பாஸந்தி

தேதி: May 30, 2006

பரிமாறும் அளவு: ஆறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - இரண்டு லிட்டர்
சீனி - கால் கிலோ
ஏலக்காய் - ஐந்து
சாரைப் பருப்பு - ஐந்து கிராம்
பிஸ்தா பருப்பு - ஐந்து கிராம்


 

முதலில் சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு இரண்டையும் மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளுங்கள்.
ஏலக்காயை தோல் நீக்கி பொடித்து வைக்கவும்.
அடுப்பில் அடி கணமான பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றிக் காய்ச்சவும்.
பால் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஆடை படிய படிய ஆடையை நீக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து சேர்த்து வைக்கவும்.
அடிக்கடி கிண்டக் கூடாது. கிண்டினால் ஆடை படியாது.
ஆடையை நீக்கிய உடன் அவ்வப்போது கிண்டவும். அடிப்பிடித்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படியே ஆடை முழுவதும் எடுத்து, பால் ஐநூறு மி.லி அளவிற்கு வந்த பின் ஏலப்பொடி, சர்க்கரை சேர்த்து கிண்டவும்.
பிறகு பால் ஆடை முழுவதயும் பாலில் கொட்டி லேசாக கலக்கவும். சாரை பருப்பு, பிஸ்தா பருப்பு சீவல் போட்டு ஐந்து நிமிடம் கிளரி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்