லாலி லே (Lolly Lei)

தேதி: April 11, 2011

4
Average: 4 (9 votes)

 

சாக்லேட்டுகள் – 15 (இரண்டு வேறு நிற உறைகளில்)
க்லிங் ராப் (cling wrap)
ட்விஸ்டீஸ் (twisties)
மெல்லிய மெட்டாலிக் பேப்பர் ரிப்பன்கள் – பச்சை, சிவப்பு நிறங்களில்
கத்தரிக்கோல்

 

லாலி லே செய்வதற்கு மேலே குறிப்பட்டவை அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
நீள மேசையை அல்லது தரையைச் சுத்தம் செய்து கொண்டு க்லிங் ராப்பை நீளமாக விரித்து வைக்கவும்.
அதன் ஒரு ஓரமாக சாக்லேட்டுகளை சிறிது இடைவெளி விட்டு வரிசையாக அடுக்கிக் கொண்டே வரவும்.
அடுக்கி முடிந்ததும் சாக்லேட்டுகள் வைத்த ஓரத்திலிருந்து சுற்ற ஆரம்பிக்க வேண்டும்.
சாக்லேட்டுகள் விலகி விடாமல் கவனமாகச் சுற்றி முடிக்க வேண்டும். சாக்லேட்டுகள் நடுவே தெரியும் இடைவெளிகளில் ட்விஸ்டியை முறுக்கி விடவும்.
கடைசியாக இரண்டு முடிவிடங்களையும் சேர்த்து ட்விஸ்டியால் கட்டி விடவும்.
பச்சை ரிப்பனில் 20 சென்டிமீட்டர் அளவான துண்டுகள் 15 நறுக்கி வைக்கவும்.
அதே போல் சிவப்பு ரிப்பனிலும் 20 சென்டிமீட்டர் அளவான துண்டுகள் 15 நறுக்கி வைக்கவும்.
ஒவ்வொன்றிலும் ஒரு துண்டு எடுத்து சேர்த்துப் பிடித்து ஒரு ட்விஸ்டியின் மேல் வைத்துக் கட்டவும்.
இப்படியே எல்லா இடைவெளிகளிலும் கட்டி முடிக்கவும். அழகான ‘லாலி லே’ தயார்.
நாம் பூமாலை போட்டு மற்றவர்களைக் கௌரவிப்பது போல சாமோவன் (Samoan) இன மக்கள் இப்படி சாக்லேட் மாலைகள் போட்டுக் கௌரவிப்பார்கள். ஏஞ்சல் செய்து காட்டி உள்ளது சிறுவர்கள் செய்யக் கூடிய எளிமையான முறை ‘லே’ ஒன்று. பெரியவர்களுக்கான 'லே' செய்யும் போது தேவைக்கு ஏற்ப சாக்லேட் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளவும். எத்தனை சாக்லேட் பயன்படுத்தப் போகிறோமோ அத்தனை துண்டு ரிப்பன் தேவைப்படும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகான வேலைப்பாடு பாராட்டுக்கள் cutie keep it up

குழந்தை தனம் மாறாத வேலைபாடு, ரொம்ப அருமை ஏஞ்சல், உன் பேருக்கு தகுந்த மாதிரி வேலைப்பாடும் சூப்பர். வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குட்டிக் கைகளால் குழந்தைகளுக்கே பிடித்ததாமான ஒன்றை செய்து காட்டியது அருமை..என் மகளுக்கு வாய் முழுக்க சிரிப்பு தான்

ஏஞ்சல் குட்டீஸ் எல்லாம் அழகான க்ராஃப்ட்டா செஞ்சி அசத்துரீங்க. புது ஐடியாவா இருக்கு. இப்படி செஞ்சு மாலை போட்டா குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏஞ்சல் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க.

very nice ya keep it up....)

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

கண்ணா... ரொம்ப அழகா இருக்குடா. புதுசா இருக்கு... நான் இது போல் பார்த்ததே இல்லை :) கியூட்டா இருக்கு... இன்னும் என்னென்ன செய்து எங்களை அசத்த திட்டம்? சூப்பர்மா. கலக்குடா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏஞ்சல் குட்டி ரொம்ப அழகு லாலி லே பெயரும் அழகு.

Jaleelakamal

Well done Angel!
Fantastic work .keep smiling and keeping crafting.
God Bless you.