொண்டே இருக்க உள்ளிருந்து அந்த மருவின் வேர் வெளியே வர அதனை கட் செய்தார்கள்.

அவ்வளவு தான்.பேன்டேஜ் போட்டு அந்த விரல் முழுக்க சுற்றி விட்டார்கள்.அப்போது சிறிது தான் வலி இருந்தது.ஏனென்றால் அந்த இடம் முழுக்க மறுத்து போயிருந்தது.ஆனால் ஊசி போட்ட இடம் ரொம்ப வலித்தது.இதனை முழுக்க நர்ஸ் தான் செய்தார்கள்.டாக்டர் மேற்பார்வையிட்டு சென்று விட்டார்.பிறகு நர்ஸிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்.எனக்கு இந்த மரு ஆரம்பித்த போது ரொம்ப சிறிதாக ஒரு வேர்க்குறு போல் தோல் மேல் இருந்தது.பிறகு நிறம் மாறி லேசான கருப்பான மருவாக மாறியது.அதே போல் எல்லா உள்ளங்கையின் விரலின் மேல் இதே போல் ரொம்பா சிறிதாக உள்ளதை காட்டினேன்.டாக்டரிடம் கேட்டதற்க்கு அதெல்லாம் சரியாகி விடும்.இந்த பெரிய மருவை மட்டும் நீக்கி விடலாம் என்றார்.

அந்த நர்ஸிடம் காண்பித்த போது,இந்த மருவை போல் இது அத்தனையும் பெரிதாக வாய்ப்புண்டு என்றார்.அப்போதும் இதே முறையில் தான் நீக்குவோம் என்றார்.இதை கேட்டதும் திக்கென்றது.ஏனென்றால் இந்த வலியே தாங்க முடியலை.பத்து விரலுக்குமா?????என்று நினைக்கும் போதே பயம் தொற்றி கொண்டது.

அந்த நர்ஸிடம் மருந்தை கொண்டு சரி செய்ய மாட்டார்களா?என்றேன்.அலோபதியில் இப்படி தான்.இதற்கு ஒரே வழி நீங்க ஒரு ஹோமியோபதி டாக்டரை சென்று பாருங்கள்.அங்கு தான் முழு தீர்வு வலி இல்லாமல் காண முடியும்.அப்படியா!!!என்று கேட்டு கொண்டேன்.உடனே அந்த நர்ஸ் நான் இப்படி சொன்னேன் என்று டாக்டரிடம் கூறி விடாதீர்கள் என்று என்னிடம் கேட்டு கொண்டார்.என்ன இந்த நர்ஸ் இப்படி சொல்கிறார் என்று என் கணவரிடம் புலம்பி கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

சுமார் ஒரு மணி நேரம் சென்று இருக்கும்.வலி என்னால் தாங்கவே முடியல.மருத்து போகும் ஊசி எவ்வளவு நேரம் நீடிக்கும்.......கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வலி உயிர் போனது.டாக்டர் கொடுத்த பெயின் கில்லர் மாத்திரைகளை எடுத்தாலும் வலி குறையல.கிட்டத்தட்ட 10 நாள் வலி இருந்தது.இதில் என்ன ஒரு விஷயம் என்றால்,அவர்கள் ஆபரேட் செய்த இடத்தில் தழும்பு இல்லை.மருத்து போகும் ஊசி போட்ட இடத்தில் பான்டேஜை சுற்றி அழுத்தமாக கட்டியிருந்தார்கள்.2 நாள் கழித்து தான் பிரிக்க வேண்டும்.

எப்பட பிரிப்போம்னு ஆச்சு.அந்த ஊசி போட்ட இடத்தில் இன்றும் தழும்பு உள்ளது.அத்தோடு அந்த டாக்டருக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டேன்.என் கணவர் தான் புலம்பி கொண்டே இருந்தார்,அந்த டாக்டர் வலிக்காது என்றார்,நீ இப்படி துடிக்கிறாயே என்பார்.எனக்கு இரண்டு குழந்தை உள்ளது.எப்படி கவனிப்பே??ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்.

மற்ற விரல்களில் உள்ளதை குணப்படுத்த என் கணவர் இணையதளத்தில் ஹோமியோபதி டாக்டரை தேடி கண்டுபிடித்து விட்டார்.என்னை கேட்டால் ஹோமியோபதி ட்ரீட்மென்ட் தான் பா இதற்கு சிறந்தது என்பேன்.என் கணவரின் நண்பர் கூட இந்த ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டதால் சீக்கிரமே 15 நாளில் குணமாகி விட்டது என்றார்.ஆனால் அவர் சிகிச்சை எடுத்து கொண்டது இந்தியாவில்.

இங்கு நாம் எங்கே போவது என்று அலோபதியில் போய் நான் பட்ட பாட்டை அவர் பார்க்க முடியாமல் இங்கேயே நெட்டில் ஹோமியோபதி டாக்டரை தேடி கண்டுபிடித்து விட்டார்.

ஹோமியோபதி தான் பா பெஸ்ட்!!!

ஹாய் கவிசிவா, லதாவினீ & சுகன்யா,

முதலில் உங்க பதிவுக்கு மிக்க நன்றி கவிசிவா, லதாவினீ & சுகன்யா. அடுத்தது, தாமதமான என் பதிலுக்கு சாரி. நானும் ஒரு வாரமா வந்து உங்க எல்லோருக்கும் பதில் போடனும்னு நினைக்கிறேன். எங்கே, ஒரே வேலை + உடம்பும் கொஞ்சம் சரியில்லை, அதான், தாமதம். சரி, இப்ப விஷயத்துக்கு வரேன்.

ஹாய் கவிசிவா,

எப்படி இருக்கிங்க? இந்தியா ட்ரிப் எல்லாம் நல்லா போச்சா?! என் அம்மாவும் இதைதான் சொன்னாங்க கவிசிவா. அப்பாக்கு எடுத்தப்ப சுத்தமா வலியே இல்லை, சும்மா எறும்பு கடிப்பதுப்போல இருந்தது! : ) அப்புறம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று!.

என் ஹஸ் என்னடாவென்றால், ஆமாம், நாம போறதே மொத்தம் 4 வாரம்! - அவ்வளவுதான் எனக்கு லீவு! :( இந்த ஷார்ட் டைம்ல, இதுவேற அங்க போய் செய்துகிட்டு கஷ்டப்படாதே. எப்படி இருந்தாலும், ஒரு வாரம் கொஞ்சம் டிஸ்கம்பர்ட்டா இருக்கும் இல்லையான்னு கேட்கிறார். பேசாமா இங்கேயே நிம்மதியா எடுத்துட்டு, ரெஸ்ட் எடு என்கிறார்! சோ, இதுவும் என் குழ‌ப்ப‌த்திற்கு ஒரு கார‌ண‌ம். பார்க்க‌லாம், இன்னும் குழ‌ம்பிட்டேதான் இருக்கேன். :( க‌ட்டாய‌ம் உங்க‌ ப‌தில் ரொம்ப‌ யூஸ்ஃபுல்லா இருந்தது, மீண்டும் ந‌ன்றி க‌விசிவா.

**********************************************************
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ஹ‌லோ ல‌தாவினீ,

ஆமாம், நீங்க‌ என் பேர‌ க‌ர‌க்ட்டாதான் சொல்லி இருக்கிங்க‌! :) உங்க‌ ப‌திலுக்கு ரொம்ப ந‌ன்றி. முன்பு யாரோகூட‌ இதுபோல‌ சொல்லி நான் கேள்விப்ப‌ட்டேன்!. ஆனால், சொன்ன‌ சிரிக்க‌ கூடாது... எனக்கு சொன்ன‌வ‌ங்க‌, வெறும் சாதார‌ண‌ முடி என்று சொல்ல‌வில்லை. குதிரை வாலில் உள்ள‌ முடி என்று சொன்னாங்க‌! :) :)
அத‌ற்கு இங்க, நான் எங்க‌ போவேன்?!! அத‌னால் அதைப்ப‌ற்றியே நான் சிந்திக்க‌வேயில்லை. இப்ப‌ நீங்க‌ சொல்ற‌த‌ பார்த்தா, இது ஒருமுறை ட்ரை ப‌ண்ணிட‌லாம் போல‌ இருக்கே?!! மீண்டும் உங்க‌ ப‌திவுக்கு ந‌ன்றி லதா.

*********************************************************
ஹாய் சுக‌ன்யா,

உங்க‌ ப‌திவுக‌ள் சில க‌டி ஜோக்ஸ், புதிர் ப‌க்க‌த்தில (பழைய இழைகள்)கொஞ்ச‌ம் ப‌டிச்சிருக்கேன். ஜாலியா இருக்கும்!. உங்க‌ளோட‌ ம‌ரு நீக்கிய‌ சிகிச்சை அனுப‌வ‌ம் ப‌திவு ப‌டித்த‌தும் ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருந்த‌து. அப்பா, எவ்வ‌ள‌வு வ‌லி அனுப‌விச்சிருப்பிங்க‌?!! அய்ய‌ய்யோ.... சான்ஸே இல்லை! :( எனக்கு நினைக்கவே பயமா இருக்கு.

ச‌ரி, இப்ப‌ நீங்க‌ சொல்ற‌தை பார்த்தா, ஹோமியோப‌திதான் இதுக்கு பெஸ்ட்டா?! இப்ப எவ்வளவு நாளா ஹோமியோபதி டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க சுகன்யா? குணம் தெரிந்ததா?! ஹோமியோபதியில் ரிசல்ட் ரொம்ப ஸ்லோவாகத்தான் கிடைக்கும் என்கிறார்களே? அது உண்மையா?!

அடுத்து என‌க்கும் உங்களோட‌ அதே பிர‌ச்ச‌னைதான்! இங்க‌ நான் எங்க‌ன்னு போய் ஹோமியோப‌தி டாக்டரை தேடுவேன். நீங்க‌ த‌ப்பா நினைச்சிக்க‌லைன்னா, உங்க‌ ஹ‌ஸ் க‌ண்டுபிடித்த‌ டாக்ட‌ர் பெய‌ர் த‌ர‌முடியுமா?! நெட்டில் கிடைத்த‌வ‌ர் என்ப‌தால், சிகிச்சைக்கும் அதே முறையில் தொட‌ர்பு கொண்டீர்க‌ளா? ம‌ருவை பார்க்காம‌ல் எப்ப‌டி மருந்து த‌ருவார்க‌ள். சாரி, ரொம்ப‌ கேள்விக‌ள் கேட்கிறேனென்று நினைக்கிறேன். உங்க‌ளுக்கு முடியும்போது ப‌தில் கொடுங்க‌ள். நன்றி!

மொத்தத்தில், இன்னும் எனக்கு குழ‌ப்ப‌ம் தீர்ந்த‌‌ பாடில்லை. :( இந்தியப்பயணத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கு, ஆக, இன்னும் கொஞ்சம் யோசித்து மீண்டும் வ‌ருகிறேன். அனைவ‌ருக்கும் மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

எப்படிபா இருக்கீங்க?பரவாயில்லையே என்னை ஞாபகம் வெச்சிருக்கீங்க!!!ரொம்ப சந்தோஷம்...ஆமாம்பா அந்த ட்ரீட்மென்டை இப்ப நினைத்தாலும் துடிச்சு போயிடுவேன்.

என்னை கேட்டால் ஹோமியோபதி தான் பெஸ்ட்.எனக்கு கொஞ்சம் ஸ்கின் அலர்ஜி உள்ளதால் இப்ப அதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன்.ஆனால் மரு நீக்க சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்தது.இப்ப அது சரியாகி விட்டது.ஆனால் கொஞ்சம் ஸ்லோ தான்.சுமார் 6 மாதம் ஆனது.நான் நேரில் சென்று தான்பா பார்த்தேன்.அவர் பெயர் Dr.Raji chandran.

நான் இருப்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE).நீங்க இருப்பதோ அமெரிக்காவில்.இந்தியாவில் கொடுக்கபடுகின்ற சிகிச்சை சீக்கிரமாக குணமாவதாக சொல்கிறார்கள்.நீங்க இந்தியா செல்லும் போது நல்ல ஹோமியோபதி டாக்டராக பாருங்கள்.

எனது தோழி ஒருவர் இங்கிருந்து இந்தியாவில் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார்.அவங்களுக்கு தெரிந்த டாக்டராம்.அதனால் இங்கிருந்து அவங்க அம்மாவிற்க்கு அறிகுறிகளை சொல்லி,அவங்க அம்மா அந்த டாக்டரிடம் சொல்லி,அங்கிருந்து மருந்து அனுப்பி வைப்பார்களாம்.யாராவது இங்கிருந்து இந்தியாவிற்க்கு வெக்கேஷன் செல்லும் நண்பர்கள் வரும் போது மருந்தை இங்கே கொண்டு வந்து அவர்களிடம் கொடுப்பார்கள்.

எனக்கு அப்படி தெரிந்த டாக்டர் இல்லாததால் நான் இங்கேயே சிகிச்சை எடுத்து கொண்டேன்.எனக்கு கொடுத்த மருந்துகள் ஜெர்மன் ஃபார்முலாவால் உருவாக்கப்பட்டது.அதனால் எனக்கு குணமாக கொஞ்ச காலம் எடுத்தது.ஏன்னா இங்க துபாயில் இந்திய ஹோமியோபதி மருந்துகள் விற்க தடை.அதனால் இந்த டாக்டர் அத்தியாவசியம் என்றால் இந்திய மருந்தை பரிந்துரைப்பார்.இந்திய ஃபார்முலா என்றால் சீக்கிரம் குணமடையும் என்று நினைக்கிறேன்.

எப்படி சொல்றேன்ன்னா எனக்கு பரிந்துரைத்த சில மருந்துகள் எடுத்து கொண்டும் பலன் தரவில்லை என்றால்,அந்த டாகடர் வேறு மருந்து எழுதி கொடுப்பார்.அது இந்தியாவில் மட்டுமே கிடைக்கும்.யாராவ்து வெக்கேஷன் முடிந்து வரும் போது வாங்கி வர சொல்லி எடுத்து கொள்வேன்.

நீங்க ஊருக்கு போகும் முன் அங்கு உள்ளவர்களிடம் ஹோமியோபதி டாக்டர் விலாசத்தை தேடி கண்டுபிடித்து வைக்க சொல்லுங்கள்.நீங்கள் போய் வரும் ஒரு மாத காலத்தில் டாக்டரை பார்க்க நேர்ந்தால்,ஒரு முறை நேரில் டாக்டரை சந்தித்து உங்கள் ப்ரச்சனையை முழுமையாக சொல்லுங்கள்.அவரிடம் இது போல் தாங்கள் மீண்டும் வர முடியாது என்றும்,அதற்கு பதில் நெட்டில் அந்த மருவின் நிலைமையை ஃபோட்டோ எடுத்து அம்மாவிடமோ அல்லது தெரிந்தவரிடம் கொடுத்தனுப்பினால் தங்களால் சிகிச்சை அளிக்க முடியுமா என்று கேட்டு பாருங்கள்.

அட போங்கப்பா....இது வேலைக்கு ஆகாது என்று நினைச்சீங்கன்னா அமெரிக்காவிலேயே ஏதாவது ஹோமியோபதி டாக்டர் இருக்கிறாரா என்று பாருங்கள்.கண்டிப்பா இருப்பாங்க.உங்களுக்கு சீக்கிரமே குணமடையும்பா.பல வழிகள் இருக்கும் போது வீணா குழம்பி கவலைப்படாதீங்க.ஓகேவா..

சுஸ்ரீ,
லதா சொன்னது போல் நானும் ட்ரை பண்ணி இருக்கிறேன். முடி மெல்லியதாக எடுத்தால் அறுந்து போகும். தடிமனான முடி அல்லது தையலுக்குப் பயன்படுத்தும் மெல்லிய நைலான் த்ரெட் போதும். இரண்டு மூன்று நாளில் விழுந்துவிடும். ஆனால் சிலது கட்ட முடியாத மாதிரி சிறியதாக இருக்கும்.

இப்படிக் கட்டி விட்ட சிலது விழுந்து பிறகு வளரவில்லை. ஒரு இடத்தில் விழுந்து காணாமல் இருந்தது. பிறகு ஒரு பத்து வருஷம் கழித்து திரும்ப ஹாயா வளர்ந்து இருக்கு. ;) எனக்கு அது வெளியே தெரிகிற மாதிரி இல்லை. வலி என்றும் இல்லை. அதனால் அப்படியே விட்டு விட்டேன்.

தொட்டு வைப்பதற்கு ஆசிட் விற்பார்கள். அந்த இடத்தில் மட்டும் படுகிற மாதிரி வைக்க வேண்டும். ப்ளாஸ்டர்களும் இருக்கு.

எது பண்ணுறதா இருந்தாலும் சேஃப் தானா என்று பார்த்துப் பண்ணுங்க. எல்லாக் காய்களும் ஒரேவிதமா இருக்காது. பார்க்க சந்தேகமா இருந்தால் வீட்டில எதுவும் பண்ணாம போய்க் காட்டிருறது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

வாஅர்ட் treatment செரந்தது Hஒமெஒபத்தி. மருதுவர்ரை அனுகவும் electric cauterization
வெலை சையவில்ல்லை.

I love cooking, sharing eating and enjoying.

வாஅர்ட் treatment செரந்தது Hஒமெஒபத்தி. மருதுவர்ரை அனுகவும் electric cauterization
வெலை சையவில்ல்லை.

I love cooking, sharing eating and enjoying.

Hi,

wart removal ku erukkam poo pall wart irukka edathula vachitte vandha 1 week la wart irundha edam theriyama udhirndhu pogum. idhu en sondha anubavam. endha valiyum irukkadhu. aana 1 week atleast 1 or 2 times per day vaikkanum. try pannunga.

மேலும் சில பதிவுகள்