கர்ப்ப காலத்தில் மண்,செங்கல் சாப்பிடும் பழக்கம்

நான் 7 மாதம் கர்ப்பம்.எனக்கு மண்,செங்கல் போன்றவை சாப்பிட வேண்டும் போல் உள்ளது.ஏன் அப்படி தோன்றுகிறது? உங்களில் யாருக்காவது இப்படி ஏற்பட்டுள்ளதா?நான் யாருக்கும் தெரியாமல் செங்கல் சாப்பிட்டு பார்த்தேன்.நன்றாக இருந்தது.இதனால் என் குழந்தைக்கு கேடா?தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ்.

I think your hemoglobin level is low. check your blood volume. and you should consult your doctor.

அன்புடன்,
ஹலீமா

Consuming brick is definitely hazardious to you and the baby - probably it will be due to calcium defficiency - consult your doctor and take good food.

ungal hemoeglobin level kuraivaaga ullathu enru ninaikuren kaaram enakum slate pencil, sengal ellam sapidanum pola erukum doctor eedam kaamiththa pothu thaan enathu hemoeglobin 7.42 erunthathu theriya vanthathu... please akka unga blood ah check panni athuku thaguntha maari treatment eduthukanga illana entha mari sappita stone stomach la form aaga vaaipu ullathu...iron deficiency kammiyaga eruppathu kaaranama erukalam....

சென்ற வாரம் தான் ப்ளட் டெஸ்ட் செய்தேன்.ஹீமோகுலோபின் 11.4 உள்ளது.இது சரியான அளவு தானே.
எனக்கு அறிவுரை கூறிய தோழிகளுக்கு,என் நன்றிகள்.

Tharifa.

கவலை படவேண்டாம் தோழி உடம்புலசுண்ணாம்புச்த்தும் இரும்புச்சத்தும் குறைவக இருந்தாள் இதுபோன்ற எண்ணங்கள் தோன்றும் டக்டர் தரும் மாத்திரைகளை சாப்டீங்கனா சரியாப்போய்டும் பா நீங்கள் கண்டிப்பாக பேரீச்சை,வெல்லம்,மீன்,முட்டை,போன்ற சத்துள்ள உணவு சாப்டா சரியாகி ஆரோக்கியமுள்ள அழகான குழந்தை பேற்றெடுக்க என் வாழ்த்துக்கள்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

First of all congrdulations. This is happening because of calcium deficiency. U consult u doctor. Drink milk and calicum rich foods. along with that u can have calcium tablets. If u r a non-vegitarian u can drink mutton leg soup . Apart from all have confidence and enjoy ur pregnancy.

எனக்கு நல்ல படியாக பெண் குழந்தை பிற்ந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது.இன்னும் இந்த பழக்கம் தொடர்கிறது.இதற்கு என்ன செய்யலாம் தோழிகளே?pis sollungapa.

Tharifa.

வாழ்த்துகள் mrs . hanifa . குழந்தை எப்படி இருக்கிறார். குழந்தைக்கு தாய்ப்பால் குடுகிறீர்களா? நீங்கள் கல்லும் மண்ணும் சாப்பிட்டால் அது குழந்தையையும் தான் பாதிக்கும். மேலே தோழிகள் சொன்னது போல் அயன் அண்ட் கால்சியம் பற்றாக்குறையினால் தான் அப்படி தோன்றும், ஒருவேளை இப்போ ஹீமோக்ளோபின் சரியாய் இருந்தாலும் இப்படி மண் , செங்கல் சாப்பிட்டால் கண்டிப்பாய் அது குறைந்து விடும், .,புழுக்கள் உருவாகும். உங்கள் உடம்பில் சேரும் சத்துக்களையும் , விடமின்ஸ் யையும் இந்த புழுக்களே தின்று விடும், மேலும் வயிற்றில் கட்டி உண்டாகும். மண் , செங்கல் சாப்பிட்டால் உங்கள் உடலை வெகுவாய் பாதிக்கும் என்பதை மனதில் உறுதியாக ninaithu கொள்ளுங்கள் அதை சாப்பிட பிடிக்காது, ஆரோக்கியமாக பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுங்கள், dates , nuts , dryfruits nonveg , கீரை, நிறைய உணவில் சேர்த்துகொள்ளுங்கள். தொடர்ந்து இது போல் தோன்றினால் டாக்டரை பார்த்து ஆலோசனை கேளுங்கள். எப்படி இருந்தாலும் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்தி விடுங்கள்,

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நன்றி கார்த்திகா ராணி.குழந்தை நல்லா இருக்கா.தாய்ப்பால் தான் தருகிறேன்.நீங்கள் சொல்வது சரிதான்.எனக்கு இந்த ஊரில் யாரும் இல்லைபா.அதான் அறுசுவை தோழிகளிடம் கேட்கலாம் என்று வந்தேன்.கண்டிப்பாக நிறுத்த முயற்சி செய்கிறேன்பா. புழுக்கள் உருவாகும்னு சொன்னதும் என்னவோ போல் இருக்கு.எனக்கு அக்கறையாக பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றிப்பா.

Tharifa.

அன்பு தோழி... இதெல்லாம் வெறும் பழக்கம். சில நேரம் எதையாவது சாப்பிட்டு பிடிச்சு போகும், விட முடியாது. டீ, காபிக்கு அடிக்டானவங்க எத்தனை பேர். புகையிலை, சிகரட்க்கு அடிமை எத்தனை பேர். அப்படி தான் இதுவும். இதுல இந்த டிஃபீசியன்சி அந்த டிஃபீசியன்சி எல்லாம் பண்ற தப்புக்கு நம்மை நாமே கன்வின்ஸ் பண்ணிக்க சொல்லிக்குற வழி. தப்பா நினைக்காதீங்க... உங்க குழந்தை மேல உங்களுக்கு அக்கறை இருக்கா??? அவளுடைய ஆரோக்கியத்தின் மேலே அக்கறை இருக்கா??? அப்போ விட்டுடுங்க இந்த பழக்கத்தை.

பொதுவா தாய் பால் கொடுக்கும் தாய் தன் உணவில் மிகுந்த கவனம் காட்டனும். மாங்காய் சாப்பிட்டா மாந்தை, கடலை சாப்பிட்ட வாந்தி, கோஸ் சாப்பிட்டா கேஸ் என்று ஒரு பெண் தனக்கு பிடிச்ச எல்லாத்தையும் தன் பிள்ளைக்கு தாய் பால் கொடுக்கும் போது குழந்தையின் ஆரோக்கியத்துக்காக விட்டு கொடுப்பாங்க. வாயை கட்டி, வயிற்றை கட்டி தான் பிள்ளையை வளர்ப்பாங்க. அப்படி இருக்கும் போது கல், மண்ணை சாப்பிட பிடிக்குதுன்னு சொல்றது சரியா??? அது உங்க உடம்புக்கே நல்லதில்லைன்னும் போது பழகிடுச்சு விட முடியலன்னு சொல்றது நியாயமா??? குழந்தைக்காக ஒரு சின்ன கெட்ட பழக்கத்தை கூட நம்மால் மாற்றிக்க முடியாதா??? நிச்சயம் முடியும்.

குழந்தைகளின் உடம்பு இப்போ ரொம்ப மென்மையானது... இது போல் கிருமிகளை அது தாங்காது. நீங்க சாப்பிடுறதோட நல்லதும் கெட்டதும் தாய் பால் வழியா உங்க குழந்தைக்கு போய் சேருது... இதை மனதில் கொண்டு யோசிங்க, இனி கல்லும் மண்ணும் கசப்பா தான் தெரியும். நான் சொல்றது கடுமையா சொல்ற மாதிரி தெரிஞ்சா மன்னிசுடுங்க, உங்க மேல உள்ள அன்பால் சகோதரியா சொல்றேன். புரிஞ்சுக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்