விஜய் டிவி 'நீயா நானா'வில் கலந்து கொள்ள விருப்பமா?

விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சி பற்றி அறியாதவர் யாரும் இல்லை என்று நம்புகின்றோம். அந்த நிகழ்ச்சியினைப் பார்க்கும்போது நாமும் நம்முடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் உங்களில் பலருக்கு இருந்திருக்கலாம். உங்களுக்காக ஒரு வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி நீயா நானா குழுவினர் கொடுத்துள்ளனர்.

உணவு சம்பந்தமான தலைப்பு ஒன்றினை அடுத்த கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள். ருசிக்காக உணவைத் தேடி சாப்பிடுபவர்கள், ஆரோக்கியத்திற்காக சாப்பிடுபவர்கள் என்ற இரண்டு பிரிவில் பேச வேண்டி இருக்கும் என்று எண்ணுகின்றேன். மிகச் சரியான தலைப்பு தெரியவில்லை. சாப்பிடுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள், ஊர் ஊராக நல்ல உணவைத் தேடி அலைபவர்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிகின்றது. உணவு சம்பந்தமாக நிறைய விசயங்கள் அறிந்தவர்கள், நன்கு பேசக்கூடியவர்கள், ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். என்னுடைய எண் 99525 28028.

வரும் திங்கட்கிழமை (11.04.11) அவர்களுக்கு பெயர்ப்பட்டியல் கொடுக்க வேண்டும். எனவே ஆர்வம் உள்ளவர்கள் அதற்குள் என்னைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். இறுதிக்கட்ட தேர்வினை அவர்கள்தான் செய்வார்கள்.

21 ஆம் தேதி பணி நாளாகிய வியாழக்கிழமையில் வருகின்றது என்று சிலர் தயக்கம் காட்டியுள்ளனர். குழுவினரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, 21, 23, 24 ஆகிய மூன்று நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இந்த நிகழ்ச்சியை சூட் செய்வதாக தெரிவித்தார்கள். பெரும்பாலானவர்களின் வசதியைப் பொறுத்து இதில் ஏதேனும் ஒரு தேதியை முடிவு செய்வார்கள் என்று தெரிகின்றது. நான் ஏற்கனவே தெரிவித்ததுபோல் கலந்துகொள்பவர்களின் இறுதிப்பட்டியலை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். எனவே ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு தெரிவியுங்கள். அனைவரது பெயர்களையும் நான் அவர்களிடத்தில் கொடுத்துவிடுகின்றேன். அதில் இருந்து அவர்களுக்கு தேவையானவர்களை அவர்களே தேர்வு செய்துகொள்வார்கள்.

எதிர்பார்ப்புகள்

தெளிவாகப் பேசும் திறன்.
ருசிக்காக உணவைத் தேடி அலைந்து சாப்பிடுபவர் அல்லது ஆரோக்கியத்திற்காக உணவைத் தேடி அலைபவர்
உணவு குறித்த நல்ல நாலேட்ஜ்

அவர்கள் சொல்லும் தேதியில் சென்னையில் இருக்க வேண்டும்.

கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரவ்மாக இருக்கிறேன் என்று ஒளிபரப்புவார்கள் என்று தெரியப்படுத்துங்கள் ப்லீஸ்

அறுசுவையின் தோழர் தோழியருக்கு ஒரு அருமையானதொரு வாய்ப்பை நமது அட்மின் சார் ஏற்படுத்தி தந்துள்ளார். யாருமே கலந்து கொள்ள விரும்பவில்லையா?

அன்புடன்
THAVAM

அட்மின் இதில் கலந்து கொள்கிறாரா?

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

நல்லதொரு அரிய வாய்ப்பு!!! கலந்து கொள்ள முடியலயேன்னு வருத்தமா இருக்கு... சென்னையில் உள்ள தோழிகளெல்லாம் குடுத்து வச்சவங்க தான்... யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...

இப்படிப்பட்ட நல்வாய்ப்பை முன் வந்து தரும் அட்மினுக்கும் நன்றி.....

-ஜெயந்தி

நம்ம அட்மின் சார் கண்டிப்பா கலந்துக்கொள்வார். உணவு வகைகள் பற்றிய நிகழ்ச்சி அல்லவா!. அறுசுவை இணையத்தின் சார்பில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் அனைவரின் விருப்பம்!.

அன்புடன்
THAVAM

அட்மின் சாருக்கு பக்கம் பக்கமாக எழுதத்தான் தெரியும். பத்து வார்த்தை தொடர்ச்சியாகப் பேசத் தெரியாது. அதனால் அவர் கலந்து கொள்வது (எல்லோருக்குமே) கஷ்டம். :-)

என்ன சார் இப்படி சொல்லிப்புட்டீங்க:(

உங்களுக்கு தெரியாத பேச்சா?? எங்க சார்பில் நீங்க போய் கலந்துக்கோங்க. ப்ளீஸ் அண்ணா, முடிந்தால் முயற்சித்து பாருங்களேன்

அன்புடன்
பவித்ரா

அட்மின் அண்ணா,நீங்க தானே சீஃப் கெஸ்ட்?

அட்மின் அண்ணா, உங்களிடம் நேரடியாக நான் இதுவரை பேசியதில்லை. ஆனால் உங்கள் பதிவுகளை விவாதங்கள் பகுதியில் நிறைய படித்திருக்கிறேன், அதனால் இதில் கலந்துகொள்ள உங்களால் கண்டிப்பாக முடியும் என்றே தோன்றுகிறது. நீங்க கண்டிப்பா இதுல கலந்துக்கனும் அண்ணா. மறுபடியும் யோசிச்சு கலந்துக்கலாம் என்கிற நல்ல முடிவை எடுங்க :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்