வயிற்றில் பூச்சி?

என் மகள் (2 வயது) சில நாட்களாக நைட் தூக்கத்தில் பல்லை நற நறவென கடிக்கிறா.... என் தோழிட்ட இது பத்தி சொன்ன போது வயிற்றில் பூச்சி இருந்தால் தான் இந்த மாதிரி கடிப்பாங்க அப்படின்னு சொல்றாங்க.... இது உண்மையா? இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா? இதற்கு வீட்டு வைத்தியம் ஏதாவது உண்டா? இங்கு (U.S.)ல் வேப்பிலை கிடைக்க வாய்ப்பில்லை, அதனால் அது இல்லாமல் இங்க கிடைக்கிற மாதிரி பொருட்களை வச்சு ஏதாவது வைத்தியம் செய்யலாமான்னு சொல்லுங்க? இல்லைன்னா உடனடியா டாக்டர்-ட்ட போகணுமா? தெரிந்தவர்களோ, அனுபவப்பட்ட தோழிகளோ உடனே பதில் சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.

அனேக அன்புடன்
ஜெயந்தி

நானும் ரொம்ப நாளா அப்படி தான் நெனச்சுட்டிருந்தேன் ஆனால் டாக்டர் சொல்றார் அது வெறும் மித்தாம்.
குழந்தைகளுக்கு கவனிப்பு குறைவாக கிடைப்பதாக தோன்றும்பொழுது,ஸ்ட்ரெஸ் இருக்கும்பொழுது அல்லது தூக்கமில்லாமல் இருக்கும்போது தான் அப்படி வருமாம்..நானும் டெஸ்ட் பண்ணி பார்த்தேன் அதே தான்.
பகலில் கொஞ்ச நேரம் தூங்க வைத்து பாருங்க..இரவில் நல்ல அமைதியான மனநிலையில் தூங்க வைய்யுங்க..நல்ல கதைகள் பேசி சிரித்து தூங்க செல்ல வைக்கவும்..பகலில் நேரம் போக கூட விளையாடுங்கள் உங்களுக்கே மாற்றம் தெரியும்..ரொம்ப பல்லை கடித்தால் பல் கெடும் அதற்கு டென்டிஸ்டிடம் போனால் பல்லை பாதுகாக்க ஒரு பல்லுக்கான கவரை தருவார்

இவ்வ்வ்வ்வவளவு சீக்கிரம் பதில் வரும்னு எதிர்பார்க்கலை.... ரொம்ம்ம்ப நன்றி தளிகா..... அப்படீன்னா இது பூச்சி தொல்லை இல்லையா? அப்பாடா அப்படீன்னு பெருமூச்சு விட்டாலும், நீங்க சொல்லியிருக்குற மற்ற காரணங்கள் என்னை குழப்புது, எந்த இடத்தில் தப்பு நடந்திருக்குன்னு....இந்த காரணங்களை பொருத்திப் பார்த்தால் எதுவும் சரியா ஒத்து வரமாட்டேங்குதே, ஏன்னா, என் பொண்ணு தான் எனக்கு ரொம்ப முக்கியம்,அவளை கவனித்த பிறகு தான் எப்பவும் மற்ற வேலைகளை செய்வேன், எப்பவும் அவ தனிமையாகவோ, போர் அடிக்குதுன்னோ ஃபீல் பண்ணிடக் கூடாதுன்றதுல ரொம்ப கவனமா இருப்பேன். அதற்கு ஏற்றார் போல அவளும் சரியான “அம்மா பிள்ளை” என்னை ஒரு நிமிஷம் நகர விடமாட்டா,என்னோட அட்டென்ஷன் எப்பவும் அவ மேல இருந்துட்டே இருக்கணும்னு நினைப்பா.... ஸ்ட்ரெஸ் வருவதற்கும் எதுவும் காரணம் இருப்பதாகத் தெரியல, அதுவும் இப்ப சம்மர் ஸ்டார்ட் ஆகிட்டதால தினமும் பார்க் போயிடுவோம்.... பகலிலும் ஒரு 2 மணி நேரம் தூங்குவா, நல்லா தான் தூங்குவா.... அவளின் 4 மாசத்துல இருந்தே நைட்ல எப்பவும் என் பக்கத்துல தான் படுக்க வைப்பேன். ஆனால், சில சமயம் காலையில 5 மணிக்கு முழிச்சுட்டு, புரண்டுக்கிட்டே இருப்பா, அப்புறம் தண்ணீர் குடுத்து தூங்க வைப்பேன்... உங்க பொண்ணுக்கும் இதே மாதிரி பிரச்சினை இருந்ததா? அதுக்கு என்ன மாதிரி ஸ்டெப்ஸ் எடுத்தீங்க? நான் ரொம்ப புலம்புறேனோ, என் பொண்ணுக்கு தேவைப்படும் அளவுக்கு அவளை கவனிக்காம விட்டுட்டேனோ-ன்னு ஒரு பரிதவிப்பு தான் வேற ஒண்ணுமில்ல:( மறுபடியும் நன்றி தளிகா!!! அடுத்த முறை டாக்டரிடம் போகும்போது எதற்கும் கேட்டு பார்க்கிறேன்...

அனேக அன்புடன்
ஜெயந்தி

குழப்பிக்காதீங்க..நானும் இப்படியெல்லாம் யோசிச்சேன்..என் பொண்ணு ப்ரச்சனை தூக்கம் தான்.
ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டாள் ஆனால் அதற்கேற்ப தூக்கம் இருக்காது.பகலிலும் இரவிலும் சரி தூங்க வைப்பது பெரும்பாடு எப்படா யார் கண்ணு முழிக்கும் என்று பார்த்துட்டே இருப்பா
உங்க பொண்ணும் துருதுருவா நல்ல தூங்க வைய்யுங்க..இரவில் மேல் கழிகிட்டு தூங்க வைய்யுங்க.

Hai Sajveena,

You can try PUTHINA LEAVES. It will wash the stomach. I think it will useful for your children. Try this.

தளிகா சொன்ன காரணம் தான் சரியா இருக்கும்னு எனக்கும் தோனுது. ஒரு வேளை பூச்சி இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேமா இருந்தா கூட கை வைத்தியம் நம்ம தோழிகள் சொல்வாங்க செய்து பாருங்க... அதை செய்வது ஒன்னும் தப்பில்லையே. வருஷம் ஒரு முறை எப்பவுமே கொடுப்பது நல்லது தானே. அதே சமயம் தளிகா சொல்லும்படி தூங்க வைங்க... நல்லா தூங்கலன்னா குழந்தைங்க உடம்பில் பல பிரெச்சனை வரும்.... இது என் அனுபவமும் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயந்தி குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் ஜலீலா மேடம் ஒரு குறிப்பு கொடுத்து இருந்தாங்க. இந்த லிங்க பாருங்க. கைவைத்தியம் தான். http://www.arusuvai.com/tamil/node/18478. தளிகா அக்கா சொன்ன மாதிரியும் முயற்சி செய்து பாருங்க.

என் மகன் 6வயது அவனும் தூக்கதுல பல்லகடிக்கரான் பா பிறகு டாய்லெட் போற இடத்துல பூச்சி இருக்குது நமிக்குதுனு சொல்லி அழறான் நானும் 6 மாததிற்கு ஒருமுறை டாக்டர்கிட்ட போய் மாத்திரை கொடுக்கரேன் அப்பக்குட அவனுக்கு அந்த பிரச்சனை இருக்கு நான் சுடு தண்ணி போட்டு கழுவரேன் தேங்கய் எண்ணெய் வைத்தால் கொஞ்சம் பரவாயில்லை தூங்கறான் மறுநாளூம் அதே ப்ராப்ளம் யாராவது உதவிப்பன்னுங்க்க பா

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நான் மேலே கொடுத்துள்ள ஜலீலா மேடம் கைவைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்களேன்.

தளிகா!!

ரொம்ப நன்றி தளிகா!!! குழம்பிக்காம இருக்க முயற்சி பண்றேன் :) உங்க குழந்தைங்க ரீமாவும், ஜூனியரும் நலம் தானே? உங்க பொண்ணு ரீமாவின் சேட்டைகளையும், உங்களின் செல்லச் சலிப்பையும் பல பதிவுகள்ல படிச்சுருக்கேன்...நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க!!!

வனிதா!!!!

நன்றி வனிதா!!!! நீங்க சொல்றது போல் வீட்டு வைத்தியம் செய்றதுல எந்த தப்பும் இல்ல, ஆனால் என்ன வைத்தியம் பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் இங்க பதிவு போட்டேன்,ஓரளவுக்கு தெளிவும் கிடைச்சிருக்கு.... உங்க கைவலி இப்ப எப்படி இருக்கு? குறைஞ்சிருக்கா?

baladmop!!!

ஹாய்!!! ரொம்ப நன்றி உங்க பதிலுக்கு... புதினாவை சாறு எடுத்து கொடுக்கணுமா, அல்லது சட்னி மாதிரி செய்து குடுத்தாலே பலன் இருக்குமா? கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்!!!

வினோஜா!!!

நன்றிங்க உங்க பதிலுக்கும், எனக்காக இந்த லிங்க் எடுத்து குடுத்ததுக்கும்!!! ஆனால், யு.எஸ்-ல் வேப்பிலைக்கு எங்கே போவது? அதுதான் யோசனையா இருக்கு!!!

மற்ற தோழிகளுக்கு தெரிந்தாலும் சொல்லுங்க ப்ளீஸ்!!!!

-ஜெயந்தி

Anbulla jayandi
for the worms you can give RED PUSAIKKAI ( PARANGIKKAI)
SEEDS, CUKKUMBER SEEDS, KALLYANA PUSANIKKAI SEEDS AS RAW SEEDS LIKE
MUNDRI AND BADAM. IF YOU CAN GET KUPPAIMANI KEERAI PUDI IN INDIAN STORS IN THERE YOU CAN GIVE THAT QUARTER TEESPOON WITH JAGARY OR IN HONEY
OR MIX IT WITH ANY SOUP. IT WILL CLEAR THE WORMS.
Anbudan Poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்