பிளாஸ்மா டிவி வாங்க உதவுங்கள் தோழி

நாங்க பிளாஸ்மா அல்லது எல்சிடி டிவி வாங்களாம்னு இருக்கோம் தோழிகளுடன் கலந்து பேசி எந்த நிறுவனம் தரமனதாகவும் நம்பிக்கையானதாகவும் இருக்கும் என்று கருத்து கூறவும். நியாயமான விலையில் எங்கு கிடைக்கும் என்பதையும் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். எல்சிடி சிறந்ததா அல்லது பிளாஸ்மா டிவி சிறந்ததா என்பதையும் தெளிவுப்படுத்தவும்.

அன்பு புவனா... இரண்டுக்கும் வித்தியாசம் "refresh rate"ல் உள்ளது. Plasma, LCD இரண்டும் வெவேறு டெக்னிக் பயன்படுத்துபவை அதனால் ஸ்க்ரீனில் வரும் படங்களில் சிறு மாற்றங்கள் இருக்கும். நேரில் பார்த்தா உங்களுக்கே புரியும். ஆனா கொஞ்சம் வேகமா ஓடும் காட்சி அல்லது மேட்ச் பார்த்தாதான் இந்த வித்தியாசத்தை உணர முடியும்... சாதாரண காட்சிகளில் உணர இயலாது. Plasma விலை குறைவு, அதே சமயம் மிகவும் தெளிவாக இருக்கும். True colours கிடைக்கும். LCD TV Plasma TVயை விட எடை குறைவா வரும். அதனால் சுவரில் மாட்ட வாங்கினால் LCD வாங்கலாம். இல்லை என்றால் Plasmaவே நல்லது. Plasmaவும் எடை குறைவாக இப்போது கிடைக்கிறது தானே.

Plasmaவில் பல மாடல்கள் இருக்கு. அதுக்கு ஏற்ற மாதிரி தான் விலை. சுற்றி 4 பக்கமும் ப்ரேம் இல்லாத Plasma TV சற்று விலை அதிகம். ப்ரேம் உள்ள மாடல் விலை குறையும்.

Samsung, LG, Sony எல்லாமே தரமாகவே இருக்கும். விலையை பொருத்து முடிவு செய்யுங்க. எதையும் கடையில் போய் பார்த்து வித்தியாசத்தை கவனித்து மனதுக்கு பிடித்ததை வாங்குங்க. நாங்க LG Plasma வைத்திருக்கோம். 40000 ரூபாய் ஆனது 1 வருடம் முன்பு. இப்போ விலை தெரியல. சுவரில் மாட்டி தான் வைத்திருந்தோம், இப்போ டேபில் மேலே வைத்துவிட்டோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றிடாவனிதா நாங்கள் மிகுந்த குழப்பத்தோடு இருந்தோம் கடைக்கு போய் விசாரித்ததில் எல்லாமே நல்லாதான் இருக்கு பிளாஸ்மா எல்சிடி அப்படி ஒன்றும் வித்தியாசம் இருக்காது என்றார்கள் சரி தயிர்காரி தயிர் புளிக்குதுனா சொல்லுவாங்கனு ஒரு மனக்குழ்ப்பத்தோடு வீடு திரும்பினோம்

எங்களுடைய குழப்பதை தீர்த்ததுக்கு மிக்க நன்றி பா நன்றாக புரிந்துவிட்டது LCD&PLASMA உள்ள வித்தியாசம்.

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

டெக்னாலஜி வித்தியாசம் தான்... அதனால் மேட்ச் போன்றவை பார்க்கும்போது ரொம்ப கூர்ந்து கவனிச்சா சின்ன வித்தியாசம் தெரியும். அது பெருசா ஒன்னும் வித்தியாசம் தெரியாததால தான் நாங்க எதுக்கு 50000 செலவு, 40000ல ப்ளாஸ்மா போதும்னு முடிவு பண்ணிட்டோம். :) இதுக்கே நாங்க மேட்ச் பார்த்தோம் கடையில்... இரண்டு டிவியிலும் ஒரே நேரத்தில் ஒரே மேட்ச். பெருசா ஒன்னும் தெரியல. உண்மையில் கலர் விசயத்தில் தான் ப்ளாஸ்மா பிடித்து போனது. LCDயை விட ப்ளாஸ்மா ரொம்ப நல்லா இருந்தது பார்க்க.... கொஞ்சம் ரியலா இருந்தது.

குழப்பிக்காம போய் பாருங்க, ஒரே படத்தை எல்லா டிவியிலும் போட்டு காட்ட சொல்லி பாருங்க, எது மனசுக்கு பிடிக்குதோ அதை வாங்குங்க. நாங்க ஒரு தகவலும் தெரியாம கடையில் போய் அவனையே கேட்டு அப்பறம் பல சைட்ல தேடி அப்பறம் வாங்கினோம். உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. Samsung, sony எல்லாம் விலை அதிகமா வரும். மற்றபடி தரம் சூப்பர் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,

ரொம்ப தாங்க்ஸ் வனிதா. நீங்க கொடுத்திருக்கும் டிப்ஸ் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்