மகளின் காலில் பூரான் ஏறியது

என் மகளின் காலில் பூரான் ஒன்று ஏறி பின்பு ஓடிவிட்டது . பிறகு அதை அடித்துவிட்டோம் . அவளின் வயது மூன்று . அவள் நார்மலாக தான்
இருக்கிறாள் . அது ஏதாவது செய்யுமா ?? அது அவளின் மேல் ஏறிய பயத்தில் வீர் என்று அலறினாள் . அது அவள் மேல் ஏறியதாகவும் கடிக்கவில்லை என்று கூறினாள். அது பெரிய பூரான் வேற . எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல . நான் என்ன பண்றதுன்னு சொல்லுங்க தோழிகளே .

பூரான் ஏறினால் என்னவாகும் என்றெல்லாம் தெரியாது ஆனால் பயந்து கொண்டிருப்பதை விட எதாவது மருத்துவரிடம் முதலில் ஃபோன் போட்டு கேளுங்கள் அல்லது போய் பாருங்க

ரம்யா ஸ்ரீ கவலைப்படதிங்க. என்னைக் கடித்தது,அதனால் எனக்கு தடிப்பு ஏற்ப்ட்டது.அரிப்பும் ஏற்பட்டது. பிறகு சரியானது. கவலைப்படதிங்க.கடிக்கவில்லை என்றால் ஒன்றும் ஆகாது. நைட் படுக்கும் போது விபுதி வைத்து விட்டு படுக்கவிடவும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

ரம்யா எப்படி இருக்கீங்க? கவலை வேணாம். பூரான் கடிச்சா கண்டிப்பா அந்த இடம் வீங்கும் கடிச்ச அச்சு இருக்கும், வலி அதிகமா இருக்கும். அப்படி எதும் இல்லைன்னா அது கடிச்சுருக்காது சோ பயப்பட வேணாம். உங்களுக்கு டவுட்டா இருந்தா பக்கத்துல இருக்க டாக்டர்கிட்ட போய் ஒரு டிடி எடுத்துருங்க ஓகே. பயப்படாதீங்க கடிச்சுருக்காது...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

தளிகா, உங்க பதிலை பார்த்த உடனே அருகில் உள்ள மருத்துவரை சென்று பார்த்து விட்டு வந்தோம் . அவர் கடித்தால் தடித்து விடும் என்றும் , அது இல்லாததால் ஊசி வேண்டாம் என்றும் மாத்திரை மட்டும் கொடுத்தார். ரொம்ப நன்றி தளிகா.

நித்யா,
உங்கள் பதிலிற்கு நன்றி நித்யா . அது கால் மேல் ஏறியது தெரிந்த உடனேயே அந்த இடத்தில விபூதி தடவி விட்டோம் .

லதா,
லதா ரொம்ப நல்லா இருக்கேன்பா . நீங்க எப்படி இருக்கீங்க ?? மருத்துவர் TT வேண்டாம் என்றும் , மாத்திரை போதும் என்று கொடுத்திருக்கிரார்பா .

உங்கள் அனைவரது பதிலிற்கும் ரொம்ப நன்றிபா. என்ன பண்றதுன்னே தெரியாத சூழ்நிலையில பதில் தந்து உதவினீர்கள் . அறுசுவைக்கும் எனது நன்றி .

உங்க பதிவை பாத்து நிம்மதி ஆச்சு. எனக்கு எதுக்குமே பயமில்லை. பேய் பிசாசு அது இது ஏன் மனுசங்களைப்பாத்தாலே நான் பயந்துக்க மாட்டேன் பட் ஒரு சின்ன பூச்சி புழுக்கு பயந்து அலறுவேன். எல்லாரும் கிண்டல் பன்னிருக்காங்க. ரொம்ப வருசமா கத்திரிக்காய் காலிப்ளவர்லாம் சாப்பிடாம இருந்தேன். இப்ப இப்பதான் கொஞ்சம் அதெல்லாம் சாப்டறேன். இந்த கரப்பான் பூச்சி, பூரான்லாம் நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்கும் எனக்கு... இப்பவே ஒரு மாறியா இருக்கு. பாப்பா இருக்கறதால பத்திரமா பாத்துக்கங்க ரம்யா ஓகே வா... அப்பப்ப ஓட்டை இருக்க இடத்துல கல்லுப்பும் மஞ்சள்தூலும் போட்டு விடுங்க. ஓகே...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ரம்யா, பூரான் கடித்தால் தடிப்பாகும். அதற்கு நல்லெண்ணெய்யை சில துளிகள் உண்டாலே குணமாகும். ஒரு பூரான் பார்த்தே உங்கள் மகள் பயந்து விட்டால் எங்கள் வீட்டில் பூரான் படையே இருக்கிறது. நான் இதுவரை பூரானை அடித்ததில்லை. என் தங்கை கொசு நசுக்கி போடுவது போல போடுவாள் :) அதனால் பயம் ஏதும் இல்லை. கவலை வேண்டாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லதா ,
பாத்ரூம்ல தண்ணீர் போற வழியா கீழ இருந்து மேல வருது பா. சுடு தண்ணீர் தினமும் ஊத்துன்னு என் அக்கா சொன்ன . அது மாறி செய்றேன் . நீங்க சொன்னதும் செய்றேன் பா.

கல்பனா ,
என்னபா சொல்றீங்க . உங்க வீட்ல ஒரு படையே இருக்க . எப்படி சமாளிகிறீங்க . அதுவும் அடிக்க வேற மாட்டேன்னு சொல்றீங்க .

மேலும் சில பதிவுகள்