நம்பிக்கை வரிகள்

தோழர் தோழிகளே, எனது அறையில் நல்ல வாசகங்களை ஆங்காங்கே அடிக்கடி கண்ணுக்கு படும்படி ஒட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். அதற்கு உங்கள் உதவி தேவை.

சோகமா இருந்தாலும், சோர்ந்து இருந்தாலும் , தோல்வியில் இருந்தாலும், பதட்டத்தில் இருந்தாலும், அதீத மகிழ்ச்சியில் இருந்தாலும், கோபமாய் இருந்தாலும், நம்பிக்கை குறைவாக இருந்தாலும் இந்த உணர்வுகளிலிருந்து சட்டென்று நாம் சில சமயங்களில் மீள முடியாமல் போகிறது. அதுபோல் தருணங்களில் சில வரிகள் நம்மை வழிநடத்தும். நீங்களும் கூட இது போல் பல வரிகளை ஏதோ ஒரு பாடலிலோ, கவிதையிலோ, ஏன் சில கதைகலையோ கூட, இல்லை ஒரே ஒரு சிறு வரியாக வைத்திருப்பீர்கள். அவை உங்களுக்கு ஆறுதல் தரும், நம்பிக்கை தரும், உற்சாகம் தரும், தீர்வு தரும், தெளிவு தரும். உதவ எவருமின்றி ஸெல்ப் ஸ்டார்ட் தேவைப்படும் நேரங்களில் உதவும். இது போன்ற வரிகளை இந்த இழையில் பகிருங்கள் தோழிகளே. எல்லோருக்கும் உதவும்.

எவருக்கேனும் கொஞ்சம் உற்சாக பூஸ்ட் தேவைபட்டால், குழப்பமாக இருந்தால் இந்த இழை திறந்து பார்த்ததும், தெளிவடைய வேண்டும், அது போல் இந்த இழையை கொண்டு செல்லாலாம தோழர் தோழியரே :)

உங்கள் வெற்றியின் ரகசியங்களை (SECRET OF SUCCESS) இங்கு பகிர்ந்தால், எல்லோருக்கும் உதவும்.

--- "இதுவும் கடந்து போகும்"

--- துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

--- தோல்வி என்றால் இறைவன் உங்களை கைவிட்டு விட்டான் எனப்பொருளில்லை உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளான் என்றே பொருளாகும்.

--- ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும் பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.

--- வாழ்க்கை என்பது புதிரும் அல்ல புதினமும் அல்ல புரிந்து கொண்டால்/

--- பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை/மழை என்பது நீருக்கு மரணம் இல்லை.

--- "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" பாடல்.

--- காலுக்கு செருப்பு எப்படி வந்த்து முள்ளுக்கு நன்றி சொல்

--- "வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்
போர்க்களம் மாறலாம் ; போர்கள் தான் மாறுமா?"

--- "வலி வந்து தானே வழி பிறக்கும்"

--- "யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே"

--- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

--- "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்" பாடல்.

--- நல்லது செய்யாவிட்டாலும் தீமைசெய்வதயாவது
கைவிட வேண்டும்.

--- "தீதும் நன்றும் பிறர் தர வாரா!" - கணியன் பூங்குன்றனாரின்.

--- "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு!" - நியூட்டனின் மூன்றாம் விதி.

--- "சுறுசுறுப்பான தேனீக்களுக்கு துக்கப்பட நேரம் இல்லை".

--- "Idle mind is devil's workshop".

--- ”எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.”

--- ”எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

--- ”எங்க விழுந்தோம்னு பார்க்குறதை விட எங்க வழுக்கினோம்னு பார்த்தா நல்லது.”

--- “எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.”

--- முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

--- "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?" பாடல். (முழு பாடல் இரண்டாம் பக்கம்)

--- நல்ல மனப்பாங்கை உருவாக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினால் இப்பொழுதே நம் வேலையைச் செய்ய வேண்டும்.

--- நாளை என்பது நிச்சயம் இல்லாத போது, இன்றைய வேலையை உடனே செய்ய உத்வேகம் வரும்.

--- “எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்”

--- “புரியாத பிரியம், பிரியும்போது புரியும்”

--- “இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை”

--- “நீ வெளிச்சத்தில் இருந்தால் எல்லாம் உன்னைப் பின் தொடரும்
ஆனால் நீ இருட்டில் நுழைந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது”

--- “காலம் சில மனிதர்களை மறக்கக்கடிக்கும்
ஆனால் சில மனிதர்கள் காலத்தை மறக்கக்கடிப்பர்”

--- “வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு.அதில் நீ காரணம் இல்லாமல் ஒரு காயை நகர்த்தக்கூடாது.அப்படி தப்பான இடத்திற்கு நகர்த்தி விட்டால் பின்னர் அதை பழைய இடத்தில் வைப்பது கடினம்.”

--- நீ அமைதியாக இருக்கும் போது தைரியமாக இரு ஆனால் நீ வெற்றி பெரும் சமயத்தில் அமைதியாக இரு.ஏனென்றால் வாழ்க்கை என்பது விரல் ரேகையை போன்றது,பொய் அச்சு கொடுக்க முடியாது,கொடுக்கும் போது நல்ல அச்சாக இருக்க வேண்டும்.

--- "ஒவ்வொரு பூக்களுமே....சொல்கிறதே." பாடல்.

--- ”எல்லாம் நன்மைக்கே”.....

--- ”இறைவன் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை, இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை"- நபிமொழி

--- கடவுளிடம் சொல்லாதோ உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று.

--- வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்.

--- Winning horse does not know why it runs in race.
It runs because of beats and pains, Life is a race,GOD is ur rider
So, if u r in pain think GOD wants u to win.

--- தலைக்கு மேல் பறவை பறப்பதை உன்னால் தடுக்க முடியாது, ஆனால் அது உன் தலையில் கூடு கட்டுவதை உன்னால் தடுக்க முடியும்.

--- நண்பன் இல்லாத போது உன் கைத்தடியுடன் கலந்தாலோசனை செய்.

--- கற்பனைப் பேய்களைத்தவிர வேறு பேய்களில்லை.

--- வாங்குகிறவனுக்கு நூறு கண்கள் தேவை விற்பவனுக்கு ஒன்று போதும்.

--- ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான் மற்ற கையால் நம்மை அணைக்கிறான்.

--- உள்ளே நுழைய முன் வெளியே வருவதைப்பற்றி சிந்தனை செய்.

--- நீங்கள் அன்பு செலுத்தும் எதுவும் உங்களை விட்டு விலகினால் விட்டு விடுங்கள்...............
உங்கள் அன்பு நிஜமானது என்றால்
மீண்டும் அது உங்களிடமே திரும்ப வரும்.....!!!

--- "என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

--- "மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்.

--- விடியும் என்ற எண்ணத்தில் உறங்கச் செல்லும் நீ
முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
அனைத்தையும் சாதிக்கலாம்!!

--- கோடி வந்தாலும் சரி கோடி போனாலும் சரி மனம் கோணாமல் இருப்பது ஒரு கோடி.

--- உன் கெளரவம் உன்னுடைய நாக்கு நுனியில் இருக்கிறது.

--- வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சில சமயம் இருட்டு சில சமயம் முழு நிலவு.

--- எதிர்ப்பார்த்தவன் ஏமார்ந்து போகலாம். எதிர்ப்பாராதவனே மிகவும் பாக்கியச்சாலி.

--- உன் நண்பனை அளவோடு நேசி ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம். - கீதை.

--- வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள், நல்லதே நடக்கும்"

--- சிந்தித்து எதையும் செய்
செய்த பின் சிந்தியாதே!!!! (முழு கவிதை நான்காம் பக்கம்)

--- வசந்த வாழ்வைத்தேடி அலைவதை விட வாழும் வாழ்வை வசந்தமாக்கிக்கொள்வதே அறிவுடைமை.

--- நிதானத்தைக் கடைப்பிடி அதுவே வெற்றியின் முதற்படி.

--- அறிவை விட தைரியத்தினால் நிறைய விடயங்கள் சாதிக்கப்படுகின்றன.

--- நீ காட்டின் அருகாமையில் இருந்தாலும் விறகை சிக்கனமாகவே செலவிடு.

--- "சந்திப்போம் என்றா பிறந்தோம்... சந்திப்போம் என்றே பிரிவோம்..."

--- "வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல"

--- "கிட்டாதாயின் வெட்டென மற"

--- "எனது அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது"

--- சில நேரங்களில் சில மனிதர்கள்

--- வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.

--- உனக்குள்ளே சக்தியிருக்கு அதை உசுப்பிட வழிபாரு சுபவேளை நாளை, மாலை சூடிடு.

--- ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண்விழிக்கும் அதுவரை பொறு மனமே.

--- பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வைத்தாலும் பந்து வரும் தண்ணி மேலதான்!

--- முடிவு பண்ணி இறங்கிட்டன்...Feel பண்ண மாட்டேன்! Back அடிக்க மாட்டேன்! போய்கிட்டே இருப்பேன்.

--- நம்பிக்கை என்னும் நாரிருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்.

--- கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் காகங்கள் ஆன போதும் சாமிக்கு வந்ததில்லை கோபங்கள்.

--- எல்லா இடங்களிலும் திருடர்கள் உண்டு கோவிலிலோ திருடுவதற்கென்றே சிலர் வருகிறார்கள் அதற்காக உண்மையான பக்தர்கள் மீது பழியைப் போடலாகாது. (கண்ணதாசன்)

--- மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாமாகத்தேடிக்கொண்ட வறுமை.

--- நீ ஒரு நண்பனைப் பெற விரும்பினால் ,நீயே ஒரு நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்.

--- மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

--- 'எப்போது உன்னிடம் இருட்டை ஒளிமயமாக்க விளக்கு இல்லையோ... எப்போது வெளிச்சத்தைப் பயன்படுத்த முடியாதோ... அப்போது, இருட்டில் வழிதேட, இருட்டையே பயன்படுத்து!' -இந்தச் சூட்சுமத்தை அறிந்து விட்டால், மகிழ்ச்சி மறையாது!

--- எதிர்பார்க்காதவனுக்கு, எதிர்பாராத தருணங்களில், எதிர்பபார்க்காத திசைகளில் இருந்தெல்லாம் மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத மனிதனுக்கு, எல்லாக் காலங்களும் வசந்தகாலமே!

--- ”கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை; காற்று அடிக்காத திசை என்று எதுவுமில்லை.”

--- Never discuss ur success and never worry about ur failure.. because both will affect ur next step. Believe in urself, move on and win the goal.

இந்த பதிவில் "பதிலளி"யை யாரும் அழுத்த வேண்டாம், அவர் அவர் கொடுக்கும் வரிகளை இங்கே சேர்த்துக்கொண்டே வரலாம் என நினைக்கிறேன். இழை திறந்ததும் நிறைய நல்ல வாசகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தான். அந்த வரிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், அடுத்த பக்கங்கள் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதுவும் கடந்து போகும்.

"இதுவும் கடந்து போகும்"

உலகத்தில் உள்ள அனைவரும் நமக்கு எதிராக இருப்பது போல் ஒரு நேரம் வந்தாலும் அதுவும் மாறக்கூடியதே. அதே போல், ஒருவனுக்கு அதிகப்படி கிடைக்ககூடிய மகிழ்ச்சி வினாடி இதுதான் என ஒரு வினாடியை சந்தித்தாலும் அதுவும் மாறக்கூடியது. ஏற்றமும் இறக்கமும், பல மாற்றங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவிப்பதே இவ்வரிகள். மிகவும் பிடித்த வரி.

இதே வரிகள் உங்களுக்கு பிடிச்ச வரியா இருந்தா, இதை பற்றி உங்கள் பானியில் நீங்க விளக்கம் கொடுக்கலாம், சுவாரசியமா இருக்கும்.

இதுவும் கடந்து போகும்.

இதுவும் கடந்து போகும் - எனக்கும் பிடித்த வரிகள். ரொம்ப நாள் மொபைலில் வைத்திருந்தேன்.

இப்போ என் பெயருக்கு கீழே என் பதிவில் வருபவை தான் விருப்பமான வரிகள்.

அது ஏதோ புரியாத தைரியம், நம்பிக்கை எனக்குள் தருகிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

பயம் இல்லாம எதையும் செய்யனும்... நம்மால் முடியுமா என்ற சந்தேகம், தோற்றுவிட்டால் அவமானம், தோல்வி பயம், நம்பிக்கை இன்மை... இதெல்லாம் இருந்தா மனிதன் வெற்றி பெற முடியாது. இதை எல்லாம் கடந்து நடப்பது நடக்கட்டும் என்று தைரியமாக முயற்சி செய்வதை செய்துட்டே இருப்போம் நம்பிக்கையுடன்... வெற்றி இன்றில்லை என்றாலும் நிச்சயம் வாழ்வில் ஒரு நாள் நம் கையில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, உங்கள் வரிகள் உண்மையிலேயே மிகுந்த அர்த்தம் வாய்தவை, பகிர்ந்ததுக்கு நன்றி, வாழ்த்துக்கள். இன்னும் நிறைய வரிகளை வழிகாட்டுகளை உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன் :)

நீங்க சொல்வது ரொம்ப சரி, பயம் என்பது கோவத்தின் இன்னொரு பரிமாணம்னு சொல்லுவாங்க. கோவம் வந்தாலும் சரி பயம் வந்தாலும் சரி, நம்முடைய கட்டுப்பாடு நம்மகிட்ட இருக்காது, என்ன செய்யறோம்னு தெரியாம சொதப்பிடுவோம் இல்லையா.

அப்புறம், மேலே "பதிலளி"யை அழுத்தாதீங்கன்னு குறிப்பிட்டதும் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் (பட்டிமன்ற இழை), அதற்கும் நன்றி.

இதுவும் கடந்து போகும்.

தோல்வி என்றால் இறைவன் உங்களை கைவிட்டு விட்டான் எனப்பொருளில்லை உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளான் என்றே பொருளாகும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும் பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது,

வாழ்க்கை என்பது புதிரும் அல்ல புதினமும் அல்ல புரிந்து கொண்டால்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சில பாடல் வரிகள்
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை/மழை என்பது நீருக்கு மரணம் இல்லை.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் நிம்மதி இருக்கும்/

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்தத்தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

காலுக்கு செருப்பு எப்படி வந்த்து முள்ளுக்கு நன்றி சொல்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

"வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்
போர்க்களம் மாறலாம் ; போர்கள் தான் மாறுமா?"

"வலி வந்து தானே வழி பிறக்கும்"

"யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே"

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்... பயணம் முடிவதில்லை
மாறுவது புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

யோகா, எனக்கு மேற்கண்ட இந்த வரிகள் மிகவும் பிடித்த ஒன்று. நான் சோர்ந்து போகும் போதெல்லாம் என்னை உற்சாகமூட்டி நிமிரச்செய்பவை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யோகலக்‌ஷ்மி கீதாச்சாரம் ரொம்ப நல்லாயிருக்கும் பா என்ரூம்ல அததான் ஒட்டிவேச்சிருக்கேன் பா எந்த கஷ்டம் வந்தாலும் நான் அந்த கீதாச்சாரம் பார்ப்பேன் கவலையெல்லாம் பறந்தோடிப்போகும் பிறகு

நல்லது செய்யாவிட்டாலும் தீமைசெய்வதயாவது
கைவிட வேண்டும்

என்ற வரி எனக்கு ரொம்ப பிடிக்கும் பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

யோக லக்ஷ்மி,
ரொம்ப ரொம்ப நல்ல இழையை ஆரம்பிச்சத்துக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.எனக்கு பிடித்தமான நம்பிக்கை வரிகள்,

"தீதும் நன்றும் பிறர் தர வாரா!" - கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரி.

"ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு!" - நியூட்டனின் மூன்றாம் விதி.

இந்த வரிகளுக்குள் எதோ ஒரு தொடர்பு இருப்பதாக எனக்கு தோன்றும்.
நாம் செய்யும் நல்லதுக்கு கண்டிப்பாக நன்மை விளையும்.தவறுக்கு கண்டிப்பாக தீமைதான் விளையும்.

தோல்வி என்று வந்துவிட்டால்,அடுத்தவரையோ,விதியையோ குறை கூறாமல் பிரச்சனையை அலசி ஆராய்ந்து பார்த்து,அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.கண்டிப்பாக எதோ ஒரு வகையில் பிரச்சனைக்கு நாம் தான் காரணமாக இருந்திருப்போம்.

மேலும் சில பதிவுகள்