அதிரசம்

தேதி: April 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (11 votes)

 

பச்சரிசி - அரை கிலோ
அச்சு வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

பச்சரிசியை 1.30 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்றாக வடியவிட்டு மிக்ஸியில் அரைத்து ரவை சல்லடையில் சலிக்கவும். அதோடு ஏலப்பொடியை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடித்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். (பாகு பதம் வந்ததும் ஒரு தட்டில் தண்ணீர் விட்டு அதில் பாகை ஊற்றினால் உருட்டுவதற்கு ஜெல்லி போல் வர வேண்டும்)
பாகை பச்சரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும். நன்கு ஒன்றாக பிசைந்து 2 நாட்கள் வைத்து விடவும்.
எலுமிச்சை அளவு மாவை எடுத்து இலையிலோ அல்லது பாலிதின் பேப்பரிலோ எண்ணெய் தடவி தட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய அதிரசத்தை போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவையான அதிரசம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Easy and very nice.keep it up.

ஸ்வர்ணா அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ட்ரை பன்னிtoசொல்ரென்...

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஆஹா!அதிரசம் சூப்பர் ஸ்வர்.என்ன ஸ்வர்,ஸ்வீட்டா கொடுக்கறீங்க,எனக்கு பிடிச்சதாவும் கொடுக்கறீங்க.வாழ்த்துக்கள் ஸ்வர்.பண்டிகைகளில் தவறாம இடம் பிடிக்கற அருமையான குறிப்பு கொடுத்த என் தங்கத்திற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.வழக்கம் போலவே போட்டோஸ் அழகு ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

ஹாய் ஸ்வர் அதிரசம் சூப்பரா இருக்கு பார்க்கவே. எனக்கு வெல்ல அதிரசம் ரொப பிடிக்கும். அம்மாவும் நல்லா செய்வாங்க ஸ்வர். நன் உங்க குறிப்பையும் அம்மாகிட்ட காமிக்கறேன்பா. அம்மாவ செய்ய சொல்ல போறேன் அதிரசம் சாப்பிடனும் போல இருக்கு உங்க அதிரசம் பார்த்ததும்

ஸ்வர்ணா சோமாசா போய் அதிரசமா. சரியான பக்குவத்துல செஞ்சு இருக்கீங்க. படங்களும் நன்றாக இருக்கு. நானும் செய்து பார்க்குகிறேன் ஸ்வர்.

ஹாய் ஸ்வர்ணா

முகப்பில் போட்டோ பார்த்ததும் ஸ்வர்ணா வோட குறிப்பா இருக்கும்னு நெனைச்சுகிட்டே ஓபன் பண்ணினேன். ஸ்வர்ணாவே தான். என்ன டிரெடிஷ்னல் ஸ்வீடா ஜமாய்க்றீங்க. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

your recipe is very super and very tempting too.. the recipe can be done with sugar know mam.. if you know tell me that sugar athirasam recipe..

ஸவர்ணா அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் விருப்ப பட்டியில் சேர்த்துட்டேன் வாழ்த்துக்கள்

ஹாய் சுவா, பலகாரமா தந்து கலக்கறீங்க பா. அச்சு வெல்ல அதிரசம் புது முயற்சி தான். எனக்கு இங்கே அச்சு வெல்லம் கிடைக்காது. ஊருக்கு வந்தவுடனே உங்க கையாலயே செய்து சாப்டுட்டு வர்றேன். ரொம்ப சுவையான, எளிமையான குறிப்பு சுவா. இந்த தீபாவளிக்கு வெல்லம் சேர்த்து இந்த முறைல செய்து பார்க்கறேன் சுவா. சரியா வரலையோ காங்கோ ஜூஸ் கும்பகோணத்துக்கு ஒரு பார்சல் வரும் ;) வாழ்த்துக்கள் சுவா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ஸ்வீட் ஸ்வர்ணா நலமா.
அதிரசம் பார்க்கவே சூப்பரா இருக்கு...
வாழ்த்துகள்...

ஹசீன்

பாத்தாலே க்ரிஸ்ப்பியா அழகா இருக்கு. செய்முறை விளக்கங்கள் சுப்பர்.
ஈஸியா சொல்லி இருக்கிங்க. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வர்ணா,
வரிசையா பட்சணமா செய்து கலக்குறீங்க..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இதுவரை நான் செய்ததே இல்லை.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.ஃபோட்டோஸ் எல்லாம் அழகா வந்து இருக்கு.வாழ்த்துக்கள்.

ஹாய் ஸ்வர், உங்க வீட்டு பலகாரத்துக்காகவே தீபாவளிக்கு உங்க வீட்டுக்கு வரபோறேன்.:) சூப்பர்......... வாழ்த்துக்கள்....

உன்னை போல பிறரையும் நேசி.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு எனது நன்றிகள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி வள்ளி ....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஷிரின் கண்டிப்பா ட்ரை பன்னிட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி மிக்க நன்றிப்பா உனக்கும் அதிரசம் பிடிக்குமாப்பா :) எனக்கும் பிடிக்கும் என்னே ஒற்றுமை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழி நாங்க எப்பவும் வெல்ல அதிரசம்தான் செய்வோம் பா.. கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்கப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வினோ நிச்சயம் செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு வாழ்த்துக்கு மிக்க நன்றி ... படத்தை பார்த்ததுமே நான்னு நினைச்சீங்களா பரவால்லயே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹேமா மிக்க நன்றி.. நான் இதுவரை சுகர்ல செய்தது இல்லங்க :((

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா உங்களுக்குமா :) மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் மிக்க நன்றிப்பா.... கண்டிப்பா வாங்க செய்து தரேன் :) அதுக்காக காங்கோ ஜூஸ்லாம் தருவேன்னு மிரட்டகூடாது ஆமா சொல்லிட்டேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹசீன் நான் நலம் நீங்க நலமா? வாழ்துக்களுக்கு மிக்க நன்றி ஹசீன்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் மிக்க நன்றிப்பா... கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க ....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவிதா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹர்சா மிக்க நன்றிப்பா கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா கண்டிப்பா அடுத்த தீபாவளிக்கு எங்க வீட்டுக்கு வந்துடுப்பா நான் இப்பவே சொல்லிட்டேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஏன் 2 நாட்கள் வைக்க வேண்டும் உடனே செய்தால் எப்படி வரும்?

யாஸ்மின் உடனேவும் செய்யலாம் ஆனால் எப்பொழுதும் அதிரசமாவு புளிக்க வைத்து செய்தால் மிருதுவாக இருக்கும்,ஒரு வாரத்துக்கு மேல கூட வைத்து வேண்டும்போது தட்டிக்கொள்ளலாம்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

MY HUSBAND LIKE SWEET VERY MUCH BUT I DONT NO TO PREPARE SWEET THIS IS VERY USE FUL TO ME SO THANK U VERY MUCH

MOSHINA மிக்க நன்றி,செய்துட்டு சொல்லுங்க ....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Dear swarna akka அதிரசம் செய்முறை விளக்கம் சூப்பர்.அதிரசமாவு மிகவும் தண்ணியாகி விட்டது.மாவு இருக என்ன செய்ய வேண்டும்.நன்றி
அன்புடன்
கவிதா

கவிதா மிக்க நன்றி,இப்பதான் மாவு சேர்த்து வச்சிருக்கீங்கன்னா 1 நாள் ஆனதும் கெட்டி படும் அப்படியும் கெட்டியாகலன்னா இன்னும் கொஞ்சம் மாவு இடித்து சேர்த்து பிசைந்து வைக்கவும். செய்துட்டு எப்படி வந்துச்சின்னு சொல்லுங்க..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Dear swarna akka தங்களுடைய பதிலுக்கு நன்றி.நான் மாவு பிசைந்து வைத்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.நீங்க சொல்லியது போல மீண்டும் மாவு சேர்த்து முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.
அன்புடன்,
கவிதா

Hello akka,
Can I make using pacharisi mavu....

ஸ்வர்ணா,
இன்று உங்கள் அதிரசம் செய்து விட்டேன்..
பாஸ்மதியில் தான் செய்தேன்..கொஞ்சம் அடர்ந்த கலர் வெல்லம் சேர்த்தால் உங்கள் அளவு பொன்னிறம் வரவில்லை..
நன்றாக வந்தது .நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்புத் தோழி ஸ்வர்ணா உங்கள் அதிரச குறிப்பு மிக அருமை.
கூடிய விரைவில் ப்ராஜெக்ட் ஸ்டாட் பண்ணலாம்னு இருக்கேன். முடிச்சுட்டு சொல்றேன்பா.
இன்னொரு விஷயம் மாரியம்மன் பண்டிகை கால்ங்களில் நீங்கள் வெல்லம் ஊற்றி பிசைந்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா அதுவரை செய்வோம். இரண்டு நாட்கள் கழித்து அதிரசமாக போட்டுக்கொள்வோம். ஆனா ஒண்ணுப்பா அந்த மாவு அதற்குள்ளாகவே தீர்ந்துபோகும் நிலைக்கு வந்துடும்.அதற்கு பெயர் பச்சைமாவு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.