போட்டோ ஃப்ரேம்

தேதி: April 7, 2011

4
Average: 3.9 (15 votes)

 

கெமிக்கல் க்ளே
ஸ்டோன்ஸ்
பென்சில்
கத்தி
ஊசி

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். க்ளேவை நன்றாக கலந்து தயார் செய்யவும்.
சப்பாத்தி இடுவது போல் க்ளேவை இட்டு செவ்வகமாக (உங்களுக்கு விரும்பிய வடிவில்) வெட்டவும்.
அதன் நடுவே இன்னொரு செவ்வகத்தை வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்த சின்ன செவ்வகத்தை இன்னும் மெல்லியதாக இடவும். முதலில் வெட்டிய செவ்வகத்தை விட சின்னதாகவே இருக்க வேண்டும். சின்ன சின்ன குச்சிகள் போல் மூன்று செய்யவும்.
மூன்று குச்சிகளையும் அந்த மெல்லிய செவ்வகத்தின் ஓரங்களில் படத்தில் உள்ளது போல் ஒட்டி விடவும். இப்போது ஃப்ரேமின் பின் பக்கம் தயார்.
முதலில் வெட்டிய செவ்வகத்தில் விரும்பிய டிசைனை வரைந்து கொள்ளவும்.
அதில் விரும்பிய நிறத்தில் ஸ்டோன்ஸ் ஒட்டி அழகுப்படுத்தவும்.
சிறு உருண்டைகளாக 5 செய்து அதை வட்டமாக சேர்த்து ஒட்டவும்.
அந்த உருண்டைகளின் நடுப்பகுதியில் ஊசி கொண்டு அழுத்தவும். நடுவே இன்னொரு சின்ன உருண்டையை செய்து ஒட்டவும். இப்போது இது பூ போல் இருக்கும்.
இந்த பூவை ஃப்ரேமின் முன் பகுதியில் ஒட்டவும்.
ப்ரேமின் பின் பக்கத்தையும் ஒட்டி முடிக்கவும். குச்சிகள் முன் பக்கத்துக்கும், பின் பக்கத்துக்கும் நடுவே வர வேண்டும். இது படம் வைக்கும்போது இடைவெளி கிடைக்க உதவும். ஒரு மெல்லிய தட்டு போல் சின்னதாக இட்டு இதன் கீழே ஒட்டினால் (ஸ்டாண்ட்) ப்ரேம் நன்றாக வைக்க இயலும்.
இப்போது போட்டோ ஃப்ரேம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் வனி நீங்க குட்டிஸ் எல்லோரும் நலமா?
வாவ்... வனி சூப்பரா இருக்கு.
அவ்வளவு அழகா செய்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள்:)அதில் உங்க குட்டீஸ் போட்டோ வைத்து
இருந்தால் நாங்க பார்த்து இருப்போம்...

ஹசீன்

சுப்பரா இருக்கு வனி. பக்கத்துல இருக்கிறவர்... ;) அழகா இருக்கிறார்.

‍- இமா க்றிஸ்

வனி சூப்பரா இருக்கு உள்ளே இருக்கிறது நீங்கதானா? (சும்மா தெரிஞ்சுக்க)

வனி சிம்பிள் போட்டோ ஃப்ரேம் அழகா இருக்கு. குழந்தைகள் ஈசியா செய்திடலாம் இந்த க்ராஃப்ட்ட. ஃப்ரேமுக்கு இன்னும் அழகு கொடுக்கறது அந்த பிள்ளையார் தான்.

சிம்பிளா சூப்பரா இருக்கு வனி..;) உங்களை மாதிரியே
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பரா இருக்கு வனி நானும் ட்ரை பண்ணி பார்த்துட்டு போட்டோ எடுத்து உங்களுக்கு மெயில் பண்ணுறேன்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனிதா மேம்...உங்கள் photo Frame மிகவும் அருமை .... வனி மேம் கெமிகல் Clayku பதில் Chack Powder and White Glue வைத்து பன்னலாமா ...... ப்ளீஸ் சொலுங்க ....

BY
கொடி

சூப்பரா இருக்கு வனி

நிறைய க்ளே இருக்கு வீட்டில ...நிச்சயம் என் பொண்ணை செஞ்சு பார்க்க

வைக்கணும்..பார்த்துவிட்டு சொல்கிறேன்

இதுமாதிரி நிறைய யோசித்து போடுங்க

உங்கபொண்ணுக்கு கவலையே இல்ல....நீங்களே எக்ஸ்பெர்ட் எல்லாம் நல்லா சொல்லி கொடுக்கமுடியும்...

உங்கள மாதிரி தோழி பக்கத்துல இருந்தா நல்லா யிருக்கும்...என்ன பண்றது அந்த தொல்லையிலிருந்து தப்பிக்கத்தான் நீங்க தள்ளி இருக்கீங்க :-)

வாழ்த்துக்கள் வனி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனிதா மேடம்,
ரொம்ப அழகா இருக்கு
என் மகளுக்கு வருங்காலத்தில் உபோயோகப்படும் குழந்தைகளுக்கு ஏற்றார் போலே crafts செய்யுங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

chance se illa vani.suuperrb

super a irukku nanum try panni parpen

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹசீனா... அனைவரும் நலமே. மிக்க நன்றி. குட்டீஸ் போட்டோ வைத்திருந்தா என்னவர் ஒதைப்பாரே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... மிக்க நன்றி. அவரை என் தங்கையின் புது காருக்கு பரிசாக செய்து கொடுத்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாத்திமா... மிக்க நன்றி. என்னங்க... நான் எவ்வளவு அழகு.... போட்டோவை பார்த்து நானான்னு கேட்டு என்னை அசிங்கப்படுத்திட்டீங்களே!!! நான் அதை விட அழகா இருப்பேன். ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா... மிக்க நன்றி. அது ப்ரேம் செய்ததில் மீதம் வந்த க்ளே.... என் தங்கை காருக்காக பிள்ளையார் ஆயிட்டுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... மிக்க நன்றி. // உங்களை மாதிரியே// - ஹிஹிஹீ... இதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி... மிக்க நன்றி. முடிச்சுட்டு அவசியம் போட்டோ அனுப்புங்க... காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொற்கொடி... //கெமிகல் Cலய்கு பதில் Cஹcக் Pஒந்டெர் அன்ட் Wஹிடெ Gலுஎ வைத்து பன்னலாமா// - கண்டிப்பா செய்யலாம். ஏதோ ஒரு செட் ஆகும் க்ளே, அவ்வளவு தான் தேவை. மிக்க நன்றி. செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி... மிக்க நன்றி. உங்க பொண்ணு ஈசியா செய்துடுவா. செய்ததும் எனக்கு ஒரு போட்டோ அனுப்ப அசொல்லுங்க ப்ளீஸ். உங்களை போல் தோழிகள் அருகில் இல்லைன்னு எனக்கும் வருத்தம் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா... மிக்க நன்றி. குட்டீஸ் ரேஞ் இப்போ நம்ம குட்டீஸ் நிறைய பேர கலக்கறாங்க... அவங்க கூடலாம் நான் போட்டி போட முடியுமா?? ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா... ரொம்ப ரொம்ப நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சித்ரா... அவசியம் ட்ரை பண்ணுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

simply superb !

மிக்க நன்றி தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா