Talking delay

Hi evy one,

Seeing u all after long time.My son is 17 mon old now. He is not talking. He stated his activities very fastly like 7 months he crawled, 10 months he walked. Now he is running in very fast speed. But he is not talking. He is not staying in one place when i tried him to talk. He is very attentive and understandable. He can obey what i am telling to him.

But, when i try to make him talk. He wont listen. We are very worried.

pls help me and share if any body have child like my son.

And what u tried to make my your to talk?

Do needful ASAP

17 மாதம் தானே ஆகுது.கவலைபட எதுவும் இல்லை.சில குழந்தைகள் சீக்கிரமா பேசும்.சில குழந்தைகளுக்கு லேட்டாகும்.திடீர்னு ஆரம்பித்து மளமளனு பேசுவாங்க.

நீங்க குழந்தைகிட்ட அதிகமா பேசுங்க.பேச்சு குடுத்துகிட்டே இருந்தா அவங்களும் பேச ஆரம்பிச்சுடுவாங்க.நிறைய கதைகள் சொல்லுங்க.ஆனா எதுவுமே அவங்களுக்கு தொந்திரவா இருக்க கூடாது.அவங்ககிட்ட கேள்வி கேளுங்க.அவங்களுக்கு எளிதா புரியற மாதிரி 2-3 வார்த்தைகள்ல சொல்லுங்க.

அவங்ககிட்ட எத பத்தி வேணாலும் பேசுங்க.வீட்டு வேலை செய்யும் போது, சமையல் செய்யும் போது, சாப்பாடு குடுக்கும் போது, விளையாடும் போது, தூங்க வைக்கும் போது, அவங்களை குளிக்க வைக்கும் போது அத பத்தி அவங்க கிட்ட பேசுங்க.என்ன செய்யறீங்கனு சொல்லுங்க.2 option குடுத்து அவங்களுக்கு எது பிடிக்கும்னு கேளுங்க. அதாவது, விளையாட கார் வேணுமா, பந்து வேணுமா, கரடி கதை சொல்லட்டுமா, சிங்கம் கதை சொல்லட்டுமா, வாழை பழம் வேணுமா, ஆரஞ்சு வேணுமா இப்படி கேட்டு பதில் சொல்ல வைங்க.

பேச ஆர்வம் கொண்டு வந்துட்டா அவங்களே வேகமா கத்துக்குவாங்க.நாம் நினைப்பதை விட அவங்க கத்துக்குற வேகம் மிக அதிகம்.

TV பார்க்க அனுமதிக்க வேண்டாம்.ஏதாவது வார்த்தை குழந்தை சொன்னா அவங்களை நல்லா பாராட்டுங்க.அப்பதான் ஆர்வம் வரும்.அப்புறம் பத்தகங்கள் படித்து காட்டுங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் லோகேஸ்வரி நீங்க ஒன்னும் கவலை படாதிங்க 17 மாசம் தான ஆகுது, ஏன் தம்பி 4 வயசுல தன பேச ஆரமிச்சன் எல்லாமே செய்கைலத்தான் செய்வான் இப்போ அவன் அவ்ளோ பேசுறன் ஆண் குழந்தைகள் கொஞ்சம் தாமதமா தான் பெசுவங்கனு கேள்வி படு இருக்கேன்.
நீங்க எப்பவும் உங்க குழந்தைகிட்ட பேசிகிட்டே இருங்கள் . டிவி பார்க்க அனுமதிகாதிங்க. இது எங்க Dr சொன்னது, கொழந்தைகளுகுனு புக் இருக்கு அத வாங்கி அவங்களுக்கு படிச்சி காடுங்க. அவங்களோட நீங்களும் சேந்து விளையாடுங்க. சின்ன சின்ன வார்த்தைள் இருந்து பெசவைங்கள் எல்லாம் சரி ஆகிடும் கவலை வேண்டாம். நன்றி.

உங்க குழந்தை ஏதாவது ஓரிரு வார்த்தைகளாவது பேசுதா?அப்படிப்பேசினால் பயப்படத்தேவையில்லை. நீங்கள் சொல்வதை புரிந்து கொள்கிறதா? செய்யச்சொல்லும் வேலைகளை செய்கிற்தா? என்பதை கவனிய்யுங்கள் காதில் ஏதாவது கேட்டல் குறைபாடு இருந்தாலும் பேச்சில் பிரச்சினை ஏற்படுமாம்/ எதற்கும் குழந்தை நல மருத்துவர் ஒருவரை நாடினால் நன்றாயிருக்கும்.எனது முத்ல் பையன் 1வருடத்திலே பேச ஆரம்பிது விட்டான், ஆனால் ம்ற்ற பையன் 2வருடதிற்கு பின் தான் பேச ஆரம்பித்தான் அது வரை அம்மா அப்பா தான் சொல்லிட்டிருந்தான். எல்லாக் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை. டாக்டர் ஒருவரைப் பார்த்தால் உங்கள் மனசுக்கு திருப்தியாய் இருக்கும் என நினைக்கிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்